Thursday, August 09, 2007

டாடா ஆலையை பாமக எதிர்ப்பதற்கு "பிரித்து கொடுக்காததுதான்" காரணம்


தி.மு.க., ஆதரவு கூட்டணி கட்சிகள் டாடா ஆலையை எதிர்ப்பது ஏன்? * விஜயகாந்த் "திடுக்'


திருநெல்வேலி :""நெல்லை, துõத்துக்குடி மாவட்டங்களில் டைட்டானியம் ஆலை அமைக்கும் பிரச்னையில் தி.மு.க., கூட்டணி கட்சியில் உள்ளவர்களே ஒவ்வொரு விதமாக பேசுவதற்கு "பிரித்து' கொடுக்காதது தான் காரணம்'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.




விஜயகாந்த் நேற்று சாத்தான்குளம், குட்டம் ஆகிய இடங்களில் டாடா ஆலை குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: டாடா ஆலை விஷயத்தில் நிறைய அரசியல் விளையாடுகிறது. ஆள் ஆளுக்கு அரசியல் பேசுவதால் நிலத்தை தரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் மக்கள் குழம்புகிறார்கள்.

டாடா ஆலை வந்தால் அந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை அரசு ஆரம்பத்திலேயே கூறியிருக்க வேண்டும். அங்கு டாடா, பிர்லா, வைகுண்டராஜன் என யார் வேண்டுமானாலும் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம். ஆனால், மக்கள் வாழ்க்கை தரம் உயரவேண்டும். இந்த பிரச்னையில் தி.மு.க., கூட்டணி கட்சியில் உள்ளவர்களே ஒவ்வொரு விதமாக பேசுவதற்கு "பிரித்து' கொடுக்காதது தான் காரணம்.தனியார் ஆலைக்காக நிலத்தை ஏக்கருக்கு வெறும் ஆறாயிரம், ஏழாயிரம் ரூபாய்க்கு அரசு கையகப்படுத்தி தரக்கூடாது. இன்றைய மதிப்பை விடவும் நிலத்திற்கு அதிக விலை எதிர்பார்க்கிறார்கள். நிலம் தருபவருக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரவேண்டும். மூலதனத்தில் பங்குதாரராக நியமிக்க வேண்டும். அங்கு டவுன்ஷிப் ஏற்படுத்தி வீடு, மருத்துவமனை, பள்ளிக்கூடம் என அடிப்படை வசதிகளை செய்துதந்தால் நிலம் தரும் மக்களின் மனநிலை மாறக்கூடும். சிலர் நாங்களே மணலை அள்ளி கூட்டுறவு மூலம் சப்ளை செய்கிறோம் எனவும் மக்கள் கருத்து கூறுகிறார்கள். இதையெல்லாம் அரசு முன்பே தெரிவித்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் தொழிற்சாலை வரக்கூடாது என தெரிவித்தவர்கள் தற்போது நிலத்திற்கு அதிகவிலை தந்தால் தருவதாக கூறுகிறார்கள். எனவே, என்னவெல்லாம் செய்யப்போகிறோம் என்பதை அரசும், டாடாவும் ஒப்பந்தம் போட்டு மக்களுக்கு உறுதிமொழியாக தெரிவிக்க வேண்டும். தி.மு.க.,விற்கும் அ.தி.மு.க.,விற்கும் சண்டையில் மக்கள் பாதிக்கக் கூடாது. தேவைப்பட்டால் மக்கள் சார்பில் டாடாவுடன் பேச நான் தயார். டைட்டானியம் தொழிற்சாலையை அரசே நடத்த வேண்டும் என்று பா.ம.க., கூறுகிறது. போக்குவரத்தை அரசுதானே நடத்துகிறது. ஆனால், நஷ்டம்தானே ஏற்படுகிறது. மணலில் கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால் பலன் இல்லை. ஆட்சி மாறினால்தான் மணல் கொள்ளை தடுக்கப்படும். இந்த பிரச்னை குறித்து மக்கள் புரட்சி வெடிக்கும் இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

No comments: