Tuesday, August 12, 2008

ஜார்ஜியா மீது ரஷிய விமானங்கள் 4 வது நாளாக குண்டு வீச்சு: கடும் போரில் 2000 பேர் பலி

ஜார்ஜியா மீது ரஷிய விமானங்கள் 4 வது நாளாக குண்டு வீச்சு: கடும் போரில் 2000 பேர் பலி

திபிலிசி, ஆக. 11-


முன்னாள் சோவியத் ïனியனின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று ஜார்ஜியா. இந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஒசிடியா மாகாணத்தில் உள்ளவர்கள் தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரிவினைவாதிகளை ஒடுக்க அவர்கள்
மீது ஜார்ஜியா ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் ஆயிரக்கணக் கானவர்கள் தெற்கு ஒடிசியா வில் இருந்து ஓடி ரஷியா வுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த பிரிவினைவாதி களுக்கு ரஷியா மறைமுக மாக ஆதரவு அளித்து வந்தது. எல்லையில் ரஷிய ராணுவத்தினர் சிலரையும் ஜார்ஜியா ராணுவம் சமீபத் தில் சுட்டுக் கொன்றதால் ரஷியா போரில் குதித்தது.

ஜார்ஜியாவின் ஒசிடியா, கோரி உள்பட பல பகுதிகளில் ரஷிய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியது. ரஷிய விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியது.

ஏற்கனவே இருதரப்புக்கும் நடந்த போரில் ராணுவத் தினர், பொது மக்கள் உள்பட 1500 பேர் பலியானார்கள். இன்று 4-வது நாளாக ரஷிய விமானங்கள் குண்டு வீசின. இதை தொடர்ந்து இந்த போரில் பலியானவர்கள் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துவிட்டது.

கரிபியன் கடல் பகுதியில் ஜார்ஜியா நாட்டு கடற்படை படகு ஒன்றை ரஷிய விமா னம் குண்டு வீசி மூழ்கடித் தது.

ரஷியாவின் கடும் தாக்கு தலை தொடர்ந்து தெற்கு ஒசிடியாவில் இருந்து ஜார்ஜியா படைகள் வாபஸ் ஆனது. போர் நிறுத்தத்துக்கும் ரஷியாவுடன் பேச்சு நடத்த தயார் என்றும் ஜார்ஜியா அழைப்பு விடுத்தது.

ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்காமல் ரஷியா தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜார்ஜியாவின் திபிலிசி நகருக்கு அருகே உள்ள விமான நிலையம் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. தெற்கு ஒசிடியாவின் லட்சின்வாலி நகரை ரஷிய படை கைப் பற்றியது.

போர் நிறுத்தத்தை ஏற்கா மல் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். ரஷியாவின் இந்த தாக்குதலை ஏற்க முடியாது என்று அவர் ரஷிய பிரதமர் புதினுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார்.

போர் முற்றி வருவதை தொடர்ந்து ஜார்ஜியாவில் உள்ள இங்கிலாந்து நாட்ட வர்கள் அனைவரையும் உடனடியாக திரும்பி வந்து விடும்படி அந்த நாடு உத்தர விட்டு இருக்கிறது.

No comments: