Friday, December 08, 2006

சகோதரர் மரைக்காயருக்கு பதில்கள் - தொகுப்பு

1. கடவுள் யார்? அல்லது யாவர்?

{- இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? ஒரு ரிஷியே தனது மகளை நம்பி ஒப்படைத்து விட்டு போக முடியாத இந்தக் கடவுள்களையா?

- இந்துவாகவே இருந்தால் கூட ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வணங்க முடியும் என்றிருக்கும் இந்தக் கடவுள்களையா?

- அல்லது பெருந்தலைவர் காமராஜர் சொன்ன இந்தக் கடவுள்களையா?}


புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை.

அவை இறை அல்ல.

உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.

ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது.



2. ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?

{- இந்து மதத்தில் ஆன்மீக வழிகாட்டிகளாக யாரை எடுத்துக் கொள்வது?

- துறவு என்ற அறத்தைக் கூட கடைப்பிடிக்க வக்கற்றவர்களையா?

- பெண்பித்து, கூடாஉறவு, கொலை போன்ற மாபாதகங்களை செய்பவர்களையா?

- சக மனிதன் தன்னைத் தொட்டால் தீட்டு பட்டுவிடும் என்று காலுறை அணிந்து கொள்பவர்களையா?

- கஞ்சா போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களையா?

சரி இந்தப் பிரச்னைகளில் எதிலும் இன்னும் மாட்டாத ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அவர் சரியான வழியைத்தான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?}


துறவு என்னும் அறத்தை பின்பற்ற வேண்டியது குருவாக இருக்கும் அனைவருக்கும் தேவையில்லை.

ஒரு குடும்பத்தலைவியிடமிருந்து உபதேசம் பெற்ற கொங்கணவர் என்னும் முனிவர் கதை அதனைத்தான் கூறுகிறது.

துறவு ஒரு முயற்சி. ஞானம் என்பது விளைவு. விளைவை நோக்கி பல முயற்சிகள் இருக்கலாம். கர்ம வீரராக இருப்பவர் கர்மயோகத்தை பின்பற்றியும் ஞானத்தை அடையலாம். துறவின் மூலமும் ஞானத்தை அடையலாம்.

பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக்கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்.

ஒருவர் குருவிடமிருந்துதான் ஞானம் பெறவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. ஜாபால் சத்தியகாமர் புல் பூண்டு தாவர விலங்குகளிடமிருந்தும் ஞானம் பெற்றார். அறியக்கூடிய மனம் இருந்தால், ஞானம் சித்திக்கும்.

ஞானம் அற்றவர்கள் நீங்கள் கூறுவது போன்ற வெளிவேடக்காரர்களாக இருக்கலாம். அவர்கள் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டது போலவே மக்களால் உதாசீனம் செய்யப்பட்டு விடுவார்கள்.

சரியான வழிதான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டிருக்கிறீர்கள்.

எது தர்மத்தை போற்றுகிறதோ, எது தர்மம் தழைத்தோங்க வைக்கிறதோ அது நல்வழி. தர்மம் என்பது எது மக்களை இணக்கத்துடன் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது இந்த மனித குலமும் ஜீவராசிகளும் புல்பூண்டுகளையும் வாழ வைக்கிறதோ அது தர்மம்.

எது மக்களுக்கு இடையே சண்டையையும் பூசலையும் தோற்றுவிக்கிறதோ அது அதர்மம்.

ஒரே ஒரு குருவின் வார்த்தைகளை இறையின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளும்போது இது பிரச்னை. அந்த குரு சொன்ன வார்த்தைகளைப் பிடித்து தொங்கும்போது அவை பூசலையும் பிரச்னையையும் உருவாக்குகின்றன.

//3. எந்த வேதங்களை பின்பற்றுவது?

- பெண்களை கேவலப்படுத்தும் இந்த வேதங்களையா?

- குறிப்பிட்ட ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் இதை படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும் என்று 'அன்பாக' அறிவுறுத்தப்படும் அந்த வேதங்களையா?

- கடவுளர்களின் காமலீலைகளை உள்ளடக்கிய விப்ர புராணம் போன்றவற்றையா?
//


பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் உள்ளது அல்ல. அதன் உட்பொருள் தெரியாமல் கூறினால், அது உங்களுக்கு கேவலமானதாகவே தோன்றும். இதற்கான விளக்கம் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. படிக்கவும்.

புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல.

வேதங்களை படிக்க தடை ஏதும் இன்று இல்லை. என்றும் இல்லை. காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுவதாக சொல்லப்படும் பிரச்சாரம் பொய். அவை பிரிட்டிஷ் காலத்தில் இந்து மதத்தை கேவலப்படுத்த அவர்களது கைக்கூலிகளால் திணிக்கப்பட்டவை. கிறிஸ்துவ பிரச்சாரகர்களாலும் இஸ்லாமிய பிரச்சாரகர்களாலும் தொடர்ந்து உபயோகிக்கப்பட்டு இன்று உண்மை என்ற நிலையை அடைந்துவிட்டன.

வேதம் படித்தால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென்றால், எப்படி மாட்டிடையன் கிருஷ்ணன் அவதாரமாக கருதப்பட்டான்?
வால்மீகி என்ற வேடனால் எப்படி ராமாயணம் எழுதப்பட்டிருக்க முடியும்?
முருகன் ஏன் குறத்தி வள்ளியை திருமணம் செய்துகொள்ளவேண்டும்?
கம்பன் என்ற நெசவாளர் சமஸ்கிருதமும் வேதமும் வால்மீகி ராமாயணமும் படித்து கரைதேர்ந்து கம்பராமாயணம் எழுதமுடிந்திருக்குமா?

சிந்தித்து பாருங்கள். பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள்.

ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்குதடையின்றி படிக்கக் கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.

//
4. இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்?

- 'சக மனிதர்களுடன் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்' என்று உரிமைக்குரல் எழுப்பும் ஜாதியிலா?

- "They need respect" என்று எகத்தாளம் பேசும் ஜாதியிலா?

- 'எப்படி பரிமாற வேண்டும் என்ற சம்ஸ்காரம் இல்லாத அபிஷ்டுக்களையெல்லாம் ஆத்துக்கு ஏண்டா கொண்டு வரே?' என்று சக மனிதர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத ஜாதியிலா?

மற்ற நண்பர்களும் உங்களுக்கு தோன்றும் கேள்விகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
//


பார்ப்பனர்களில் ஒரு சாரார் அவ்வாறு மற்ற சாதியினரை எகத்தாளமாக பேசுவதை தமிழ் வலைப்பதிவுலகில் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். அதற்காக பல பார்ப்பனர்களும் வருந்தி அதுதவறு என்று கூறியிருக்கிறார்கள்.

ஏன் இந்துமதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்கவேண்டும்?

இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது.

மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

மனுதர்மம் அன்று ஜாதிக்கு ஒரு நீதி என்று எழுதியது போல இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதத்துக்கு ஒரு நீதி என்று எழுதி வைத்திருக்கிறது.

அது எப்படி தவறோ அது போல இதுவும் தவறுதான். ஜாதிக்கு ஒரு நீதியை எதிர்க்கும் அதே கூட்டத்தார் மதத்துக்கு ஒரு நீதியை ஆதரிக்கிறார்கள். இதனை எதனால், ஆதரிக்கலாமோ அதே போல அதே காரணங்களால் ஜாதிக்கு ஒரு நீதியையும் ஆதரிக்கலாம்.

அன்று ஜாதியை தாண்டி மனிதர்களை மனிதர்களாக மதிக்க அறைக்கூவல் விடுத்தவர்கள் இந்துக்கள், ராமானுஜர், பஸவேஸ்வரர், நாராயனகுரு போன்ற எண்ணற்ற இந்து ஞானியர். அதே போல இன்றும், மதத்துக்கு ஒரு நீதி என்று இருப்பதை எதிர்ப்பவர்களும் இந்துக்களே.

சரி உங்கள் கேள்விக்கு வரலாம். இந்துமதத்துக்கு வருபவர்கள் எந்த ஜாதியில் சேரவேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். ஏன் உங்கள் ஜாதிக்கு என்ன குறை? மரைக்காயர் என்பது ஒரு ஜாதிமாதிரி வைத்துக்கொண்டு சிவபாலன் மரைக்காயர் என்று பெருமையாக இருக்கலாமே?


--


நீங்கள் இந்துக்களாக அடையாளப்படுத்திக்கொண்டால்தான் சில மதங்களில் அடுத்த மதங்களை பற்றிய வெறுப்பு பிரச்சாரங்களை ஒதுக்கி ஆன்மீக வழியில் முன்னேற முடியும்.

எல்லா மதங்களிலும் குறைகள் உள்ளன என்று சொல்வது தவறு. இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை. சுதந்திரமே குறை, என்னை சிந்திக்கச்சொல்லாதே, கட்டளைகளை கொடு நான் மிஷின் போல நடக்கிறேன் என்று கூறுபவர்களுக்கு மட்டுமே இந்து மதத்தின் சுதந்திரம் ஒரு குறை.

மனுநீதியில் உள்ள குறைகளை இந்துமதத்தின் குறைகளாக கூறும் அஞ்ஞானிகள் வசம் தாங்கள் செல்லவேண்டாம். மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல. அதன் இறுதி பகுதியில் அதிலுள்ள சட்டங்களை கற்றறிந்தவர்கள் எப்படி மாற்றுவது என்ற வழிமுறையையும் கொடுத்திருக்கிறது.
என்னைப் பொறுத்தமட்டில் ஜாதிகள் இருப்பது தவறில்லை. ஜாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிப்பதும் போதிப்பதும்தான் தவறு.

//செந்தழல் ரவி கூறியது...
மதமே ஒரு உடாண்ஸ்...அதைச்சொல்லி கற்காலத்திலிருந்து அடிச்சிக்கிட்டானுங்க...சிலுவைப்போருன்னு பல உயிர்களை கொன்று குவிச்சானுங்க...வாதம் செய்து பலரை கழுவில் ஏத்தினானுங்க...இன்னும் ஏன் அதை வெச்சி அடிச்சிக்கறீங்க...இணையத்திலும்...என்னமோ போங்க...//

செந்தழல் ரவி,

அதென்ன "வாதம் செய்து கழுவில் ஏற்றினாங்க"? வாதம் செய்து தோற்றுவிட்டால் கழுவில் ஏறுகிறேன் என்று சொல்லி வாதம் செய்தார்கள். வாதில் தோற்றதால் அவர்கள் கழுவில் ஏறினார்கள். கழுவில் ஏற விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அப்போதும் சம்பந்தர் அவர்களிடம் கழுவில் ஏறவேண்டாம், திருநீறு பெற்று இறைவழி சேருங்கள் என்றுதான் கோரினார். பிடிவாதமாக சொன்ன சொல் தப்பமாட்டேன் என்று சமணர்கள் கழுவேறினார்கள். அது பிடிவாதம். அது தேவையில்லை. "வாதம் செய்து கழுவில் ஏறிக்கொண்டார்கள்" என்று சொல்லுங்கள். அது தான் சரி.

மற்றபடி நீங்கள் சொல்வது மதம் என்ற பெயரில் நடக்கும் அரசியல்.

அது உடான்ஸ். இந்த கடவுளை கும்பிட்டால், இப்படி டிரஸ் போட வேண்டும், இந்த மாதிரி தாடி வைத்துக்கொள்ள வேண்டும், இந்த மொழி பேச வேண்டும், இப்படி வேற்று மொழி பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆளை மாற்றி அரசியல் பண்ணுகிறார்களே அது உடான்ஸ்.

இப்படி டிரஸ் போட்டு இப்படி தாடி வைத்து ஆங்கில மொழி அல்லது அரபி மொழி பெயர் வைத்து என்னை குனிந்து கும்பிடு அல்லது முட்டிகால் போட்டு கும்பிடு என்று கடவுள் கேட்பாரா?

அதெல்லாம் சும்மா அரசியல். அதனால்தான் சிலுவைப்போர்களும் ஜிகாதும் நடக்கிறது. தன் மதத்துக்கு ஆள் பிடிக்கும் போர் ரொம்ப ஓவராக போகும்போது அதெல்லாம் நடக்கும்.

ஆனால் ஆன்மீகம் என்று ஒன்று இருக்கிறது. அது உடான்ஸ் அல்ல. ஆப்ரஹாமிய மதங்கள் அரசியலை பேசுகின்றன. இந்து மதம் ஆன்மீகத்தை பற்றி பேசுகிறது


இந்துக்களை அரசியல் படுத்துவதை பற்றி தருமி அய்யா பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்.

பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து என்ற உணர்வு அரசியல் அடையாளம் அல்ல. ஆனால் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அது அரசியல் அடையாளம். அதனால்தான் அவர்களிடம் ஓட்டு வங்கி தானாக உருவாகியிருக்கிறது.

ஆனால், அவ்வாறு முஸ்லீம் தலைவர்களும் கிறிஸ்துவ தலைவர்களும் ஓட்டு வங்கியாக உருவாகி தங்களது வாக்குக்களை பயன்படுத்தி இதுவரை இந்தியாவில் அரசியல்தான் செய்து வந்திருக்கிறார்கள். இஸ்லாமை பயன்படுத்தி இந்தியாவை பிரித்ததும், இன்றும் கோவா போன்ற இடங்களிலும் கிறிஸ்துவ பெரும்பான்மை இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துவர் ஓட்டு கிறிஸ்துவருக்கே என்று பொதுக்கூட்டங்களிலேயே பேசுவதும் இந்துக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு உருவாக்காமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

முஸ்லீம் கிறிஸ்துவ பிரச்சாரங்களும், அதன் அடிப்படையில் பெரும் சலுகைகளை பெற்றுக்கொள்வதும் இந்துக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு எதிர்ப்புணர்வை தோற்றுவிக்கும். ஆனால், இவ்வளவு காலமாக அவை நடந்து வந்திருந்தாலும் இன்னமும் பாரதிய ஜனதா கட்சி 90 சதவீதம் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் ஒரு முறை கூட அறுதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்பதை பார்த்தால், இந்துக்கள் இந்து மதம் என்பதை அரசியல் படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

இன்றும் இந்துக்கள் ஒரு சீக்கிய பிரதமர் கீழும், ஆளும் கட்சியின் தலைவராக கிறிஸ்துவரையும், இந்திய ஜனாதிபதியாக ஒரு முஸ்லீமையும் ஏற்றுக்கொள்வதை பாருங்கள்.

அதனை பாராட்டுங்கள்.

இந்து மதம் ஆன்மீக உள்ளடக்கம் பொருந்தியது என்பதாலேயே எந்த மதத்தினரையும் இந்துக்கள் மதிக்கிறார்கள். ஏனெனில், எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் நீங்கள் இறையையே வணங்குகிறீர்கள் என்பதால் அவர்கள் எல்லோரையும் மதிக்கிறார்கள்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆப்ரஹாமிய மேற்குலகு மதங்களுக்கு அப்படிப்பட்ட உணர்வு இல்லை. அதுவே உலகெங்கும் பெரிய கலவரங்களையும் உள்நாட்டு போர்களையும் உருவாக்கி வருகிறது. ஏன் ஷியா சுன்னி கலவரங்களுக்கும், புரோடஸ்டண்ட் கத்தோலிக்க போர்களுக்கும் அவைகள் உருவாக்கிய பெரும் அழிவுகளையும் கவனியுங்கள். ஷியா மதத்து தலைவரை ஏற்க மறுத்து சுன்னி பிரிவினர் ஷியா பகுதிகளுக்குள் சென்று தினந்தோறும் சாதாரண மக்களை கொலை செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட மதமாச்சரியங்களை கடந்தது இந்துமதம்.

அப்படிப்பட்ட இந்து மதம் உலகெங்கும் பரவுவதே உலகம் அமைதிவழி திரும்ப ஒரே வழி

22 comments:

S.L said...

பிரதர்,

மிகவும் அசத்தலாக எழுதியிருக்கிறீர்கள். எனது பாராட்டுக்கள். என்னப் போன்றவர்களுக்கு இது பல புரியாத விஷயங்களை விளக்குகிறது.

நமது மதம் அறிவியலை அடிப்படையாக கொண்டது என்பதை இதிலிருந்து நான் புரிந்து கொண்டேன். நான் இனிமேல் உங்களின் வாதங்களை எனது பதிவில் அச்சிடுகிறேன் விரும்புகி
றேன். அனுமதி தருகிறீர்களா?

Anonymous said...

1.மத நல்லிணக்கத்தை கடைபிடியுங்கள். உங்கள் மதத்தினை பற்றிய மதிப்பு மக்கள் மனதில் தானாகவே வரும்.
2.மதத்தின் பெயரால் சண்டையிடாதீர்கள்.
3.ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
4.மக்களை பிரிக்காதீர்கள்.
5.பிற மதங்களிலுள்ள நல்ல விஷயங்களை சொல்லுங்கள், மாற்று மத சகோதரர்களுக்கு உங்கள் மதம் மீதான கெட்ட எண்ணம் மாறி அதன் மதிப்பு கூடும்.
6.உங்கள் மனம் நன்மையையே நோக்கி பயணிக்கட்டும்.

எழில் said...

எஸ்.எல் அய்யா, எனது பதிவு எந்த சிறு காரியத்துக்கு பயன்படுமென்றாலும் மகிழ்ச்சிதான்.
தாராளமாக உபயோகப்படுத்திகொள்ளலாம்

அனானி அய்யா
உங்களது கருத்தை அப்படியே ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான் இந்துமதத்தின் முக்கியத்துவம் இன்றைய உலகுக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது

நன்றி
எழில்

Anonymous said...

நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால், தலித்துகள் சாதி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்படும்போது அவர்கள் இந்துமதத்திலிருந்து வெளியேறுவதில் என்ன தவறு?

அவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு இந்துமதம் தானே காரணம்?

எழில் said...

//சிறில் அலெக்ஸ்,

இதே பார்வையில்.. தன் பக்தர்களை தக்கவைத்துக்கொள்ளத் தெரியாத கடவுளும் பலவீனமானவர்தானே?//

இல்லை. தன் பக்தர்களை தக்க வைத்துக்கொள்ள எந்த விதமான தேவையும் கடவுளுக்கு இல்லை.

யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான். எந்த உருவில் இறையை வணங்குகிறான் என்பதை பொறுத்து அவனுக்கு என்ன வேண்டும் என்பதை மனிதனே தீர்மானித்துக்கொள்கிறான். சரஸ்வதியை வணங்குபவன் இறையை கல்விக்கடவுளாக உருவகித்து கல்வியை கேட்கிறான். லட்சுமியை வணங்குபவன் இறையை செல்வக்கடவுளாக உருவகித்து செல்வத்தை கேட்கிறான். மனிதன் இறையிடம் கேட்பது மாறலாம். இறை மாறாது. கற்றறிந்த இந்து துறவிகள் மதமாற்றம் பற்றி பெரிதாக அலட்டிகொள்ளாததன் காரணம் இதுவே.

என்னை பொறுத்தமட்டில் கல்விக்காகவும் மரியாதைக்காகவும் மதம் மாறும் மனிதர்கள் தாங்கள் வேண்டியதை பெற்றுக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே.
ஆனால், கல்வி, ஜாதி, மரியாதை போன்றவற்றை காட்டி மதம் மாற்றும் மனிதர்களுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது என்பது என் சந்தேகம். அவர்களுக்கு என்ன நோக்கம் இருந்தாலும், மதம் மாறினால், மரியாதை, கல்வி போன்றவை மதம் மாறும் மனிதர்களுக்கு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.


எழில்

---
தருமி அய்யா பதிவில் எழுதியது.

இதற்கு மேலும் சில விஷயங்களை எழுதுவேன்.

எழில் said...

சகோதரர் மரைக்காயரின் பதிவில் சகோதரர் தமிழ்மகன் எழுதியது சிறப்பாக இருந்ததால் அதனை இங்கே பதிந்திருக்கிறேன்.

தமிழ் மகன் said...
//பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து என்ற உணர்வு அரசியல் அடையாளம் அல்ல. ஆனால் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அது அரசியல் அடையாளம். அதனால்தான் அவர்களிடம் ஓட்டு வங்கி தானாக உருவாகியிருக்கிறது.

ஆனால், அவ்வாறு முஸ்லீம் தலைவர்களும் கிறிஸ்துவ தலைவர்களும் ஓட்டு வங்கியாக உருவாகி தங்களது வாக்குக்களை பயன்படுத்தி இதுவரை இந்தியாவில் அரசியல்தான் செய்து வந்திருக்கிறார்கள். இஸ்லாமை பயன்படுத்தி இந்தியாவை பிரித்ததும், இன்றும் கோவா போன்ற இடங்களிலும் கிறிஸ்துவ பெரும்பான்மை இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துவர் ஓட்டு கிறிஸ்துவருக்கே என்று பொதுக்கூட்டங்களிலேயே பேசுவதும் இந்துக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு உருவாக்காமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

முஸ்லீம் கிறிஸ்துவ பிரச்சாரங்களும், அதன் அடிப்படையில் பெரும் சலுகைகளை பெற்றுக்கொள்வதும் இந்துக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு எதிர்ப்புணர்வை தோற்றுவிக்கும். ஆனால், இவ்வளவு காலமாக அவை நடந்து வந்திருந்தாலும் இன்னமும் பாரதிய ஜனதா கட்சி 90 சதவீதம் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் ஒரு முறை கூட அறுதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்பதை பார்த்தால், இந்துக்கள் இந்து மதம் என்பதை அரசியல் படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

இன்றும் இந்துக்கள் ஒரு சீக்கிய பிரதமர் கீழும், ஆளும் கட்சியின் தலைவராக கிறிஸ்துவரையும், இந்திய ஜனாதிபதியாக ஒரு முஸ்லீமையும் ஏற்றுக்கொள்வதை பாருங்கள். // -Ezhil

என்ன ஒரு கயமைத்தனம் பாருங்கள். தேவை என்று வரும்போது தாழ்த்தப்பட்டோரையும், திராவிடர்களையும் 'இந்து'வாக்கி விடுகிறார்கள். நான் கேட்பதெல்லாம் இதுதான்: தேவைக்கேற்ப 'இந்து' என்று சொல்கிறாயே, ஆலயத்துக்குள் அனுமதித்தால் என்ன? நீ (ஆரியன்) பவ்யமாக கைகட்டி நிற்க என் தாழ்த்தப்பட்ட சகோதரன் உன்னைத் தொட்டு, கடவுளின் குறியீடாகச் சொல்கிறாயே, அந்த சிலையை அபிஷேகம் செய்ய அனுமதித்தால் என்ன? தாக்குதலாகக் கருதாமல் தைரியமாக பதில் சொல்ல எழில்களுக்கு யோக்கியதை உண்டா?

பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து என்பது அரசியல் அடியாளம் அல்ல என்கிற பொய்யிலிருந்து தாழ்த்தப்பட்ட, திராவிட, இயற்கை வணங்கிகளை விட்டுவிட்டுப் பார்த்தால் கேவலம் பூநூலைக் கூட விட்டுத்தர வக்கில்லாத பார்ப்பணியத்துக்கு அரசியல் வேறு எது?

'எல்லாவரும் இந்து' என்கிற மாயையிலிருந்து எழில்கள் விடுபட்டால் தான் பிராமணியம் எப்படி அரசியலையே முழுமூச்சாகக் கொண்டு இயங்குகிறது என்பது புரிய வரும். ஒரு அநானி சொன்னது போல, RAM என்பது பிராமணியர்களைப் பொறுத்த வரை RacialSupremacy, Administration, Money தானே! அதற்காகத் தானே பரிவாரப்படைகள்!

//பாரதிய ஜனதா கட்சி 90 சதவீதம் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் ஒரு முறை கூட அறுதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை//

இப்படியெல்லாம் ஜல்லி அடிப்பது அடுக்காதய்யா! மேல்சாதி நலனுக்காக 'தேவைப்படும்போது மட்டும்' மற்றவரையும் அரவணைத்து அரசியல் செய்யும் ஒரு பார்ப்பனீய கட்சி 'இந்துக்களாக பெயரளவில் கருதப்படும் மற்றவர்களின் ஆதரவை எப்படி பெற முடியும்?



தமிழ் மகன்

10:42 PM

எழில் said...

//
அடுத்து நான் இஸ்லாமியன் என்பதால் இஸ்லாத்தை உயர்த்திப் பேசுவேன். அரவிந்தன் பிராமணர் என்பதால் இந்து மதத்தை உயர்த்திப் பேசுவார். இது மனிதனின் இயற்கை. எனக்கு இஸ்லாத்தில் அதிக விபரம் இல்லாமல் வாதத்தில் நான் தோற்கலாம். இதே போன்ற நிலைமை அரவிந்தனுக்கும் ஏற்படலாம். இந்த ஒரு விவாதத்தை வைத்து இஸ்லாத்தையும் இந்து மதத்தையும் எப்படி எடை போட முடியும்? இதே அளவு கோலை சமணர்களுக்கும் சைவர்களுக்கும் வைத்துப்பாருங்கள்.

ஒரு வாதத்தில் சரியான விபரம் இல்லாமல் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் மனிதாபிமானமா? அவர்களே ஒத்துக் கொண்டிருந்தாலும் இதை செயல்படுத்திய மன்னன் நேர்மையாளன் என்று எப்படி சொல்ல முடியும்? அடுத்துஒரு இடத்தில் வாதம் செய்தால் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து பேர் வரை அமர்ந்து வாதம் செய்ய முடியும். வாதப்படி சமணர்கள் தோற்றால் தோற்ற சமணர்களை தண்டிப்பதை விடுத்து எட்டாயிரம் சமணர்களை ஒரே நேரத்தில் கழுவிலேற்றுவது எந்த வகை நியாயம்.
//

http://suvanappiriyan.blogspot.com/2006/12/blog-post.html

சகோதரர் சுவனப்பிரியன் மேற்கண்டவாறு தன் பதிவில் எழுதியிருக்கிறார்.

இதனைப்பற்றி இந்த பதிவில் எழுதியிருக்கிறேன் என்பதால், இங்கு எழுத முனைகிறேன்.

வாதிட்ட சமணர்கள் சகோதரர் சுவனப்பிரியன் போன்று விபரம் தெரியாதவர்கள் அல்லர். சமண புலமை பெற்ற ஆச்சாரியர்கள். எல்லா சமணர்களின் சார்பாகவும் வாதிட வந்தவர்கள். அந்த காலத்தில் வாதிடும்போது சிலவற்றை வாதின் முன் பந்தயம் வைப்பர். அதாவது வாதில் தோற்றால் வாதில் வென்றவரின் சீடராக ஆவது போன்ற விஷயங்களை முடிவு செய்துகொள்வார்கள்.

மேலும் இந்த வாதம் நடக்கும்போது, அரசன் சமணர்கள் பக்கமே இருந்தான். சமணர்களே ஆட்சிஅதிகாரத்திலும் இருந்தனர். தங்களது வாதின் மீதிருந்த பெரும் கர்வத்தால், அவர்கள் தாங்கள் தோற்கவே முடியாது என்று இருமாந்திருந்தனர். அதனால், அவர்கள் தாங்கள் தோற்றால், கழுவின்மீது ஏறுவோம் என்று பகிரங்கமாக கூறிக்கொண்டனர்.

தோற்றபின்னரும் அவர்களுக்கு திருஞான சம்பந்தர் திருநீறு எடுத்துக்கொண்டு இறைவழி வரவே அழைத்தார். அவர்களோ மறுத்து, தங்களது சபதத்தை நிறைவேற்ற கோரியே தாங்களே கழுவின் மீது ஏறினர். இன்றும்கூட பலர் யார் தடுத்தும் கேளாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பலரும் வந்து செல்லும் மார்க்கெட்டுகள், ஊர்களில், ஷியா பிரிவினர் மசூதிகளில் தங்கள் மீது வெடிகுண்டுகளை பொருத்திக்கொண்டு வெடித்து உயிர் துறக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அய்யா செய்யாதீர்கள். உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்துக்கும் ஊருக்கும் நீங்கள் நல்லது செய்யலாம் என்றுதான் அறிவுரை கூறுகிறோம். அவர்கள் கேட்பதில்லையே. நீங்களும் யாரையும் கொல்ல வேண்டாம் என்று தான் கேட்கிறோம். அவர்கள் கேட்காததற்கு இன்றைய அரசாங்கமும் நாமும் என்ன செய்யமுடியும்?

தலைமை தாங்கி வாதம் புரிந்த சமணத்தலைவர்கள் கழு ஏறினர். அந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறுதல், இறப்புக்கு சமமாக கருதப்பட்ட படியால், அங்கிருந்த மீதமிருந்த எண்ணாயிரம் சமணர்கள் நாடு விட்டு வெளியேறி பாலக்காடு சென்றனர். அஷ்ட சஹஸ்ரம் என்னும் பிரிவினராக இன்னும் அவர்கள் இருக்கிறார்கள். சம்பந்தரால் சைவநெறி அடைந்த அவர்கள் இன்று சைவ பிராம்மணர்களாக இருக்கிறார்கள்.

மேலும் இன்று சமணர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பது தவறான கூற்று. சமணர்கள் இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். நயினார் என்னும் பெயருடைய பல சமணர்களை இன்னமும் காஞ்சியில் பார்க்கலாம்.

இந்து நெறி அன்பு நெறி.

அங்கு வன்முறைக்கு இடமில்லை.

Anonymous said...

மிகச்சிறப்பான பதில் எழில்

சமணர்கள் கழுவேறியதை "நீ மட்டும் ஒழுங்கா" என்று கேட்டு தங்களது குற்றங்களை மறைக்கத்தான் பயன்படுத்துகிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக தங்களைப்போல ஆணித்தரமாக பதில் கூறி பலர் இதனை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை கண்டிப்பார் இல்லை.

உங்களது இந்த அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி

எழில் said...

அன்பின் சகோதரர் மரைக்காயர் அவர்கள் அழகாக தன் வாதங்களை வைத்திருக்கிறார்கள்.
படிக்க வேண்டுகிறேன்

சகோதரர் எழிலுக்கு பதில்கள்

Anonymous said...

நண்பர் எழில் அவர்கள் இங்கே நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார். அவரின் நோக்கம் மீது உள்ள அக்கறையால் இதை சொல்லலாம் என் நினைத்தேன். இந்த முஸ்லிம்கள் திருந்தப் போவதில்லை என இந்து மதம் மீது நம்பிக்கை கொண்ட எல்லோரும் - நேசகுமார், கால்கர் சார், வஜ்ரா உள்பட - புரிந்து வெகு நாளாகிறது. எழில் அவர்களே, பிறப்பு முஸ்லிம்களை விடுத்து, அதை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆச்சார்ய சஞசய் திரிவேதி போன்றவர்களை திருத்த நாம் கவனம் செலுத்தலாம்.

கால்கரி சிவா said...

//யூதர்களும், கிருஸ்துவர்களும் மதமா, உயிரா என்று வரும்போது மதத்தைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.வீடு எரிகிறது என்று அவர்களுக்குத் தெரியும். இஸ்லாமியருக்கு அவர்கள் வீடு எரிவது கூடத் தெரியாது. வெளியேவாவது வா என்று நீங்கள் உணர்த்த முயற்சித்தால் கூட, இதை விட நல்ல வீடா உன்னுடையது என்று உங்களைக் கொல்ல வருவார்கள். அவர்களோடு வாதம் செய்வது வீண் வேலை.//

சபாஷ் கணேஷ், நல்ல கருத்துகள்

Anonymous said...

கணேஷின் கணிப்பு மிகச்சரியானது.

எழில் said...

கணேஷ்,

இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானது என்பது என் கருத்து. சமீபமாக சில முறை இஸ்லாமிய நண்பர்களிடம் விவாதம் செய்ததால் தோன்றிய கருத்து அது.

இவ்வாறு இஸ்லாமியர்கள் விவாதம் செய்வது ஒருவகையில் ஏன் எல்லா இஸ்லாமிய நாடுகளும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பின் தங்கி இருக்கின்றன என்று நான் புரிந்துகொள்ள உதவியது.

அறிவியலுக்கு இஸ்லாம் எதிரானதல்ல என்று நிரூபிக்க சிலமுறை இஸ்லாமியர்கள் முயற்சி செய்தாலும், சில மேற்கோள்களை காட்டினாலும், அவர்களது வாத முறையும்,அவர்களது எபிஸ்டமாலஜியும் எனக்கு இதனை உணர்த்தியிருக்கின்றன.

நேரமிருக்கும்போது அதனை தனி பதிவாக எழுத முனைகிறேன்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

எழில்

arunagiri said...

எழில், மிகத் தெளிவாக அருமையாக ஆணித்தரமாக வாதிக்கிறீர்கள். எதிர்க்கேள்வி கேட்பவனை வெட்டும் காட்டுமிராண்டி மதங்கள் குறித்து தர்க்க ரீதியாகக் கேள்விகள் எழுப்பி நபித்தனப்பொய்களை வெளிச்சம் போட்ட கட்டுரை மிகவும் பாராட்டத்தக்கதாய் இருந்தது. உங்கள் எழுத்துகளுக்கு என் வாழ்த்துக்கள்.

எழில் said...

அன்பு சகோதரர் மரைக்காயர்,

உங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதத்தான் இருக்கிறேன். நாளை அல்லது மறுநாள்.

நடுவில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கூறியுள்ளதை படித்தபோது பகிர்ந்துகொள்ள தோன்றியது. வயிற்றெரிச்சல் ஏதும் இல்லை. அவர் கூறியுள்ளது உண்மைதான். ஆனால், அதனை பகிரங்கமாக சொல்வது சரியல்ல என்று கருதினேன். வேண்டுமென்றே பாஜகவை தூண்டிவிடும் நோக்கத்தோடு கூறியது போன்று எனக்குத் தோன்றியது. அதுதான் ஏன் என்று ஆச்சரியப்பட்டிருந்தேன்.

மற்றபடி சச்சார் கமிட்டி பற்றியும் ஆழ்ந்து படிக்கவில்லை. ஆனால், இஸ்லாமியர்களது வறுமைக்கும் கல்வியின்மைக்கும் அரசாங்கம் காரணமல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். அதனை அந்த பதிவிலேயே குறித்திருக்கிறேன்.

நட்புடன்
எழில்

Posted in Brother Maraikayar's blog

Anonymous said...

எழில் ஐயா அவர்களே தாங்கள் ஆழமான கருத்துக்களை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் விளக்கி இருந்தும் மரைக்காயர் அவர்கள் LKG படிக்கும் பிள்ளைகு விளக்குமாப்போல் விளக்கினால் தான் விளங்கும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். மட்டுமல்லாது இந்து மதத்தில் உள்ளவர்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் பதில் தர முடியாது என்றும் நினைத்துக் கொண்டிருந்தார் அது தான் நான் மரைக்காயர் அவர்களுக்கு பதில் எழுத வேண்டும் என்று எழுதினேன் தவிர உங்களுக்கு போட்டியாக வந்து விட்டேன் என்று தாங்கள் தவறாக கருத வேண்டாம் அத்துடன் எனது பதிவு தமிழ்மணம், தேன்கூடு போன்ற எந்த திரட்டியிலும் இன்னும் இனைத்துக்கொள்ளப்படவில்லை. அதனால் எனது பதிவுக்கு யாரும் வர மாட்டார்கள் என்ற காரணத்தினால் தான் தங்கள் பதிவிலும், மரைக்காயரின் பதிவிலும், திரு நீலகண்டன் அவர்களின் பதிவிலும் பின்னூட்டமிட்டு
எனது பதிவுக்கு சிறிய விளம்பரம் தேடினேன். தாங்கள் தவறாக கருத மாட்டீர்கல் என்று எண்ணினேன். தாங்கள் ஏதும் தவறாக உணர்ந்தால் தயவு கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும்.அத்துடன் தாங்கள் என்னை "திட்ட" வேண்டும் என்று கருதினால் தனிமடலிட்டு திட்டுங்கள்.
இதோ எனது மடல் முகவரி
hindhuism@gmail.com

//இந்து மதத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதெல்லாம் ரொம்பவே அதிகம். இந்து மதம் உளவியல் பூர்வமானது. மிக அற்புதமாய் பல பரிமாணங்களில் வாழ்வியலுக்கு நம்மைத் தயார் செய்கிறது. எல்லா வழிகாட்டுதல்களும், ஏன் கடவுளுமே அவரவர்க்குள்ளேயே உண்டு. அம்மனப்பக்குவத்திற்கு மனிதர்களைத் தயார் செய்யும் கருவியாகவே இந்து மதம் செயல்படுகிறது. அதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் பலன் அனுபவிக்கிறோம். இங்கே பலவிதமான இந்துக்கள் இந்து மதத்திற்கான விளக்கங்கள் தருகிறார்கள். நமக்கு எந்த மதரஸாவும் இல்லை. எந்த பைபிள் கல்லூரியும் இல்லை. ஏன் எந்தப் புத்தகத்தையும் துணைக்கு இழுப்பது கூட இல்லை. பதில்களும் கேள்விகளும் குறைந்த பட்சம் நேர்மையாகவும், அறிவு சார்ந்தும் இருக்கின்றன. இந்து மதத்துக்கு எதிராய் பேசும், மத, கடவுள் நம்பிக்கை இல்லாத இந்துக்களும் அறிவு சார்ந்த வாதங்களை வைக்கிறார்கள்.//

//இம்மதங்களால் மனித இனமே மிகப் பெரிய அழிவை எதிர் நோக்கி உள்ளது. மேற்கத்திய சிந்தனை, கலாச்சாரத்தின் மிகப் பெரிய தோல்வியையே இது காட்டுகிறது. அதில் இருந்து பிறந்த எல்லா மதங்களும், சிந்தனைகளும், இஸங்களும் அழிவை நோக்கியே நம்மை இட்டுச் செல்கின்றன. மதம் சார்ந்த/சாராத உலகப் போருக்கான சாத்தியத்தில் தொடங்கி, சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரை எல்லாமே மேற்கத்திய அகங்காரம், முட்டாள்த்தனத்தின் கொடையே.//

கனேஷ் ஐயா அவர்கள் அருமையான கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.

உண்மையான ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுப்பது இந்து மதம் மட்டுமே ஏனைய ஆபிரகாமிய மதங்கள் நம்மை உலக இன்பமென்னும் துன்பக் கேனியிலே தள்ளி அதுவேதான்
நிரந்தரம் என்று காதில் பூ சுற்று கின்றன.

நன்றி

எழில் said...

சகோதரர் HINDHU அவர்களே,

உங்கள் கருத்துக்கும் உங்களது முயற்சிக்கும் மிக்க நன்றிகள்.

நீங்கள் எனக்கு போட்டியோ அல்லது நான் உங்களுக்கு போட்டியோ அல்ல. நாமெல்லாம் பள்ளிக்கூட வாத்தியார்கள் போல. அறியாதவர்களுக்கு நாம் நம் வழியில் விளக்குகிறோம்.
எத்தனை பள்ளிக்கூட வாத்தியார்கள் இருந்தாலும் இன்றைய நிலையில் போதாது.

தேன்கூடு தமிழ்மணத்தில் இணைத்து வையுங்கள்.

நானும் உங்களுக்கு என் பக்கத்தில் இணைப்பை போடுகிறேன்.

நட்புடனும் அன்புடனும்
எழில்

Anonymous said...

A fantastic writeup....Im proud to be a Hindu...

Anonymous said...

எழில் ஐயா அவர்களே உங்களின் பரந்த உள்ளத்திற்கு நன்றி

astle123 said...
This comment has been removed by the author.
Anonymous said...

அன்பு எழில்
இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன். அற்புதம். ஏற்கனவே நான் கூறியிருப்பதைப்போல் உங்களுடைய புதிய பதிவுகள் எனக்கு இமெயிலில் வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
ராஜா
smspkraja@gmail.com

எழில் said...

அன்பு சகோதரரே;
உங்கள் கோரிக்கையை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லை.

அதற்கு பிளாக்கரில் ஏதும் வழியிருந்தால் தெரியப்படுத்துங்கள்

நன்றி