இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இந்நாட்டு மக்கள்தான்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசனைப் பொருத்தவரை எல்லோருக்கும் நல்லவர் என்ற பெயரெடுத்தவர். தமிழக அரசியலில் விருப்பு வெறுப்பு, தனிப்பட்ட காழ்ப்புணர்வு என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் அனைவருடனும் நல்லுறவைப் பராமரிக்கும் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர்.
முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்து உயர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் பதவிவரை வகித்த இல. கணேசன் ஒரு நல்ல தமிழ்க் கவிஞர், பாடகர், பேச்சாளர் என்பதும் இவரது தனிச் சிறப்பு.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைமையிடமான கமலாலயத்தில், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுக்கு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் அளித்த பேட்டி...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது, பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா?
பலமாக மாறும் என்கிற நம்பிக்கையில்தான் நாங்கள் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தோம். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அல்லாத மாற்று ஒன்றை மக்கள் விரும்புகிறார்கள் என்பதால் எடுத்த முடிவுதான் அது. குறைந்தது 10 சதவீதத்தினர் இப்படியொரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது எங்களது கணிப்பு.
நாங்கள் எடுத்த முடிவைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. நாங்கள்தான் இந்த இரண்டு மாநிலக் கட்சிகளுக்கும் ஒரு சரியான மாற்று என்று எங்களை அடையாளம் காட்டிக் கொள்ளத் தவறிவிட்டோம். அந்த வாய்ப்பை நடிகர் விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டுவிட்டார். பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் அந்த 10 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
தமிழகத்தைப் பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி ஒரு தீண்டத்தகாத கட்சியாக அல்லவா காட்சி அளிக்கிறது?
இது மற்ற கட்சியினரால் அவர்களது வசதிக்காக அவ்வப்போது சொல்லப்படுகிற வார்த்தை. தமிழகத்தில் இருக்கும் கட்சிகளில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளுமே எங்கள் மேடையில் ஏறி, பாரதிய ஜனதா கட்சி ஒரு தீண்டத்தகாத கட்சி அல்ல என்று பேசியவர்கள்தான். நீங்கள் குறிப்பிடும் அந்தத் தீட்டை திமுகவும், அதிமுகவும் எப்போதோ போக்கிவிட்டன. இவர்கள் எல்லோரும் எங்களை ஆரத் தழுவியவர்கள்தான். சித்தாந்தரீதியாக கம்யூனிஸ்ட்டுகளும், அரசியல்ரீதியாகக் காங்கிரஸ் கட்சியும்தான் எங்கள் எதிரிகள். மற்ற அனைவருமே எங்களைப் பொருத்தவரை தீண்டத்தகாதவர்கள் அல்லர்.
அடுத்த தேர்தலில் உங்களது இயற்கையான கூட்டணிக் கட்சி என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?
சமீபகால அரசியலில் இயற்கையான கூட்டணி என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லை என்று நினைக்கிறேன். திமுக மற்றும் அதிமுக உள்பட எந்தவொரு கட்சியும் அடுத்த தேர்தலில் இன்னாருடன்தான் கூட்டு வைத்துக் கொள்ளப் போகிறோம் என்று சொல்லும் நிலையில் இல்லாதபோது, நாங்கள் மட்டும் இந்த விஷயத்தில் முன்கூட்டியே தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்று நினைக்கிறீர்கள்?
நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் என்பதுதான் அடிப்படையான விஷயம். வாஜ்பாய் தலைமையிலான அல்லது பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அல்லது மன்மோகன் சிங் தலைமையிலான அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி என்கிற இருதுருவச் சேர்க்கை ஏற்கெனவே ஏற்பட்டிருக்கிறது. மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால், முயற்சிக்கலாம். வாய்ப்பில்லை.
மூன்றாவது அணி அமையாத நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் எப்படி அமையும் என்று நினைக்கிறீர்கள்?
காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான இருதுருவச் சேர்க்கை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் ஆட்சியை அமைக்க முடியும். அடுத்தாற்போல, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதற்கான எல்லா வேலைகளையும் மன்மோகன் சிங்கும் அவரது அரசும் செய்து முடித்துவிட்டது. இனி அடுத்தது பாரதீய ஜனதாதான் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.
ஓர் ஆட்சி என்னதான் நல்லது செய்திருந்தாலும், எவ்வளவுதான் செயலற்றதாக இருந்தாலும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது அவ்வப்போது அமைகின்ற கூட்டணிதானே தவிர சாதனைகள் அல்ல என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?
கடந்த தேர்தலில் எங்களது அரசு தோல்வி அடைந்த பிறகு சாதனைகளால் பயனில்லை என்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். எங்களது சாதனைகளை அனைவருமே ஏற்றுக் கொள்கிறார்கள். கடந்த தேர்தலில் எங்களது அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டதற்குக் காரணம் தமிழகம் மற்றும் ஆந்திரத்தின் முடிவுகள்தான். எங்களுடன் கூட்டணியில் இருந்து, எங்களது ஆட்சியில் பங்கும் பெற்று, கடைசி நேரத்தில் எங்களது கூட்டணியில் இருந்து வெளியே வந்து எங்களது ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்த திமுகவின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள்.
ஆனால், மக்கள் மத்தியில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான போட்டி என்கிற தோற்றம் ஏற்பட்டதே தவிர, வாஜ்பாயின் தலைமை வேண்டுமா? வேண்டாமா? என்கிற கேள்வி பலமாக எழவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் மீதும், ஆந்திரத்தில் ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் மீதும் இருந்த அதிருப்தி எங்களது வெற்றியைப் பாதித்தது என்பதுதான் உண்மை. மாநில அரசின் செயல்பாடுகளை வைத்து நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சில சமயம் தீர்மானிக்கப்படுவதால் நிகழும் தவறுகள் தவிர்க்க முடியாதவை.
அப்படியானால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா அணியின் படுதோல்விக்கு அதிமுக மீதிருந்த அதிருப்திதான் காரணம் என்கிறீர்களா?
தோல்வி அடைந்த பிறகு கூட்டணிக் கட்சிகளைப் பழிப்பது என்பது நேர்மையான அரசியலாகாது. இதெல்லாம் தெரிந்துதானே முடிவெடுத்தோம். தேர்தலுக்கு முன் அதையெல்லாம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். எங்கள் அணியின் தோல்விக்கு அதிமுக மீதிருந்த அதிருப்தி காரணமாக இருந்திருந்தாலும் அதை நான் சொல்ல விரும்பவில்லை.
அடுத்த தேர்தலில் இப்போதிருக்கும் கூட்டணி அமைப்பு மாறும் என்று கருதுகிறீர்களா? அப்படி மாறும்போது பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களில் உங்களுக்கு எதிரான சூழ்நிலை ஏன் ஏற்படக்கூடாது?
பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் எல்லாம் எச்சரிக்கையாகவே செயல்படுகிறார்கள். மத்திய அரசின் கணக்கின்படியே கூட, மைய அரசின் வளர்ச்சித் திட்டங்களை முழுமையாகவும் முறையாகவும் அமல்படுத்துகின்ற மாநிலங்களில் முதன்மையாக இருப்பது பாஜக ஆளும் குஜராத் மாநிலம்தான். அந்தப் பட்டியலில் முதல் 10 மாநிலங்களில் பாஜக ஆட்சிபுரியும் மாநிலங்கள் இருக்கின்றன. அதனால் பாஜகவுக்கு எதிரான சூழ்நிலை நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏற்படாது என்று நம்புகிறோம்.
அப்படியானால் கூட்டணி ஆட்சிதான் இனிமேல் இந்தியாவில் வருங்கால அரசியலாக இருக்கப் போகிறது என்று கருதுகிறீர்கள். அப்படித்தானே...?
ஒரு கட்சி ஆட்சியில்தான் முன்னேற்றம் விரைவாக ஏற்படும் என்பதுதான் எங்கள் கருத்து. ஆனால் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் இப்போதைக்கு இல்லை என்ற உண்மையையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்த நிலையில், ஒரு பெரிய கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதில் தவறில்லை.
இன்றைய சூழ்நிலையில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு செல்வாக்கு இல்லாத நிலையில், இதுபோன்ற இருதுருவச் சேர்க்கை ஒன்றுதான் ஒரு ஸ்திரமான மத்திய அரசு அமைவதற்கு உதவும். எல்லா தரப்பு மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஆட்சியாக அந்த அரசு அமையவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எங்களது கருத்துப்படி வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட ஒரு கட்சி ஆட்சி முறைதான் சிறந்தது.
மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
தேசியக் கட்சிகள் மாநில உணர்வுகளுக்கு மரியாதை அளிக்காத காரணத்தால் மாநிலக் கட்சிகள் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் பெருகி வருகின்றன. இது தவிர்க்க முடியாதது என்று சொல்லிவிட முடியாது. தேசியக் கட்சியாக இருந்தாலும் பிராந்திய உணர்வுகளை அந்தக் கட்சிகள் பிரதிபலிக்க வேண்டும். மாநில உணர்வுகளுக்குக் குரல் கொடுக்கும், மரியாதை அளிக்கும் தேசியக் கட்சிகள் இருக்குமானால் இது போன்ற பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சி எதிர்காலத்தில் குறையத் தொடங்கும்.
அப்படியொரு நிலைமை எப்படி ஏற்படும்? காவிரிப் பிரச்னையையே எடுத்துக் கொள்ளுங்கள். தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் எந்த மாநிலத்துக்காகப் பேசமுடியும்?
காங்கிரஸýம், பாஜகவும் ஆட்சியில் இருந்தபோது எத்தகைய முடிவும் எடுக்க முடியவில்லையே?
நதிநீர், இடஒதுக்கீடு போன்ற உணர்வுபூர்வமான பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் தீர்வு காணவே முடியாது. நீதிமன்றங்கள் அல்லது நடுவர் மன்றங்கள்தான் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். தேர்தல் ஆணையம் போல நதிநீர் ஆணையம் அமைப்பது தான் காவிரிப் பிரச்னைக்கு ஒரே தீர்வு. தமிழகத்திற்குத் தண்ணீர் தந்தது ஆள்பவர்கள் அல்ல, ஆண்டவன்தான்.
காங்கிரஸýக்கும் பாஜகவுக்கும் வேற்றுமை இல்லாதது போல் இருக்கிறதே? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முந்தைய ஆட்சியில் எதைச் செய்தாலும் அதை மாற்றுவதுதான் சரி என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுவது பொருத்தமில்லாதது. தாராளமயமாக்கல் என்கிற கொள்கையை பாஜகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலில் நாங்கள் சில வரன்முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சொல்கிறோம். சொல்லப்போனால் கொள்கையை மாற்றிக் கொண்டது காங்கிரஸ் கட்சிதான். சோஷலிசத்தை வலியுறுத்திய ஜவாஹர்லால் நேரு படத்தை வைத்துக் கொண்டே, அவர் சொன்னதற்கு நேர் எதிரான கொள்கையை அறிவித்துத் தீவிரமாகச் செயல்படுத்துகிறார்கள். பொருளாதாரக் கொள்கைகளில் ஒற்றுமை இருக்கிறதே தவிர மற்ற விஷயங்களில் எங்களுக்கும் காங்கிரஸýக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. இந்தத் தேசத்தின் அடையாளத் தன்மை என்ன என்பதில் பெரிய வேறுபாடு எங்களுக்கும் அவர்களுக்கும் உண்டு.
ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த பிறகும் பாஜக ஓர் இந்துத்வா கட்சி என்ற பெயர் இருக்கிறதே தவிர எல்லோருக்கும் பொதுவான கட்சி என்ற பெயர் வரவில்லையே. ஏன்?
இந்துத்வா என்பது வேறு, இந்துக்களின் கட்சி என்பது வேறு. உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்தியாவுக்கும் அப்படிப்பட்ட தனித்தன்மை உண்டு. இது வழிவழியாகத் தொன்றுதொட்டு இருந்து வரும் தனித்தன்மை. இந்தத் தனித்தன்மைதான் இந்தத் தேசத்தின் தேசியத் தன்மைக்கு அடிப்படை. அதுதான் ஆங்கிலத்தில் ஹிந்துயிஸம் ( ஏண்ய்க்ன்ண்ள்ம்), அதாவது இந்துத்வா.
இந்த இந்துத்வா இந்துக்களை மட்டுமே குறிக்கும், உள்ளடக்கிய விஷயம் என்பதுதான் பாஜக இதர கட்சிகளின் குற்றச்சாட்டு.....
இங்கே வாழும் இஸ்லாமியர்களும் சரி, கிறிஸ்தவர்களும் சரி அடிப்படையில் இந்த நாட்டு மக்கள்தான். அந்நிய நாட்டில் இருந்து வந்த அந்த மதங்களால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருந்தாலும் அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். இந்தக் கலாசாரத்தின், பண்பாட்டின் அத்தனை அம்சங்களும் அவர்களது ரத்தத்தில் ஊறிய விஷயங்கள். அவர்கள் மதத்தால் வேறுபட்டிருக்கிறார்களே தவிர தேசிய அளவில், கலாசார மற்றும் பண்பாட்டுரீதியாக இந்திய உணர்வுகளில் ஒன்றியவர்கள். இந்துத்வா என்று நாங்கள் குறிப்பிடுவது இங்கே வாழும் அனைத்துத் தரப்பினருக்கும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடில்லாமல் உயிரோட்டமாக இருக்கும் அந்தக் கலாசார ஒற்றுமையைத்தான், உணர்வைத்தான்.
பிறகு ஏன் உங்கள் மீது மதரீதியிலான இந்துக் கட்சி என்கிற முத்திரை விழுந்திருக்கிறது?
அப்படியொரு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. எங்காவது கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டால் எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுகிறார்கள். பாஜகவும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிடும். அதே போல எங்காவது இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் எல்லா அரசியல் கட்சிகளையும் போல பாரதிய ஜனதா கட்சியும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும். ஆனால், எங்காவது இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மற்ற அரசியல் கட்சிகள் குரல் கொடுக்காது, ஆதரவு தெரிவிக்காது. பாரதீய ஜனதா கட்சி மட்டும் ஆதரவாக அறிக்கை வெளியிடும். அதனால்தான் எங்களுக்கு இந்த இந்துக் கட்சி என்கிற முத்திரை. சொல்லப் போனால், உண்மையான மதச்சார்பற்ற தன்மையை நாங்கள் பின்பற்றுவதால் எங்களுக்குத் தரப்படும் பட்டம்தான் இந்த இந்துக்களின் கட்சி என்கிற முத்திரை.
அதே போல, பாரதிய ஜனதா கட்சி என்பது உயர்ஜாதியினரின் கட்சி என்கிற கருத்தும் பொதுவாக இருக்கிறதே, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பாரதிய ஜனதா கட்சியை எல்லாத்தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, உயர்ஜாதி என்று நீங்கள் குறிப்பிடும் சமூகத்தினர் எங்கள் கட்சியில் குறைவாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இது தவறான குற்றச்சாட்டு.
அயோத்திப் பிரச்னை பற்றிய உங்களது இப்போதைய கருத்து என்ன?
அயோத்திப் பிரச்னை என்பது தேசியப் பிரச்னை. பாபர் என்கிற ஆக்கிரமிப்பாளர், தான் இந்த நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக அயோத்தியில் விக்ரமாதித்தன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயத்தை இடித்துக் கட்டியதுதான் பாபர் மசூதி. அடிமைப்படுத்தியவனுக்கு அது வெற்றிச் சின்னம் என்றால், அடிமைப்பட்ட நமக்கு அது அவமானச் சின்னம். சுதந்திரம் அடைந்த மறுநாளே அது இடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இல்லையா?
நான் அப்படியெல்லாம் பண்புடன் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. பாபர் மசூதி இப்படிதான் இடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்பது உண்மை. ஆனால் அந்த மசூதி அகற்றவோ, மாற்றவோபடவேண்டும் என்று நிச்சயமாக விரும்பினேன். நம்மை அடக்கி ஆளவந்த பாபருக்கு மசூதியோ, நினைவுச் சின்னமோ இருப்பது ஜாலியன்வாலாபாகில் ஜெனரல் டயருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதற்குச் சமம். பாபர் அல்ல பிரச்னை. பிரச்னை அது மசூதி என்பதால்...?
அது மசூதியாக இல்லையே? தொழுகை நடந்தால்தானே மசூதி? ஆலயம்தான் மசூதியாக மாற்றப்பட்டது என்பது மட்டுமல்ல, ஒரு நாள்கூட அங்கே தொழுகை நடைபெற்றதும் இல்லை. மினார் இல்லாத ஒன்று எப்படி மசூதியாக முடியும்?
ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் உங்களால் ஏன் இந்த அயோத்தி பிரச்னைக்கு ஒரு தீர்வு காண முடியவில்லை?
ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதானே தவிர பாரதிய ஜனதா கட்சி ஆட்சியல்ல. எங்களுக்குத் தனி மெஜாரிட்டி இல்லாதிருந்ததும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாதிருந்ததும்தான் அயோத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எங்களால் இயலாமல் போனதற்குக் காரணம். எங்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, எங்களது செயல் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிச்சயம் செயல்படுத்தவும் செய்வோம். அயோத்தி பிரச்னைக்கு இறுதி முடிவு எங்களால்தான் ஏற்படும். அது சுமுகமான முடிவாகவும் இருக்கும்.
கடந்த மூன்றரை வருட மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு பற்றி உங்களது கருத்து என்ன?
செயல்பாடற்ற அரசு இது. வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவின் கெüரவம் உலக அரங்கில் உயர்ந்தது. இப்போது மன்மோகன் சிங் அரசு இந்த நாட்டின் தன்மானத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி அமெரிக்காவை அதிர்ந்துபோகச் செய்த எங்களது அரசுடன் அமெரிக்காவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் இந்த அரசை ஒப்பிடும்போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்திருக்கிறது. வளர்ச்சி 9 சதவிகிதத்தை முதல்முறையாக எட்டியிருக்கிறது. இவையெல்லாம் உங்கள் பார்வையில் படுவதே இல்லையே ஏன்?
அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்திருக்கிறது. சரி. வளர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது. சரி. ஆனால், தெருவோரம் வசிக்கும் ஏழையின் விழியில் வெளிச்சம் ஏற்படவில்லையே, ஏன்? விலைவாசி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறதே, ஏன்? அடுத்தவனிடமிருந்து கடனை வாங்கித் தன்னிடம் வைத்துக் கொண்டு நானும் பணக்காரன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது வளர்ச்சியல்ல. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை மன்மோகன் சிங் காலத்தில்தான் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக ஆட்சியைப் பற்றி உங்களது அபிப்பிராயம்தான் என்ன?
தமிழகத்தில் ஆட்சி எங்கே நடக்கிறது? திமுக எதைச் செய்தாலும் அதிமுக விமர்சிக்கிறது. அதிமுக எதை விமர்சித்தாலும், உனது ஆட்சிக் காலத்தில் எப்படி இருந்தது என்று திமுக பதிலளிக்கிறது. இதை மக்கள் தினசரி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தரம் தாழ்ந்த அரசியல் நடந்து வருகிறது. இலவசங்களை மட்டுமே நம்பி ஆட்சியில் இருக்கும் அரசு இது. இலவசங்களை அதிகரிக்க டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்க நினைக்கிறார்கள். கரும்புத் தொழிற்சாலைகளை எத்தனால் தயாரிக்காமல் மதுபானம் தயாரிக்க பயன்படும் "மொலாசஸ்' உற்பத்தியைப் பெருக்கச் சொல்கிறார்கள். எத்தனால் தயாரித்தால் கரும்பு விவசாயிக்கு அதிகம் பணம் கிடைக்கும். "மொலாசஸ்' தயாரித்தால் அவனுக்கு என்ன பயன்?
கடந்த ஆட்சியில் நடந்தது தொடர்கிறது. அவ்வளவுதானே? அதற்கு இந்த அரசை மட்டும் எப்படிக் குறை சொல்ல முடியும்?
வன்முறை அதிகரித்து வருகிறது. அதுவும், ஆளும் கட்சியினரே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விசித்திரம். அதுவும் அதிநவீன வெடிகுண்டு சக்திகளைப் பயன்படுத்தித் தாக்கிக் கொள்கிறார்கள். தேர்தல் என்பதே அச்சத்தை ஏற்படுத்தும் விஷயமாகி விட்டது. பயங்கரவாதிகள் நிறைந்திருக்கும் ஜம்மு காஷ்மீரில் வெற்றிகரமாகத் தேர்தல் நடத்த முடிந்த தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை நடத்த முடியாது என்று கடிதம் கொடுத்த வெட்கக்கேடு வேறு எங்காவது நடக்குமா? இந்த ஓராண்டு ஆட்சியில் மிகப்பெரிய சாதனை வன்முறைகள்தான். நேபாளத்திலிருந்து நெல்லூர் வரை என்றுதான் மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இப்போதோ நக்ஸல் இயக்கங்கள் உத்தமபாளையத்துக்கும் சின்னமனூருக்கும் வந்திருக்கிறது என்றால் என்னதான் அர்த்தம்? வீரப்பனை அடக்கிய விஜயகுமாரை அனுப்ப வேண்டிய அளவுக்கு தீவிரத் தன்மை இருக்கிறது என்று அரசே ஒப்புக் கொள்கிறது. பெருமைப்படும்படியாக இந்த ஓராண்டில் இந்த அரசு எந்தச் சாதனையும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.
இந்த நிலைமைக்கு என்னதான் மாற்று?
வெற்றி பெறும் அணிக்கு வாக்களிப்பது என்கிற மனப்பான்மை மாற வேண்டும். இது என்ன குதிரைப் பந்தயமா, வெற்றி பெறும் குதிரையில் பணம் கட்ட? வெற்றி பெற வேண்டிய கட்சி எது என்று தீர்மானித்து அதை வெற்றி பெறச் செய்வதுதான் இந்த நிலைமைக்கு மாற்றாக இருக்கும். அப்படிச் செய்யாத வரையில், திமுகவும் அதிமுகவும்தான் தமிழகத்தின் தலையெழுத்தாக இருக்கும்.
தேமுதிகவின் வளர்ச்சி உங்களது கட்சியைப் பாதித்திருக்கிறதா?
எங்களைப் பாதித்திருப்பதைவிட திமுகவை எதிர்க்கிற மற்ற கட்சிகளைப் பாதித்திருக்கிறது. பாரதிய ஜனதாக் கட்சியும், தேமுதிகவும் இணைந்து செயல்பட்டால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக ஒரு பலமான அணி உருவாவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதுதான் எனது கணிப்பு.
படங்கள்: கணேஷ்

No comments:
Post a Comment