--
தண்ணீருக்காக சண்டை போட விரும்பவில்லை-துரைமுருகன்
சனிக்கிழமை, ஜூன் 7, 2008
தட்ஸ்டமில்.காம்
குலசேகரம்: விளவங்கோடு மக்களுக்கு நெய்யாற்றில் தண்ணீர் கொடுக்க கேரள அரசு தயங்குகிறது. தண்ணீருக்காக அண்டை மாநிலத்துடன் பகைமை கொள்ள தமிழக அரசு விரும்பவில்லை.
பேச்சிப்பாறை அணையின் நூற்றாண்டு விழா தமிழக சுற்றுலா மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக பொதுப் பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
இந்த மாவட்ட மக்கள் பேச்சிபாறை தண்ணீரை ராதாபுரத்திற்கு விட்டுக் கொடுக்கிறார்கள். விளவங்கோடு மக்களுக்கு நெய்யாற்றில் தண்ணீர் கொடுக்க கேரள அரசு தயங்குகிறது. தண்ணீருக்காக வேறு மாநிலத்துடன் பகைமை கொள்ள தமிழக அரசு விரும்பவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தை நீர் ஆதாரத்துறையில் நிறைவு பெற்ற மாவட்டமாக மாற்ற தாமிரபரணி ஆற்றில் தடுப்பு அணை கட்டி மேடான பகுதிக்கு பம்ப் செய்து தண்ணீர் சேகரிக்க முடியுமா என ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட கலெக்டர் குளங்களை தூர் வார நிதி ஓதுக்க வேண்டும் என கேட்டுள்ளார். கலெக்டர் முதலில் குழு அமைத்து, முதலில் தூர் வார வேண்டிய குளங்கள், இரண்டாவது, மூன்றாவது பகுதியாக தூர் வார வேண்டிய குளங்கள் பற்றி அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. எந்த அணையிலும் தூர் வார வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. பேச்சிபாறை அணையில் மட்டும்தான் கோரிக்கை வைக்கிறார்கள்.
வண்டல் நிறைந்து காணப்படுவதை மாற்றலாம் என்றால் வனத்துறை சம்மதிப்பது இல்லை. நான் ஒரு விவசாயி மகன். விவசாயிகளின் நிலைமை எனக்கு தெரியும்.
பேச்சிபாறை அணையை கட்டிய இஞ்சினியர் அலெக்ஸாண்டர் மிஞ்சினுக்கு பொதுப்பணிதுறை மூலம் சிலை வைக்கப்படும். பேச்சிபாறை அணையில் நடந்து சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.
மேலும் இங்குள்ள சுற்றுலா துறை அமைச்சரிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அணையின் கீழ் பகுதியில் பூங்காவை சீர் செய்ய ரூ. 1 கோடி ஓதுக்க வேண்டும் என்றார் துரைமுருகன்.
1 comment:
நச்சென்ற கேள்வி
நாக்கை புடுங்கிகிட்டு சாவணும் துரை முருகனும் திமுக காரனுங்களும்
Post a Comment