Saturday, August 11, 2007

தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்பட்டதற்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டனம்

தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்பட்டதற்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டனம்

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

சென்னை, ஆக. 11: வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தஸ்லிமா நஸ்ரீன் தனது "லஜ்ஜா' நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்தபோது மஸ்ஜித் இத்திகாதுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்திய மண்ணில் ஒரு வங்கதேசப் படைப்பாளி தாக்கப்பட்டது கண்டிக்கப்படவேண்டிய நிகழ்வாகும்.

கருத்துச் சுதந்திரத்தின் மீதும் படைப்பு சுதந்திரத்தின் மீதும் தொடுக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதலாகும். அவருடைய படைப்பில் கருத்து மாறுபாடோ விமர்சனமோ இருந்தால் அதை கருத்து ரீதியாகச் சந்திக்க வேண்டும்.

கருத்தை கருத்தால் சந்திக்கும் ஞானமும் திராணியும் அற்றவர்கள்தான் இவ்வாறு படைப்பாளியைத் தாக்குவார்கள்.

இந்த வன்செயலைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சரியாக தண்டிக்கப்பட வேண்டும்.

படைப்பாளிகளும் ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்.

செய்தி தினமணி

No comments: