குட்ரோச்சி அர்ஜென்டினாவிலிருந்து இத்தாலி தப்பினார்
பியூனஸ் ஏர்ஸ் (அர்ஜென்டினா): போபர்ஸ் வழக்கின் முக்கியக் குற்றவாளியான குட்ரோச்சி அர்ஜென்டினாவிலின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, இத்தாலிக்கு எஸ்கேப் ஆகியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் வழக்கில் ஒன்று போபர்ஸ் ஆயுத பேர ஊழல். இவ்வழக்கில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவ் ஊழலில் மிக முக்கியக் குற்றவாளி இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல அதிபரும், காங்கிரஸ் தலைவி சோனியாவின் நெருங்கிய உறவினருமான குட்ரோச்சி. இவரைப் பிடித்தால் இவ்வழக்கின் பல முக்கியத் தகவல்கள் வெளியாகும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக குட்ரோச்சியைப் பிடிப்பதில் சி.பி.ஐ., கோட்டை விட்டு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் குட்ரோச்சி அர்ஜென்டினா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சிகப்பு அட்டையின் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் இவரைச் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரித்த போது, இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. குட்ரோச்சி கைது செய்யப்பட்ட விவகாரம் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்தகவலை 20 நாட்களுக்குப் பின் தான் மத்திய அரசு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து குட்ரோச்சியை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் முயற்சியில் சி.பி.ஐ., ஈடுபட்டது. இதற்காக அர்ஜெண்டினா நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால் அந்நாட்டு நீதிமன்றம் குட்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனால் அவரை நாடு கடத்தும் முயற்சியில் சி.பி.ஐ., தோல்வி அடைந்தது. சி.பி.ஐ.,யின் இத்தோல்வி முதல் முறையல்ல. கடந்த பா.ஜ., ஆட்சியில் இதேபோன்று சிங்கப்பூர் அரசால் கைது செய்யப்பட்ட குட்ரோச்சியை நாடு கடத்தும் முயற்சியில் சி.பி.ஐ., தோல்வியே அடைந்தது.
தற்போது அர்ஜெண்டினா போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குட்ரோச்சி அவரது சொந்த நாடான இத்தாலி திரும்ப அந்நாடு அனுமதித்துள்ளது. எனவே அவரிடம் இருந்து பறிமுதல் செய்த பாஸ்போர்ட் மற்றும் விசாவை குட்ரோச்சியிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து குட்ரோச்சி தாயகமான இத்தாலி தப்பிச் சென்றுள்ளார்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment