ஆகஸ்ட் 12ம் தேதி லண்டன் முருகன் கோயில் தேர்த்திருவிழா
லண்டன்: லண்டன் ஸ்ரீ முருகன் கோயில் தேர்த்திரவிழா ஆகஸ்ட் 12ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பிரிட்டனிலிருந்து மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலுமிருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு லண்டனின் முக்கிய வீதிகள் வழியே கோயிலின் தலைமை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க. உள்ளூர் நாதஸ்வர வித்துவான்கள் நாதஸ்வரம் இசைக்க இந்த தேரோட்டம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும் அன்று சிறப்பு பூஜைகளும் நடைபெறும்
நன்றி தினமலர்
No comments:
Post a Comment