ஜார்ஜியா நாட்டின் வீடுகளில் கொள்ளையடிக்கும் ரஷிய ராணுவ வீரர்கள்
மாஸ்கோ, ஆக. 14-
ரஷியா தனது பக்கத்து நாடான ஜார்ஜியா மீது திடீரென போர் தொடுத்தது. விமானம் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசியதுடன் ரஷிய தரைப்படை ஜார்ஜியாவுக்குள் நுழைந்து ஒசாட்டியா நகரை கைப்பற்றியது. பின்னர் தலைநகரம் தெபிலிசியை நோக்கி படைகள் சென்றன.
சர்வதேச நாடுகள் எச்சரித்ததால் ரஷியா போரை நிறுத்தியது. தனது படையை திரும்பும்படி உத்தரவிட்டது.
இதன்படி ஒரு பிரிவு படை வாபஸ் ஆகி ரஷியா திரும்பி கொண்டிருக்கிறது. அவர்கள் ஜார்ஜியாவில் ஊருக்குள் புகுந்து வீடுகளிலும், கடைகளிலும் கொள்ளையடிப்பதாகவும், வீடுகளுக்கு தீ வைப்பதாகவும் ஜார்ஜியா குற்றஞ்சாட்டி உள்ளது.
அங்குள்ள கோரி நகரில் ரஷிய படை மிகவும் அட்டகாசம் செய்தது. வீடு வீடாக புகுந்து அங்கிருந்த மக்களை அடித்து விரட்டி விட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. சில வீடுகளை குண்டு வீசி தகர்த்தது.
ரஷிய ராணுவத்துக்கு பயந்து ஏராளமான மக்கள் ஊரை காலி செய்து விட்டு காட்டுப்பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment