கச்சத்தீவில் கொடியேற்றுவோம்-இந்து மக்கள் கட்சி
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 1, 2008
தஞ்சாவூர்: தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் வகையில், சுதந்திரமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
தஞ்சையில் இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கச்சத்தீவு இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டதே காரணம்.
தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டவும், இந்த பிரச்சனையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் சுதந்திரமான ஆகஸ்ட் 15ம் தேதி கச்சத்தீவில் தேசிய கொடியேற்றப்படும்.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமையில் இந்த விழா நடைபெறும்.
கடலூர் மாவட்டம் திருவதிகையில் உள்ள கோயிலில் தடையை மீறி தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடத்தப்படும்
சிமி மற்றும் அல்உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
மதுரை, கொச்சி, வயநாடு மற்றும் பெங்களூரில் இவர்கள் சுதந்திர தினத்தன்று கைகளில் பச்சை கொடிகளுடன் பேரணி நடத்தவுள்ளனர். இதற்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
மீறி அனுமதி அளித்தால் இந்து அமைப்புகள் அன்றைய தினம் கைகளில் காவிக் கொடியேந்தி பேரணி நடத்தும் என்றார் அவர்.
No comments:
Post a Comment