கிறிஸ்துவ பயங்கரவாதிகளை கண்டிக்காமல் எதிர்வினையை கண்டிக்கும் ஜெயலலிதாவுக்கு கடும் கண்டனைத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
ஒரிஸ்ஸா கிருஸ்துவர்கள் மீதான தாக்குதல்-ஜெ. கண்டனம்
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2008
சென்னை: ஒரிஸ்ஸாவில் கிருஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் மத வெறித் தாக்குதலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறி்க்கையில், ஒரிஸ்ஸாவில் கிருஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கந்தமால் மாவட்டத்தில் அவர்களையும் அவர்களது வழிபாட்டுத் தலங்களையும் தாக்கும் சமூக விரோத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறி வைத்துத் தாக்குவது என்பது நாட்டுக்கே அவமானம். நாட்டில் மத வெறியை யார் தூண்டினாலும் அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும்.
ஒரிஸ்ஸாவில் வன்முறைக்குப் பலியான குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட கிருஸ்துவ மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதோடு அவர்களுக்கும், அவர்களது உடமைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு உடனடியாக உரிய பாதுகாப்பை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
No comments:
Post a Comment