எல்லா மதங்களும் ஒன்று, ஒரே நோக்கத்தைக் கொண்டவை. எல்லாம் ஒன்று தான் என்பதுபோன்ற வசனங்களை மீண்டும் மீண்டும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால், இது உண்மையா? நமது இந்து மதத்தைப் போன்றவைதானா மற்ற மதங்களும்? நமது நோக்கத்தைப் போன்றதுதானா மற்ற மதங்களின் குறிக்கோள்களும்? - இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் உரைநிகழ்த்தவுள்ளார் தொழுதகு தயானந்த சரஸ்வதி சுவாமிகள். நாள்: ஜூலை 20, 2008 (ஞாயிறு) மாலை 6:30 லிருந்து 8:30 வரை.
இடம்: நாரத கான சபா, டி.டி.கே ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை. சிறப்புப் பேச்சாளர்கள்: துக்ளக் ‘சோ’, பத்மா சுப்ரமணியம், எம்.என்.சுகுமார் நம்பியார். சென்னைவாழ் தமிழ் இந்துப் பெருமக்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நன்றி
தமிழ் இந்து.காம்
No comments:
Post a Comment