நன்றி தட்ஸ்டமில்
திருப்பதி கோவிலில் அரைகுறை உடைக்கு தடை
ஆகஸ்ட் 04, 2007
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பெண்கள் அரைகுறை உடை அணிந்து வர கோவில் தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
சில பெண்கள் கவர்ச்சியான உடைகள் அணிந்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கோவிலுக்கு வரும் பெண்கள் அரைகுறை உடைகள் அணிந்து வருவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் ஜி.பால ராமையா கூறுகையில்,
வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பெண்களில் சிலர் கவர்ச்சியாக உடை அணிந்து வருவது வருத்தத்திற்குரியது. பொது இடங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இதை உணர்ந்து பக்தர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
திருப்பதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள் உடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
No comments:
Post a Comment