Friday, June 20, 2008

கொடுத்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கிறிஸ்துவர்கள் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொடுத்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கிறிஸ்துவர்கள் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


அரசுக்கு எதிராக சர்ச்சுகளில் கறுப்பு கொடி-கிறிஸ்தவர்கள் எச்சரிக்கை
வெள்ளிக்கிழமை, ஜூன் 20, 2008


நாகர்கோவில்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு அளவு குறைந்து விட்டதாக கூறி தேவாலயங்களில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த அரசாணையில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்க்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சதவீதத்தை 3.5 சதவீதமாக குறைத்துள்ளதாக கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த அரசாணைக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து நாகர்கோவில் பத்மநாபபுரம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு 2000 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜார்ஜ் பொன்னையா தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசின் இந்த அரசாணை கிறிஸ்துவ மக்களின் உரிமையை பறிப்பதாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந் அரசு ஆணையை அரசு உடனே திருத்தம் செய்யாவிட்டால் தேவாலயங்கள், மற்றும் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments: