மணிலா, ஆக. 10-
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பணய கைதிகளை கடத்திச் செல்வது, கார்குண்டு தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது போல பிலிப்பைன்ஸ் நாட்டி லும் `அடிசயாப்' என்ற தீவிர வாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இயக்கம் அல்கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது.
இந்த தீவிரவாதிகளை ஒடுக்க கடந்த சில நாட்களாக பிலிப்பைன்ஸ் ராணுவம் முடுக்கி விடப்பட்டது. ஜோலோ தீவில் தீவிரவாதி களின் முகாம்களை ராணுவம் முற்றுகையிட்டு தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடை பெற்றது.
கடந்த 2 நாட்களாக நடந்த இந்த கடும் துப்பாக்கி சண்டையில் 25 ராணு வத்தினரும் 27 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற ஒரு லாரி மீது தீவிரவாதிகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல ராணுவத்தினர் பலியானார்கள். அந்த பகுதியில் தொடர்ந்து சண்டை நீடிக்கிறது.
நன்றி மாலைமலர்
No comments:
Post a Comment