தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தாவூத் இப்ராஹிம் அமெரிக்க படைகளின் கையில் மாட்டாமல் இருப்பதற்காகத்தான் கைது என்ற பெயரில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ISI nabs Dawood, Shakeel and Memon in Karachi?
Islamabad, Aug 07: In a major breakthrough, it is being reported that Pakistan`s Inter-Services Intelligence has taken underworld don Dawood Ibrahim, Tiger Memon and Chotta Shakeel in their custody in Karachi.
According to sources the trio were picked up from their Pakistan-Afghanistan border hideout.
For some time now US has been mounting pressure on Pakistan to hand over Dawood and his aides. Just last week, a report suggested that US was demanding Pakistan to hand over Dawood to it for his alleged links to al-Qaeda-related terrorist groups and involvement in the global heroin trade.
If reports are to be believed, then ISI is said to have cracked down on the don to save embarrassment for the Musharraf government and eliminate all possibilities of Dawood getting caught by US forces.
Sources are also suggesting that ISI has also rounded up other underworld strongmen – Chotta Shakeel and Tiger Memon.
A senior intelligence officer added: "We will not be surprised if the ISI even eliminates them and confiscates their vast wealth. In any case, Dawood and the others have ceased to be of much use to the Pakistani establishment."
Meanwhile, intelligence sources have revealed that Dawood`s brother Anees is on the run. And arrest of Dawood and his accomplices came when people working for them in Mumbai, Dubai and other places found their phones being answered by unfamiliar voices.
In some quarters it is being denied that the trio have been detained.
On Monday, a television channel reported that Dawood was injured in a clash in a hotel in Karachi. The gangster sustained injuries in his left leg in a scuffle with fellow gamblers -- Firoz Gitto, Firoz Dausa and Black Prince.
The clash is said to have taken place in the penthouse of the Regent Crown Plaza Hotel in Karachi, which belongs to Firrazudin Baweza, a gangster.
Karachi Police, however, are denying any knowledge of the incident.
Bureau Report
1 comment:
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி சிக்கினான்!* சுற்றிவளைத்து கைது செய்தது பாகிஸ்தான் உளவுப்படை
கராச்சி : இந்தியாவில் நடந்த பல வெடிகுண்டு சம்பவங்களுக்கு காரணமானவனும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம், தனது கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பிடிபட்டு விட்டான்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மூன்று பேரையும் பிடித்து ரகசியமான இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவல்களை இந்திய உளவுத்துறையினர் மறுத்துள்ளனர்.போலீஸ் கான்ஸ்டபிளின் மகனான தாவூத் இப்ராகிம் மிக கொடூரமான நிழல் உலக தாதா. 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லபட்டனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உட்பட பல குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் இருந்தவன் தாவூத் இப்ராகிம். பாலிவுட் நடிகர், நடிகைகளை மிரட்டி பணம் பறிப்பது, சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல், பெரும் தொழில் அதிபர்களை கடத்தி பணம் பறிப்பது, கொடூர கொலைகள் என பல்வேறு வழிகளிலும் கொடூரமாக செயல்பட்டு வருபவன் தாவூத் இப்ராகிம்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியாவை விட்டு தப்பி ஓடிய அவன், சில ஆண்டுகள் துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான்.தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் உதவியுடன் மிக சவுகரியமாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஆதாரத்துடன் இந்தியா குறிப்பிட்டாலும், தங்கள் நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்றே பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. தாவூத் இப்ராகிமுக்கும், அல்குவைதா பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்காவும் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது. இது பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.தாவூத் இப்ராகிம் நடவடிக்கைகளை இந்திய உளவுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவனுடன் மற்றொரு நிழல் உலக தாதா சோட்டா ஷகில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி டைகர் மேமன் ஆகியோர் இருந்து வருகின்றனர் என்றும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், இந்த மூன்று பேரையும் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினர் பிடித்து சிறை வைத்துள்ளனர் என்று ஒரு தகவலும், கராச்சி நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் சூதாட்டம் நடந்த போது ஏற்பட்ட தகராறில் தாவூத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அவனது காலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை மட்டும் இந்திய உளவுத் துறை உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை ஒட்டி உள்ளது பலுசிஸ்தான் மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகர் குவெட்டா. இங்கு தான் தாவூத் உள்ளிட்ட மூன்று பேரும் ஐ.எஸ்.ஐ., அமைப்பினரிடம் பிடிபட்டனர். கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. குவெட்டா புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பேரும் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை இந்திய உளவுத்துறையினர் மறுத்து விட்டனர். இதுபோன்று நடக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்திய "டிவி' சேனல்களில் இதுப்பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியானாலும் பாகிஸ்தான் "டிவி' சேனல்கள் இதுபற்றி எந்த செய்தியையும் வெளியிட இல்லை. எனினும், தாவூத் பிடிபட்டான் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக, அதிபர் முஷாரப்பின் பெயரை காப்பாற்ற ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு அதிரடியில் இறங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
.பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தின் மகன், தாவூத் இப்ராகிமின் மகளை திருமணம் செய்துள்ளார். தாவூத் பிடிபட்டது குறித்து மியான்தத்திடம் கேட்ட போது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டார். அமெரிக்காவால் "உலகளாவிய பயங்கரவாதி' என்று அறிவிக்கப்பட்டவனும், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் அமைப்பால் எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டவனுமான தாவூத் இப்ராகிம் பிடிபட்டான் என்ற செய்தி இந்தியாவில் மட்டுமல்ல; பிற நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.இந்தியாவுக்கு அழைத்து வாருங்கள் மத்திய அரசுக்கு பா.ஜ., நெருக்கடி :பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் கூறுகையில்,""பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு அனைத்து வித துõதரக முயற்சிகளையும் மேற்கொண்டு தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமனை இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர வேண்டும். சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். தாவூத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை மத்திய அரசு முழுமையாக பயன்படுத்தி விரைந்து செயல்படுத்த வேண்டும். சமீபத்தில் அல்குவைதா அமைப்பு விடுத்த மிரட்டல் குறித்து மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி மிரட்டல் வந்தது உண்மை என்றும் முரண்பாடான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த விஷயத்திலும் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். எல்லை பகுதியில் குண்டு மழை : பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை ஒட்டி உள்ளது வசிரிஸ்தான் மாகாணம். இங்கு பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி தலிபான் மற்றும் அல்குவைதா அமைப்பினருக்கு சொர்க்க பூமியாக உள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. இங்குள்ள மிரான்ஷா நகர வீடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழு ஹெலிகாப்டர்கள் மூலம் அந்த பகுதியை நேற்று அதிகாலை சுற்றி வளைத்து குண்டுகள் வீசினர். இதில் மூன்று வீடுகள் தரைமட்டமாகின. இது தவிர ராணுவ வீரர்கள் நேரிடையாகவும் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர்
Post a Comment