விழுப்புரம் ரயில் நிலையத்தில் கையெறி குண்டு கண்டுபிடிப்பு
வெள்ளிக்கிழமை, ஜூன் 20, 2008
நன்றி தட்ஸ்டமில்
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையத்தின் 6வது பிளாட்பார்மில், அகலப் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அப்பகுதியில், ரயில்வே போலீஸார் பயிற்சியில்ஈடுபட்டனர்.
அப்போது ரயில்வே டிராக்அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்களுக்கு மத்தியில் ஒரு கையெறி குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹேண்டி கிரனேட் எனப்படும் சக்தி வாய்ந்த கையெறி குண்டாகும் இது.
வெடிக்கும் தன்மையில் அதுஇருந்ததால் மிகுந்த பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதை பாதுகாப்பான இடத்தில் வைத்து செயலிழக்க வைப்பதற்காக காகுப்பத்தில் உள்ள ஆயுதப் படை பயிற்சி மைதானத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
அப்பகுதியில் இதேபோல மேலும் குண்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குண்டை இங்கு போட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment