Saturday, March 03, 2007

அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மதம்

அமெரிக்காவில் (US) மிக வேகமாக வளரும் மதங்கள் பற்றிய பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

http://www.adherents.com/rel_USA.html

1) Deity (Deist) தேயிஸ்ட் (இது தாமஸ் பெயின் அவர்கள் ஆதரித்த மதம், யூதர்களது பழைய ஏற்பாடு, கிறிஸ்துவர்களது புதிய ஏற்பாடு இரண்டையும் நிராகரிக்கும் மதம். ஏறத்தாழ இந்து தத்துவங்களை உள்ளடக்கியது) +717%
2) Sikhism சீக்கிய மதம் +338%
3) New Age புது யுகம் என்ற பெயரில் இந்து தத்துவங்களை பின்பற்றும் நவ பாகன் மதம் +240%
4) Hinduism இந்துமதம் +237%
5) Baha'i பஹாய் மதம் +200%
6) Buddhism புத்தமதம் +170%
7) Native American Religion அமெரிக்க பழங்குடியினர் மதம் +119%
8) Nonreligious/Secular நாத்திகவாதம் +110%

பிறகுதான் மற்ற மதங்கள் வருகின்றன

16 comments:

கால்கரி சிவா said...

நல்ல செய்தி. கனடாவில் உள்ள முன்னாள் கம்யூனிஸ்ட் நாட்டினர். இந்து மதத்திற்கு விரும்பி வருகின்றனர். ஏனென்றால் அவர்கள் அடிமைத்தனத்தையும் தனிமனித வழிபாட்டினையும் வெறுப்பவர்கள்

ஆதி said...

அருமையான தகவல். இதற்கும் சப்பைகட்டு கட்ட பாய் கூட்டம் பின்னாலேயே வரும் பாருங்கள்.

எழில் said...

நன்றி கால்கரி சிவா, நன்றி ஆதிசேஷன்

நம் இஸ்லாமிய சகோதரர்களை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தியில் பாய் என்றால் சகோதரர் என்று பொருள் என்று படித்திருக்கிறேன்.

நான் இதில் இஸ்லாமை பற்றி எழுதவில்லையே. ஏன் அப்படி கூறுகிறீர்கள்?

அரவிந்தன் நீலகண்டன் said...

எழில் சீக்கியம், புத்தம், சனாதனம் ஆகியவை 'மதங்கள்' என குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் 'ism' என்கிறார்கள். ஆனால் இவற்றின தருமங்கள் என அழைப்பதே பொருந்தும். இவை அனைத்துமே தமக்கு வெளியே இரட்சிப்பு கிடையாது என கூறாதவை.பூர்விக அமெரிக்க குடிகளின் ஆன்மிக பாதைகளும் ஆழமானவை அழகு நிறைந்தவை. அழிக்கப்பட்டு இன்று மீள் மலர்பவை. இந்து தரும ஆர்வலர்கள் இந்த பூர்விக தருமங்களுடன் நல்லுறவையும் இணை-செயல்பாடுகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆபிரகாமிய பரவுத்தன்மை கொண்ட மதங்களை எதிர்கொண்டு மானுட மாண்புகளை காக்க அத்தகைய உலகளவிய தார்மீக முயற்சி அவசியம். " இறை சக்தி வஜ்ரமான உனது அருளால் கொடியவர்களையும் நல்லவராக்கும் ஆற்றல் கொண்டவன் நீ. எமது பகையையும் இம்முறையில் அழிப்பாயாக " என வேண்டும் ஒரு ரிக்வேத பாடல். பரவுத்தன்மை கொண்ட சகிப்புத்தன்மை அற்ற ஆபிரகாமிய மதங்களும் தம் இத்தகைய எதிர்மறை இயல்புகளை இழந்து விஸ்வ தர்ம நீரோட்டத்தில் கிளைநதிகளாக இணைந்திடும் 'அந்த நாளும் வந்திடாதோ'!

வஜ்ரா said...

என்ன எழில் இதில் மோர்மொனிசம், சைண்டாலஜி எல்லாம் லிஸ்டில் இல்லை...

அவர்கள் வலைத்தளங்களைப் பார்தால் அவர்கள் தான் மிக வேகமாக வளரும் மதம் என்று மார்தட்டிக் கொள்கிரார்களே ?!!

எழில் said...

என்ன செய்வது? அவரவர்கள் தங்கள் மதம்தான் மிக வேகமாக வளரும் மதம் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

உண்மையோ வேறுவிதமாக இருக்கிறது..

Anonymous said...

is it not islam?

Anonymous said...

எழில்,
இந்த பர்சென்டேஜ் விவரம் எல்லாம் ஒரு மாதிரி bogus. பத்து பேர் இந்துக்களாக இருந்தார்கள் முன்னால் என்றால், 2 பேர் கூடினால் 20% அதிகரித்தது என்பார்கள். பத்து மிலியன் பேர் உள்ள ஒரு மதம் அதே சதவீதம் அதிகரிப்பைக் காட்ட எத்தனை பேரைக் கூட்ட வேண்டும்?
மொத்த ஆள்தொகை எவ்வளவு என்று காட்டாமல் சும்மா சதவீதத்தைக் காட்டுவது பயனற்ற வேலை, இல்லையா காம்ரேட்?

எழில் said...

உண்மைதான் சகோதரர் அனானி,

இந்துமதத்தை பொறுத்தமட்டில், 200 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக ஆகியிருக்கிறது.

மற்ற மதங்களின் எண்ணிக்கையை கொடுத்துள்ள இணைப்பில் பார்க்கலாம்.

நன்றி

Anonymous said...

ஹரே கிருஷ்ணா என்று சொல்லப்படும் இஸ்கான் இயக்கத்தில் 32000 முழு நேர ஊழியர்களும், சுமார் 250000 பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களை இந்துக்கள் என்று அமெரிக்க சென்ஸஸ் கருதுவதில்லை. அவர்களையும் சேர்த்தீர்களென்றால், அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மதம் இந்துமதமாகத்தான் இருக்கும்.

Anonymous said...

ஹரே கிருஷ்ணாவையும் இந்துமதத்தில் அமெரிக்க சென்ஸஸ் சேர்த்தால்,
யூதமதத்தினரை விட அதிகமாக இருக்கும் மதத்தினர் இந்து மதத்தினராகவே இருப்பர்.

கிரிஸ்துவத்துக்கு அடுத்தபடியாக பெரிய மதமாக இந்துமதமே இருக்கும்.

எழில் said...

நன்றி அனானி

Anonymous said...

"நல்ல செய்தி. கனடாவில் உள்ள முன்னாள் கம்யூனிஸ்ட் நாட்டினர். இந்து மதத்திற்கு விரும்பி வருகின்றனர். ஏனென்றால் அவர்கள் அடிமைத்தனத்தையும் தனிமனித வழிபாட்டினையும் வெறுப்பவர்கள்"

அடிமைத்தனத்தயும்,தனிமனித வழிபட்டையும் வெறுப்பவர்கள் இந்து மததில் இனைகிறார்களாம் யப்பா... சரியான காமெடி...ஒங்க காமெடிக்கு ஒரு எல்லையே இல்லையா.. ok ok தொடரத்தும்.

தமிழ்பித்தன் said...

ஆமாம் இந்தியாவிலே அதிகம் அழியும் தளம் எது அண்ணா?

Anonymous said...

அருமையான தகவல்.

Truth prevails over the propaganda

Gee said...

Exalant