தமிழகத்தை அடியோடு தகர்க்க சதி! லாரி நிறைய வெடிகுண்டுகள்; தீவிரவாதி தவ்பீக் சிக்கினான்
நெல்லை, ஆக. 4-
தமிழகத்தின் பல இடங்களில் ஒரே சமயத்தில் வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்த, லாரி நிறைய வெடி குண்டுகளுடன் தீவிர வாதிகள் சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. நெல்லை, பேட்டையில் கடந்த மாதம் 26-ந்தேதி தீவிரவாதி அப்துல் கபூரை போலீசார் முற்றுகையிட்டு கைது செய்தனர்.
அவனிடம் விசாரணை செய்த போது நெல்லை, சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி வெடி குண்டு சம்பவங்களை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் உள்ள அலி அப்துல்லா மற்றும் தீவிரவாதி ஹீரா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகிற 11-ந்தேதிக்குள் விசாரணையை முடித்து விட்டு அவர்களை கோர்ட் டில் ஒப்படைக்க வேண்டும்.
நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் அவர்களை தனித்தனி அறைகளில் அடைத்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் சதித்திட்டத்துக்கு மூளை யாக இருந்து செயல்பட்ட வன் `இறைவன் ஒருவனே' அமைப்பு தலைவன் தவ்பீக் என்பது தெரிய வந்தது.
இவனது தலைமையில் மொத்தம் 30 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி பல இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டுள்ளனர். இது பற்றி தீவிரவாதி அலி அப்துல்லா கூறும் போது "எங்களை பிடித்து பயன் ஒன்றும் இல்லை. திட்டமிட்டபடி வெடி குண்டு சம்பவம் நடந்தே தீரும். அதனை யாராலும் தடுக்க முடியாது'' என்றான்.
தீவிரவாதி அப்துல் கபூர் கூறும் போது "எனக்கு ஒன்றும் தெரியாது. ஹீரா சொன்னபடி நான் செயல்பட்டு வந்தேன்'' என்றான். மற்றொரு தீவிரவாதி யான ஹீரா கூறும் போது "எங்கள் இயக் கத்தில் மொத்தம் 30 பேர் இருக்கிறோம். எல்லா விஷயங்களும் தவ்பீக்கிற்குத்தான் தெரி யும். அவன் இப்போது கேரளாவில் இருக்கிறான். அவனுடன் மேலும் சிலர் உள்ளனர்'' என்றான்.
இதனையடுத்து 10 பேர் கொண்டதனிப்படை போலீசார் கடந்த சனிக் கிழமை இரவு கேரளா சென்றனர். திருவனந் தபுரம் சென்ற அவர்கள் இரவு, பகலாக ரகசிய தேடுதல் வேட்டை நடத்தினர். கேரள போலீசாரின் ஒத்துழைப்புடன் அங்குள்ள பள்ளிவாசல்கள் லாட்ஜ்கள் ஆகியவற்றை கண்காணித்தனர்.
முன்னதாக நெல்லை ஆயுதப்படை மைதா னத்தில் தீவிரவாதிகளிடம் விசா ரணை நடத்திய போது அவர்கள் பயன்படுத்திய செல்போன்களின் நம்பர் கள் அனைத்தையும் போலீசார் சேகரித்து ஒவ் வொரு எண்களுக்கும் தீவிரவாதிகளை வைத்தே தொடர்பு கொள்ளச் செய் தனர்.
மேற்கண்ட செல்போன்கள் மூலம் அவர்கள் நூற்றுக்கணக்கான பேரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் 'தவ்பீக்' மற்றும் அவனது கூட்டாளி கள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் தெரிந்து கொண்டனர்.
அப்துல்கபூர் கொடுத்த ஒரு முக்கிய தீவிரவாதி யின் செல்போன் நம்பரை பிடித்து அந்த போன் நம்பர் மூலமாக மிக நூதனமாக `தவ்பீக்' இருக்கும் இடத்தை அறிந்தனர். இந்த நிலையில் தீவிரவாதி கும்பல் தலைவன் தவ்பீக்கை நெல்லை போலீசார் சுற்றி வளைத்து விட்டதாக கூறப்படுகிறது.
வருகிற 11-ந் தேதி 3 தீவிரவாதிகளை கோர்ட்டில் ஒப்படைக்கும் போது தவ்பீக்கையும் சேர்த்து ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து நெல்லை மாநகர கமிஷனர் மஞ்சு நாதா கூறும் போது, "திருவனந்த புரத்தில் நடந்த சோதனை பற்றி நான் எதுவும் கூற முடியாது. வழக்கு விசாரணைக்கு வரும் போது எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்'' என்றார்.
இதற்கிடையே சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதிக்கு முதல் நாள் இரவு தீவிரவாதிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நெல்லை, சென்னையில் பயங்கர வெடி குண்டு சம்பவத்தை நடத்த திட்ட மிட்டுள்ள அதிர்ச்சி தகவல் கள் தெரிய வந்துள்ளது. இது பற்றிய நெஞ்சை உறைய வைக்கும் தகவல்கள் வருமாறு:-
சென்னை, மண்ணடியில் தொடங்கப்பட்ட `இறைவன் ஒருவனே' அமைப்பும், `சிமி' அமைப்பும் இணைந்து சதித் திட்டம் தீட்டி உள்ளனர். சிமி அமைப்பைச் சேர்ந்த 5 தீவிர வாதிகள் `தவ்பீக்' கிற்கு தேவை யான உதவிகளைச் செய்துள்ளனர்.
இவர்களின் சதித்திட்டத்திற்கு முதலில் நெல்லையைத் தான் தேர்வு செய்துள்ளனர். காரணம் நெல்லை மீது யார் கவனமும் இருக்காது என்பது தான். இங்குள்ள கலெக்டர் அலுவலகம், நெல்லையப் பர் கோவில், மாநகராட்சி அலுவலகம், தென்காசி டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் பல இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
இதே சமயத்தில் சென்னையிலும் குண்டு வைத்தால் தான் அகில இந்திய அளவில் பேசப்படும் என்பதால் எழும்பூர் ரெயில் நிலையம், அண்ணா மேம்பாலம் ஆகியவற்றை குறி வைத்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ëந்த குண்டு வெடிப்பின் மூலம் அண்ணா மேம்பாலத்தை அடியோடு தகர்க்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலையும் அவர்கள் குறி வைத்துள்ளனர்.
இதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு `சிமி' இயக்கத்தவரால் ஒரு லாரி நிறைய வெடிகுண்டுகள் பெங்களூரில் இருந்து புறப்பட்டுள்ளது. `பெட்ரோல் டேங்க்' போல் வடிவமைக்கப்பட்ட இந்த லாரிக்குள் ஏராளமான வெடிகுண்டுகள், டைமர் கருவிகள் அடைக்கப்பட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கேரள போலீசாரின் கண்களை மறைத்து விட்டு வெடிகுண்டு லாரி திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்துவிட்டது. ஆகஸ்டு 15-ந்தேதிக்கு முன்னதாக இந்த லாரியை நள்ளிரவில் செங்கோட்டை வழியாக நெல்லை மாவட்டத்திற்குள் ஊடுருவச் செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றை அரங்கேற்று வதற்கு அப்துல் கபூரும், ஹீராவும் நெல்லையில் இருக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலை யில் அவர்கள் இருவரை யும் போலீசார் பிடித்து விட்டனர்.
இந்த நிலையில் வெடி குண்டுடன் வந்த `பகீர்' லாரியை தேடும் படலம் கேரளாவில் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி விட்டது. திருவனந்தபுரம், கொல் லம், புனலூர் பகுதி களில் போலீசார் ஒவ்வொரு லாரியாக சோதனையிட்டு வருகின்றனர்.
ஏதாவது கடற்கரை பகுதி அல்லது மலைப்பகுதியில் லாரி மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்கிற ரீதியிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.
இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட எல்லைப்பகுதி பபோலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment