Friday, August 01, 2008

நபித்துவம் ஒரு மூட நம்பிக்கை - கடுமையாக விமர்சிக்கும் பெரியார்!

முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம்.
கடவுளுக்குத் தூதர் எதற்கு?
குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.
கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா?
கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா?


உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா? ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன். இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன?

14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" - தொகுதி: 2 … பக்கம்:57-62 14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" - தொகுதி: 2 … பக்கம்:57-62

நன்றி தமிழ் ஓவியா

--

மேலே குறிப்பிட்டுள்ள பெரியாரின் கேள்வி மிகவும் முக்கியமான கேள்வி.

நபித்துவம் என்பதன் அஸ்திவாரத்தையே அசைக்கிறது இந்த கேள்வி. மனிதர்களுக்கு கடவுள் ஏதோ சொல்லவேண்டுமென்றால், அதனை ஏன் தூதர்கள் வழியாக சொல்லவேண்டும்? ஒட்டுக்க எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மூளையில் உதயமாகலாமே?

//முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்?//

இதுவும் முக்கியமான வாதம். ஏனென்றால், எல்லோருக்கும் பயன்படவேண்டுமென்று இறைவன் கருதியிருந்தால், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கூறியிருக்கலாம்.

அல்லது யாராக இருந்தாலும் அவரது காதில் அவரது மொழியில் சதா இறைவாக்கை கூறிக்கொண்டே இருக்கும் ஒரு வாயை காதின் மேலேயே உருவாக்கியிருக்கலாம். எழுதி வைத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பொருள் சொல்கிறார்கள். அரபி மொழி தெரியாதவர்கள் அரபி மொழி தெரிந்தவர்களை நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதிலும் 7 ஆம் நூற்றாண்டு அரபி மொழி பண்டிதர்களாகவும் இருக்கவேண்டி வருகிறது.

அப்படியிருந்துமே குரானில் இதுதான் அர்த்தம் என்று ஆளுக்காள் பொருள் கூறுகிறார்கள். இங்கிருந்து ஜைனுலாபுதீன் அரபி மொழி தாய்மொழியாக கொண்டவர்களுக்கே ஒன்றும் தெரியாது என்று உதார் விடுகிறார். ஒரே புத்தகத்தை வைத்துக்கொண்டு இருநூறு முஸ்லீம் கட்சிகள் இருக்கின்றன. ஒரே புத்தகத்தை வைத்துகொண்டு 300 கம்யூனிஸ்டு கட்சிகள் இருப்பது போல.

ஒரே புத்தகத்தை வைத்துகொண்டு ஒரு இஸ்லாமியர் பயங்கரவாதம் தவறு என்று கூறுகிறார். மற்றொருவர் காபிரி கழுத்தை வெட்டு என்று சொல்கிறார். சொல்வது மட்டுமல்ல செய்யவும் செய்கிறார். மற்றொருவர் பெண்களுக்கு படிப்பு சொல்லித்தரவேண்டும் என்கிறார். மற்றொருவர் பெண்கள் பள்ளிக்கூடத்தில் குண்டு வைத்து உடைக்கிறார்.

இதெல்லாம் பார்க்கும்போது பெரியாரின் விமர்சனம் சரி எனலாம். நபித்துவமே ஒரு மூட நம்பிக்கை என்று பெரியார் கூறுகிறார்.

இவ்வளவு தைரியமாக கூறிவிட்டு சென்றிருக்கும் பெரியாருக்கு பாராட்டுகள்.

எடுத்து கொடுத்த தமிழ் ஓவியாவுக்கும் நன்றிகள்.

4 comments:

Anonymous said...

ஒருவழியாக பெரியாரை பாராட்ட வைத்துவிட்டீர்கள்

Anonymous said...

நேரடியாகவே நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சித்துள்ள பெரியார் புத்தகங்களை தெருவில் வைத்து கொளுத்த எந்த தமிழ்நாட்டு முஸ்லீம் முல்லாக்களுக்கு தைரியம் உண்டா?

இதனை ஆதரித்துத்தானே அவர்கள் திமுகவுடன் நெருங்கிய கூட்டணியில் உள்ளனர்?

இந்த அளவுக்காவது அவர்களை பெரியார் சொல் கேட்கவைத்த கலைஞரை பாராட்டவேண்டுமல்லவா?

எழில் said...

கருத்துகளுக்கு நன்றி

Anonymous said...

well done Periyar!