26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple.
7 comments:
பேய் என்று நீங்கள் சொல்லுவது சரிதான்போலிருக்கிறது.
ஜெயமோகன் சொல்லும் தியாகத்திருவுருவம் இதுதானா?
:-))))
கருத்துக்களுக்கு நன்றி
Some explanation is given here:
http://tamilbibleqanda.blogspot.com/2009/08/blog-post_10.htmlk
விளக்கம் இங்கே யாரோ கொடுக்க முயற்சிக்கிறார்கள்:
http://tamilbibleqanda.blogspot.com/2009/08/blog-post_10.html
Light கூறும் பக்கத்தில் இருப்பது...
---
கீழ் கண்ட வரிகளுக்கு என்ன அர்த்தம்:
"யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்."
இதன் பொருள்:
தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் விட அதிகமாய் என்னை நேசிக்காதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
மேலே கூறப்பட்ட வசனமானது குறிப்பாக முழு நேர சேவை செய்ய விரும்புகிற சீஷர்களுக்கு (போதகர்களுக்கு, தேவ ஊழியர்களுக்கு) முக்கியமானதாகும்.
"தேவன் அன்பாகவேயிருக்கிர்றார். புருஷர்களே உங்கள் மனைவிகளிடத்தில் அன்பு கூருங்கள், மனைவிகளே உங்கள் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள்" என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
யோவான் 15:9.ல் பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
யோவான் 15:12ல் நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது என்று இயேசு கூறியிருக்க மேலே கூறப்பட்ட வசனத்தை சிலர் தவறாக விளங்கிக்கொள்கிறார்கள்.
I) மாற்கு 1:30ல் அப்போஸ்தலனாகிய பேதுரு திருமணம் ஆனவர் என்று காண்கிறோம். [ அங்கே சீமோனுடைய (பேதுருவின்) மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; ] பேதுருவுக்கு தன் வீட்டின் மேல் ஒரு சிந்தை இருந்ததாக நாம் இதன் மூலம் தெரிகிறது. இயேசுவோ இந்த பேதுருவைக்கொண்டு தன் சபையை கட்டி எழுப்ப சித்தம் கொண்டிருந்தார். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு பேதுரு பின்மாற்றம் அடைந்து மீண்டும் மீன் பிடிக்க சென்றார். அங்கே தான் இயேசு தோன்றி யோனாவின் குமாரனாகிய சீமோனே "இவர்களிலும் அதிகமாய் நீ" என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என் ஆட்டுக்குட்டிகளை(சபையை/ஆத்துமாக்களை) மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21)
இங்கு "மனைவியையும் .... சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும்" காட்டிலும் நீ என்னை நேசிக்கிறாயா? என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
ஆங்கிலத்தில்:
[1] மத்தேயு 19:29 - forsake (விட்டுவிடுதல்)
[2] மாற்கு 10:19 - forsake (விட்டுவிடுதல்)
[3] மத்தேயு 10:37 - Loving more than ( அதிகமாக நேசித்தல்)
[4] லூக்கா 14:26 - hate (வெறுத்துவிடுதல்)
இந்த வசனங்கள் அனைத்தும் வெறுப்பு (hatred) என்கிற அர்த்தத்தில் அல்ல, விட்டுவிடுதல், தேவனை இவை எல்லவற்றைக்காட்டிலும் அதிகமாக நேசித்தல் அல்லது இவைகளை ஒதுக்கி வைத்து விடுதல் என்றே அர்த்தமாகும்.
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கட்டளை.
II) தேவன் ஆபிரகாமை "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்." ஏன்? அவன் தன் மகனை தேவனைக்காட்டிலும் அதிகமாக நேசித்தான். அவனைபலியிட கொண்டு சென்ற பின் தேவன் அவனை தடுத்து நிறுத்தி: "நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்." இங்கே நேசகுமாரன் என்று தேவன் கூறவில்லை! சற்றே யோசித்து பாருங்கள் !
இந்த வசனங்கள் அனைத்தும் வெறுப்பு (hatred) என்கிற அர்த்தத்தில் அல்ல,
என்று இவர் விளக்கம் கொடுக்கிறார்.
எழுதி வைத்ததே வெறுக்கவேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.. இவர் தாய் தந்தை மனைவி பிள்ளையை விட அதிகமாக ஏசுவை அன்பு கூர வேண்டும் என்று விளக்கம் கொடுக்கிறார்.
அதற்கு பைபிளிலேயே அதுமாதிரி எழுதியிருக்கலாமே? எதற்கு தாய் தந்தை மனைவி மக்க்களை வெறுக்கவேண்டும் என்று எழுதவேண்டும்?
பைபிளில் முழுவதுமே முன்னுக்கு பின் முரணான வசனங்கள் இருக்கின்றன. ஒரு இடத்தில் மத்தேயு ஒரே விஷயத்தை ஒரு மாதிரி எழுதுகிறார். மற்றொரு இடத்தில் மாற்கு இன்னொரு மாதிரி எழுதுகிறார். லூக்கா இன்னொரு மாதிரி எழுதுகிறார். ஆளாளுக்கு ஒரு வசனம். என்னடா இப்படி இருக்கிறதே என்றால், எல்லோரையும் கலந்துகட்டி ஒரு சால்ஜாப்பு.
மனிதர்கள் எல்லாம் இங்கே ஆடுமாடுகள் மாதிரி. இங்கே மேய்ப்பார்கள். சொந்த புத்தி இருக்ககூடாது என்பதற்காகத்தான்.
Post a Comment