Sunday, March 18, 2007

நெல்லையில் தொடரும் வன்முறைகோவில் சிலைகள் உடைப்பு

யார் இந்த வன்முறை கும்பல்? கோவில் சிலைகளை உடைத்தும், கோவிலை அசிங்கப்படுத்துவதும் செய்வது யார்?

திராவிட கழகத்தினரா?

நெல்லையில் தொடரும் வன்முறைகோவில் சிலைகள் உடைப்பு
மார்ச் 17, 2007


நெல்லை: நெல்லையில் கடந்த சில நாட்களாக இரு பிரிவினருக்குமிடையே நடந்து வரும் மோதல் தொடர்ந்து கொண்டுள்ளது.

நெல்லை தச்சநல்லூரில் 2 பிரிவினருக்குமியையே ஏற்பட்ட மோதலில் கண்ணன், குமார் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இந்த கொலைகள் தொடர்பாக 9 பேர் தாமகவே போலீசில் சரணடைந்தனர். இந் நிலையில் நேற்று தச்சநல்லூர் பகுதியில் வைக்கோல் படப்புகளுக்கு தீ வைக்கப்பட்டதால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய போலீஸாரும் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் தாமிரபரணி அருகே பாலசுப்பிரமணி சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீகுமிளி உடையார் சாஸ்தா கோவில் ஆகிய 2 கோவில்களையும் ஒரு கும்பல் சூறையாடியது.

நேற்று நள்ளிரவில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கதவின் மீது பெரிய பாறாங் கல்லை வீசிய கும்பல் கதவை உடைத்தது. பின்னர் கோவில் மீது தாக்குதல் நடத்தினர்.

மேலும் ஸ்ரீகுமுளி உடையார் கோவில் கதவையும் பாறாங்கல்லை வீசி உடைத்து அங்குள்ள 2 அடி உயரமுள்ள ஆழ்வார் கற்சிலையையும், அதன் அருகே உள்ள சாஸ்தா சிலையும் உடைத்தது.

கோவில் முன் பீர் பாட்டிலை உடைத்தும், யானை உருவ கற்சிலையை அசிங்கப்படுத்திவிட்டும் சென்றது அக் கும்பல்.

இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
--

6 comments:

Anonymous said...

இன்று நெல்லையில் கார்ப்பரேஷன் மேயர் மற்றும் கவுன்சிலர் பலரும் பல நெல்லைக் கோவில்களில் கொள்ளையடித்த முன்னாள் கொள்ளைக்காரர்களே. நம்ம டோண்டுவால் பிரபலமான மகரநெடுங்குழைக்க்காதரின் இடுப்புத் துண்டு வரை கொள்ளையடித்த கொள்ளைக்காரர்கள்தான் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். பேய்கள் ஆட்சி செய்யும் பொழுது வேறு என்ன நடக்கும்? தி மு க ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் கோவில்கள் கொள்ளை போவது வழக்கம்தானே ?

Anonymous said...

thank u for happy news.

Thamizhan said...

உடனே திராவிடர் கழகம் என்று கதை விடாதீர்கள்.திராவிடர் கழகத்தினர் தேதி அறிவித்துத் தனிச் சொத்திற்கோ பொதுச் சொத்திற்கோ எந்த சேதமும் இல்லாமல் போராட்டங்கள் நடத்துபவர்கள்.பிள்ளையார் சிலையைத் தங்கள் காசு கொடுத்து வாங்கி உடைத்தவர்கள்.
நடக்கும் காளித்தனத்திற்கு உரியவர்களைக் கண்டியுங்கள்.

Anonymous said...

எந்தக் கொம்பனோ அல்லது கொம்பியோ ஆனாலும் செய்த குற்றத்துக்குரிய
தண்டனையில் இருந்து தப்ப முடியாது. நாட்கள் சென்றாலும் நிச்சயம்
தண்டனை அனுபவிப்பார்கள்.

Anonymous said...

திராவிடர் கழகத்தின் தொடரும் அராஜகம்

25. தூத்துக்குடி கோயிலில் பீரோவை உடைத்து துணிகர கொள்ளை


தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோயிலுக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்குள்ள பீரோ மற்றும் உண்டியலை உடைத்து பணம் மற்றும் அம்மனுக்கு அணிவிக்கும் தங்கநகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தூத்துக்குடி,பாலிடெக்னிக் கல்லுõரி அருகே இந்துநாடார் உறவின்முறையினருக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன்பாக நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒருவரின் வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கு வந்த சில மர்ம ஆசாமிகள் வேனின் கதவு லாக்கை உடைத்து அதிலிருந்த டேப்ரிக்கார்டரை உடைத்து போட்டுவிட்டு, வேன் டயரை கழற்றும் லிவரை எடுத்துக் கொண்டு கோயிலின் வெளிச் சுவர் கதவை திறக்காமல் சுவரை தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர். உள்ளே நுழைந்ததும் வெளிக்கேட்டில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்திருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து அங்கிருக்கும் விநாயகர் கோயில், பெருமாள்கோயில்,அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் உள்ள உண்டியல் பூட்டுகளையும் உடைத்திருக்கிறார்கள்.அம்மன் கோயில் உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்குள்ள பீரோவின் லாக்கரை உடைத்து அதிலிருந்த தங்க பொட்டுத்தாலியை எடுத்துள்ளனர்.மேலும் அனைத்து பொருட்களையும் புரட்டி பார்த்துள்ளனர்.ஆனால் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிக் கிரீடத்தையோ குத்துவிளக்குகளையோ அவர்கள் எடுத்து செல்லவில்லை.

கோயிலுக்கு மேலே ஏறிய மர்ம ஆசாமிகள் அங்கிருந்த ஒலிபெருக்கி யூனிட்டையும் உடைத்திருக்கிறது. நேற்று அதிகாலையில் கோயிலை திறந்த பூசாரி இசக்கிமுத்து உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதையும், பொருட்கள் சிதறிகிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் உத்தமன்,சப்இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் நாராயணன்,ராஜமாணிக்கம்,ஜெயமணி உட்பட போலீசார் இது பற்றி விசாரணைசெய்து வருகின்றனர்.

கடிகாரத்தின் பேட்டரியை கழற்றி எறிந்துள்ளதால் அதிகாலை 3.20 மணியளவில் அந்த கடிகாரம் நின்றுள்ளது. போலீசார் விசாரணையில் இந்த சம்பவமும் 3.20 மணியளவில் நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது.எப்போதும் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழில் said...

Thamizan and anonies,
Thanks for the comments