மாணவர்கள் விபூதி, குங்குமம் வைக்க தடை அரசு பள்ளியில் இந்து முன்னணி முற்றுகை
கரூர் :புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் கடந்த சில வாரங்களாக மாணவர்களை, பள்ளிக்கு வரும்போது விபூதி, குங்குமம் நெற்றியில் வைத்து வரக் கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்காத மாணவர்கள் தண்டிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகின.இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மாவட்டச் செயலர் ராஜா தலைமையில் பள்ளிக்குச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே, பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், வெளியே வந்து இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்ததை நடத்தினார்.அப்போது,பள்ளியில் தேர்வு நடப்பதால் போராட்டங்கள் நடத்தினால் மாணவர்களது படிப்பு பாதிக்கப்படும். எனவே, இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,என்று கூறினார்.அதன்பேரில், இந்து முன்னணியினர் போராட்ட அறிவிப்பைக் கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment