Friday, August 08, 2008

பெங்களூரில் இன்றும் ஒரு குண்டுவெடிப்பு

SMS மூலமாக "குண்டு வெடிக்கும்" போன்ற செய்திகளை பரப்பாதீர்கள்.

பெங்களூரில் இன்றும் ஒரு குண்டுவெடிப்பு
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 8, 2008



பெங்களூர்: பெங்களூர் நாகரபாவியில் இன்று ஒரு சிறிய குண்டு வெடித்தது.

மைசூர் ரோட்டில் உள்ள நாகரபாவி பகுதியின் குப்பைத் தொட்டியில் இந்த குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.

முன்னதாக இது புரளி என போலீசார் தெரிவி்த்தனர். ஆனால், பின்னர் வெடித்தது குண்டு தான் என பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி தெரிவித்தார்.

இந்த குண்டு வெடிப்பால் பெங்களூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன் பெங்களூரில் ஒரு குண்டு வெடித்தது. மேலும் பல குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இந் நிலையில் இன்று காலை இந்த குண்டு வெடித்துள்ளது. இதையடுத்து குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர் பள்ளிகளுக்கு விரைந்ததால் பள்ளிகள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புரளி பரப்பிய 4 பேர் கைது:
இதற்கிடையே பெங்களூரில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே பிஇஎல் சாலையில் உள்ள சீனியப்பா லே-அவுட்டில் உள்ள ரங்கா அபார்ட்மெண்டில் காவலாளிகளாக பணிபுரிபவர்கள் ஆவர். மேலும் ஒரு காவலாளியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

விளையாட்டுக்காக இந்த புரளியை கிளப்பியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர்.

No comments: