மதானி, 'இந்தியாவின் ஒசாமா': பாஜக கடும் தாக்கு
ஆகஸ்ட் 03, 2007
டெல்லி: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள மதானி இந்தியாவின் ஒசாமா பின்ல்டன் என பாஜக கடுமையாக தாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் கேரள ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானி விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
இந்தியாவின் ஒசாமா:
இந் நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தா அப்பாஸ் நாக்வி டெல்லியில் கூறுகையில்,
கோவை குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமான மதானியை வெளியே விட்டது நீதித்துறை செய்த பெரிய தவறு. போலீஸ் தரப்பில் அவர் மீது ஏகப்பட்ட ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டும், கோர்ட் அதை ஏற்றுக் கொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு தீவிரவாத தலைவன் ஒசாமா போல் இந்தியாவுக்கு ஒசாமாவாக இருப்பவர் மதானி.
அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
நன்றி தட்ஸ்டமில்.காம்
No comments:
Post a Comment