மதுரையை தலைநகராகக் கொண்டு மாநிலம் - தென்மாநில இயக்கம் கோரிக்கை
புதன்கிழமை, பிப்ரவரி 6, 2008
தூத்துக்குடி: தமிழகத்தின் தென்பகுதி வளர்ச்சி பெற மதுரையை தலைநகரமாக கொண்டு புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று தென் மாநில இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் தென்மாநில இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. செயலாளர் சிம்சன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சங்கை மணி முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் கிருஷ்ணகாந்தன் பேசினார்.
அதில், தென் மாவட்ட மக்களின் வளர்ச்சியை கருதி மதுரையை தலைநகராக கொண்டு புதிய மாநிலம் அமைக்க வேண்டும். அந்தியவாசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உப்பு தொழிலையும், வேளாண்மை தொழிலாக கருதி வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். வைப்பாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி தட்ஸ்டமில்
1 comment:
அப்ப வடக்கு வன்னியநாடா?
Post a Comment