Friday, February 15, 2008
கலிபோர்னியா சிவ - விஷ்ணு கோயிலில் ஷ்ரீ மத்வ நவமி திருவிழா வரும் 23 ம் தேதி
கலிபோர்னியா: கலிபோர்னியா சிவ - விஷ்ணு கோயிலில் ஷ்ரீ மத்வ நவமி திருவிழா வரும் 23 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து கம்யூனிட்டி மற்றும் கல்ச்சர் மையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் இக்கோயிலில் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், நடைதிறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைதிறந்திருக்கும். இங்குள்ள கனகதுர்கை கோயிலில் மட்டும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 16 ம் தேதி புரந்தரதாசர் ஆராதனை விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு மதியம் 2 மணி முதல் 5மணி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 23 ம் தேதி மாதவ நவமி திருவிழா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு கோயிலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்நிகழ்ச்சி விவரம் வருமாறு : காலை 7 மணி முதல் 10 . 30 வரை சாலிகிராம பூஜையும் , ஸ்தோத்திர பதனாவும் தொடர்ந்து மத்வாச்சாரியாருக்கு பிரவாச்னையும் நடக்கிறது. 10 மணி முதல் 12 மணி வரை ஷ்ரீமத் ஆச்சார்யா ரதஉற்சவம், ஷ்ரீ முக்கிய பிரணதேவாவுக்கு அர்ச்சனையும், தொடர்ந்து மங்கல ஆரத்தியும் நடக்கிறது. மதியம் 12. 30 க்கு அலங்கார பூஜையும் தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படுகிறது. மதியம் 3 மணி முதல் 4 மணி வரை இசை நிகழச்சியும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை குழந்தைகள் பங்கேற்கும் நிகழச்சியும் நடக்கிறது. 5 மணி முதல் 7 மணி வரை பஜனை தொடர்ந்து ஆரத்தி நடக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment