'1 லட்சம் தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதம் திரும்ப முடிவு'
திங்கள்கிழமை, ஆகஸ்ட் 25, 2008
பண்ருட்டி: இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தலித் கிறிஸ்தவர்கள் ஒரு லட்சம் பேர் மீண்டும் இந்து மதத்தில் இணைய தயாராக உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் பண்ருட்டியில் தாய் சமயம் திரும்பும் விழா நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்தார். திருக்கைலாய பரம்பரை பேரூர் கிரவை செங்கோல் ஆதீனம், தாய் சமயம் திரும்புவர்களுக்கு புனித நீர் ஊற்றி வரவேற்றார்.
பின்னர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிறிஸ்துவ மதத்திற்கும், முஸ்லீம் மதத்திற்கு மாற எந்த வித தடையும் இல்லை. ஆனால் அந்த மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு மாற இந்து சமய அறநிலையத் துறையும், காவல் துறையும் அனுமதி மறுக்கின்றன.
புதுச்சேரியில் கிறிஸ்துவ மதத்தில் தலித் மக்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும், சலுகைகளும் கிடைக்கவில்லை என்பதால் ஒரு லட்சம் பேர் தாய் மதம் திரும்ப தயாராக உள்ளனர்.
அரசு இவர்களுக்கு உரிய உதவி செய்வதுடன், அவர்கள் தாய் மதம் திரும்ப உதவ வேண்டும் என்றார்.
3 comments:
வாழ்க வளமுடன்
அர்ஜுன் சம்பத்துக்கு நன்றிகள் பல
கருத்துக்கு நன்றிகள்
Post a Comment