Friday, August 15, 2008

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டுவீச்சு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டுவீச்சு

ஸ்ரீநகர், ஆக. 15-


இந்தியா- பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டில் இருந்து எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறை யில் உள்ளது. அதையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் சமீப காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஜம்மு பகுதியில் உள்ள ஆர்.எஸ். புரா எல்லையில் அதிகாலை 2 மணியளவில் அவர்கள் தாக்கினார்கள். இந்திய எல்லையில் இருந்த எல்லை பாதுகாப்பு முகாமை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது. முதலில் பீரங்கியால் சுட்டனர். பின்னர் ராக்கெட் குண்டுகளையும் வீசினார் கள்.

இதேபோல பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மாண்டி என்ற இடத்திலும் தாக்குதல் நடந் தது. ஆனால் இந்திய தரப்பில் பதிலடி தாக்குதல் நடந்ததாக தகவல் இல்லை. இந்திய வீரர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்றும் தெரிய வில்லை.

இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந் தார்.

தோடா மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை சீர் குலைக்கும் நோக்கத்துடன் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

No comments: