அனைவருக்கும் இறையருள் தங்குக!
என்னே இறைவனின் திருவிளையாடல்!
நன்றி அசுரன்
இன்று(05 March, 2008) காலை பத்து மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் விழுப்புரம் மாவாட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமையில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் புரட்சிகர மாணவர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். பாமக மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன், விடுதலை சிறுத்தை அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் காவியச் செல்வன் ஆகியோரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் தேவாரம் பாடுவதற்காக நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடினர். 30க்கும் மேற்பட்டோர் தேவாரம் பாடியதால் கோயில் வளாகம் முழுவதும் அது எதிரொலித்தது.
அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையில் கடலூர் எஸ்.பி. பிரதீப்குமார், சிதம்பரம் ஏ.எஸ்.பி செந்தில்வேலன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோர்ட் புறக்கணிப்பு
சிதம்பரம் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் நடனம் தலைமையில் நேற்று நடந்தது. தேவாரம் பாட ஆறுமுகசாமிக்கு ஆதரவாக சென்ற வக்கீல்கள் மீது போலிஸார் நடத்திய தடியடையைக் கண்டித்து 8ஆம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழ்முரசு
3 comments:
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே!
தீ கம்யூனிஸ்டுகளையும் தேவாரம் பாடவைத்த தில்லையம்பலவாணன் போற்றி போற்றி
hahahaaaa
Post a Comment