Monday, August 18, 2008
சுதந்திரதினத்தையொட்டி சென்னை கோவில்களில் சமபந்தி விருந்தில் ஏராளமான திமுகவினர்
சுதந்திரதினத்தையொட்டி சென்னை கோவில்களில் சமபந்தி விருந்து
மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
சென்னை, ஆக.16-
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பக்தர்களுடன் அமைச்சர் ஸ்டாலின்
இந்தியாவின் 61-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்பில் அனைத்து கோவில்களிலும் சமபந்தி விருந்து, சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவில், ராயப்பேட்டை சித்தி-புத்தி விநாயகர் கோவில், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேஸ்வர கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பக்தர்களுடன் அமர்ந்து அறுசுவை உணவருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பிச்சாண்டி, துணை கமிஷனர் சுந்தரம், உதவி கமிஷனர் முரளி, தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடபழனி கோவில்
பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் மதியம் 12 மணியளவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் பொ.ஜெயராமன் செய்திருந்தார்.
சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார். ஜாதி, மத வேறுபாடற்ற சமுதாயத்தை படைக்க வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவில் செயல் அதிகாரி பி.வாசுநாதன், அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், அறங்காவலர்கள் கண்ணப்பன், எம்.பழனி, கண்மணி சீனிவாசன், மணிமாறன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கங்காதீஸ்வரர் கோவில்
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் மதிவாணன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்துக்கு அமைச்சர் சுரேஷ்ராஜன், திருவான்மிïர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற விருந்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். சேப்பாக்கம் திருவேட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார்.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் நடந்த பொதுவிருந்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தம்புச்செட்டித்தெருவில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் விருந்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்து கொண்டார்.
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சபாநாயகர் ஆவுடையப்பன் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அறங்காவலர் குழுத் தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார், அறங்காவலர் விஜயாதாயன்பன், பி.ஆர்.தமிழரசன், வைத்தியநாத முதலியார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஸ்டாலின் வாழ்க!
ஸ்டாலினை பெற்ற கலைஞர் வாழ்க
Post a Comment