Monday, August 25, 2008

திருவதிகையில் 10 குடும்பத்தினர் இந்துமதத்தில் இணைந்தனர். (இந்துமக்கள் கட்சி)


பண்ருட்டி: பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாய் மதம்
திரும்பும் விழாவில் 10 குடும்பத்தினர் இந்து மதத்தில் சேர்ந்தனர். இந்து
மக்கள் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர்
கோவிலில் கிருஸ்துவ, முஸ்லிம் மதத்தினர் தாய்ச்சமயம் மதம் திரும்பும்
விழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை
கோவில் அலுவலர்கள் விழாவிற்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து கடந்த
18ம் தேதி வீரட்டானேஸ்வரர் கோவில் முன் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம்
செய்தனர்.

இந்நிலையில், நேற்று பண்ருட்டி ராமசாமி செட்டியார் திருமண மண்டபத்தில்
தாய் மதம் திரும்பும் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு இந்து மக்கள்
கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். விழாவை
முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வெங்கடசர்மா நடத்தினார்.
தாய்மதம் திரும்புவர்களுக்கு சடங்கு செய்வதற்காக கங்கை தீர்த்தம், காவிரி
தீர்த்தம், கெடில நதி தீர்த்தம் ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர்
தாய்ச்சமயம் திரும்பியவர்களுக்குப் பெயர் சூட்டப்பட்டு குங்குமம், மாலை
அணிவித்து இணைந்தனர்.


இதில் திருக்கோவிலூர் மணம்பூண்டியைச் சேர்ந்த ஐசக் என்பவருக்கு சுந்தரர்
எனவும், அலெக்ஸ்பாண்டியன் என்பவருக்கு சிவராமபாண்டியன் எனவும்,
வினோத்குமார் என்பவருக்கு வினோத் எனவும், சாந்தி என்பவருக்கு சாந்தி
எனவும், சந்தானம் என்பவருக்கு சந்தானம், மாணிக்கவாசகம் என்பவருக்கு
மணிவாசகர் எனவும் பெயர் சூட்டப்பட்டது. விருத்தாசலம் ஆலடி ரோடு,
எருமானூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணிக்கு திருநாவுக்கரசு எனவும், அந்தோணி
ஜெகன்நாதன் என்பவருக்கு திருஞானசம்பந்தம் எனவும், சந்தோஷ்ஆரோக்கியராஜ்
என்பவருக்கு மாணிக்கவாசகர் எனவும், எழிலரசி என்பவருக்கு திலகவதியார்
எனவும் பெயர் சூட்டினார். தாய்மதம் திரும்பிய அனைவரும் பின்னர் திருவதிகை
வீரட்டானேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

நன்றி தினமலர்

No comments: