தேசிய கொடி-கச்சத்தீவுக்கு சென்றவர்கள் கைது
சனிக்கிழமை, ஆகஸ்ட் 16, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், கச்சத்தீவை மீட்கக் கோரியும், கச்சத்தீவில் தேசிய கொடியற்ற கிளம்பிய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கச்சத்தீவில் தேசியக் கொடியேற்றும் போராட்டத்தை நடத்த இந்து மக்கள் கட்சி தீர்மானித்திருந்தது.
இப்போராட்டத்திற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். மேலும் ராமேஸ்வரத்தில் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று இந்து மக்கள் கட்சியினர் 34 பேர் ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்து ரயில் மூலம் வந்தனர். அங்கிருந்து தேசியக் கொடியுடன் ஊர்வலமாக கிளம்பினர். அவர்களை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment