Thursday, August 21, 2008

காஷ்மீர் எல்லையில் பாக்.மீண்டும் அத்துமீறல்

காஷ்மீர் எல்லையில் பாக்.மீண்டும் அத்துமீறல்
ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008 ( 15:22 IST )


ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது.

நவ்ஷேரா பிரிவை குறி வைத்து பீரங்கியால் பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக சுட்டது.

ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பிரிவில் உள்ள ஜன்கார் பகுதியில் இன்று காலை 6.40 மணியிலிருந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் எஸ்.டி. கோஸ்வாமி ஜம்முவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலினால் இந்திய தரப்பில் உயிர்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு,இந்திய ராணுவம் பதில் தாக்குதல் ஏதும் நடத்தாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2003 ம் ஆண்டில் நவம்பர் மாதம் முதல் எல்லைப் பகுதியில் போர் நிறுத்தத்தை கடை பிடிக்கும் ஒப்பந்தம்,இரு நாடுகளுக்கும் இடையே அமலில் உள்ளது.ஆயினும் அதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)

No comments: