Tuesday, August 12, 2008

இறைவன் ஒருவனே இயக்கதை வலுப்படுத்த இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல திட்டமிட்டோம் - அமைதிமார்க்கத்தினர்

இறைவன் ஒருவனே இயக்கதை வலுப்படுத்த இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல திட்டமிட்டோம்; 10 நாள் விசாரணையில் தீவிரவாதிகள் வாக்கு மூலம்

நெல்லை, ஆக.11
-


தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சதி திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் அலி அப்துல்லா, ஹீரா, அப்துல் கபூர் ஆகிய 3பேரை நெல்லை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட இவர்களை கடந்த 1-ந்தேதி இரவு முதல் போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன், மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா ஆகியோர் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள் ஜெயசந்திரன், கல்பனா நாயக், தலைமையில் உதவி கமிஷனர் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் தங்ககிருஷ்ணன், முகம்மது மைதீன், நாகராஜன், ராஜ்குமார், பர்னபாஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 10நாட்களாக தீவிர விசாரணை நடத்தினார் கள்.

இதன் அடிப்படையில் 3தீவிரவாதிகளிடம் இருந்தும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தயார் செய்தனர். முதலில் 3தீவிரவாதிகளும் கையெழுத்து போட மறுத்துள்ளனர். அதன் பிறகு போலீசார் விசாரணையில் பல்வேறு கட்டங்களில் நீங்கள் கூறிய தகவலின் அடிப்படையில் தான் வாக்குமூலம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் அலி அப்துல்லா, ஹீரா, அப்துல் கபூர் ஆகிய 3பேரும் வாக்கு மூலத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்.

அந்த வாக்கு மூலத்தில் அவர்கள் கூறியிருப்பதாக கூறப்படுவதாவது:-

`இறைவன் ஒருவனே' இயக்கம் மூலம் நாங்கள் இளைஞர்களிடம் எங்கள் கருத்தை கூறி, எங்கள் அமைப்பை வலுவுள்ள அமைப்பாக மாற்றி வந்தோம்.

எங்கள் சமுதாயத்தை அவமதிக்கும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் வெடிகுண்டு வைத்து அவர்களை கொலை செய்ய வேண்டும் என்றும் அலி அப்துல்லாவுடன் இணைந்து திட்டம் தீட்டினோம்.

எங்கள் சமுதாய இளைஞர்களை வஞ்சிக்கும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அலுவலகத்தில் குண்டு வைத்து அவர்களை எச்சரிக்கவும் திட்டம் தீட்டினோம்.

வருகிற சுதந்திர நாளான ஆகஸ்டு 15-ல் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஹீரா ஏற்பாட்டில் அப்துல் கபூர் டைமர் கருவியை செய்து வந்தார். ஆனால் அதற்குள் எங்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து விட்டனர். எங்கள் அமைப்பின் தலைவர் தவுபீக் எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தடா கைதிகள் ராஜா உசேன் உள்பட சில கைதிகளுடனும் தொடர்பு வைத்து இருந்தோம்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் போலீசார் தீவிரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்த குறிப்பிட்ட நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் டைமர் கருவிகள், சில டைரிகளில் உள்ள டெலிபோன் எண்கள், அவர்கள் அறையில் சோதனை செய்த போது பிடிப்பட்ட பொருட்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்கிறார்கள். இன்று மாலை போலீசார் பலத்த பாதுகாப்புடன் 3தீவிரவாதிகளையும் கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள். அதன் பிறகு 3தீவிரவாதிகளையும் பலத்த பாதுகாப்புடன் பாளை. சிறைக்கு கொண்டு சென்று தனிமைச் சிறையில் அடைக்கிறார்கள்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தீவிரவாதிகளின் தலைவன் தவுபீக் மற்றும் அவனது கூட்டாளிகள் சிலரையும் நெல்லை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

No comments: