Wednesday, August 06, 2008

இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் 1994 கொலை- இப்போதுதான் விசாரணைக்கு அனுமதி

ராஜகோபாலன் கொலை-நெல்லை நீதிபதிக்கு சிறப்பு அனுமதி
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 5, 2008


நெல்லை: இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கை விசாரிக்க நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதிக்கு உள்துறை அமைச்சகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கடந்த 1994ம் ஆண்டு மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய ஜாகீர் உசேன், அப்துல் அஜீஸ், ராஜா உசேன் உள்பட 6 பேரை போலீசார் தடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஜாகீர் உசேன், அப்துல் அஜீஸ் சென்னை சிறையிலும், ராஜா உசேன் மதுரை சிறையிலும், சுபையர், சாகுல் ஹமீது சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்கில் தொடர்புடைய சீனி நைனா முகமது ஜாமீனில் உள்ளார்.

தடா வழக்கை சிறப்பு அதிகாரம் பெற்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்பதால் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துககு கடந்த ஆண்டு உள்துறை செயலகம் தடா வழக்கை விசாரிக்க சிறப்பு அனுமதி அளித்தது. நீதிபதி பாஸ்கரன் வழக்கை விசாரித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி பாஸ்கரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனால் தடா வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து முதன்மை மாவட்ட நீதிமன்றம், தடா வழக்கை விசாரிக்க சிறப்பு அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதன்மை மாவட்ட நீதிபதி விஜயராகவன் தடா வழக்கை விசாரணை செய்ய உள்துறை செயலகம் சிறப்பு அதிகாரம் வழங்கியது. இதையடுத்து வரும் 19ம் தேதி தடா வழக்கு விசாரணைக்கு வருகிறது.

No comments: