இதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.
கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம்.
ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம்.
குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.
அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு?
கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்?
அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா?
குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள் இல்லையா?
அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்?
அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்?
அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை?
இன்று ஏன் அவர் வரவில்லை?
இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்?
தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?
இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது?
14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" - தொகுதி: 2 … பக்கம்:57-62 14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" - தொகுதி: 2 … பக்கம்:57-62
நன்றி தமிழ் ஓவியா
4 comments:
At least Periyar was consistent unlike the periyar's followers.. who are scared of Christians and Muslims.
கருத்துக்கு நன்றி
இதே பெரியாரின் சீடர்கள் இன்று கிறிஸ்துவ மதத்தை தோமா கிறிஸ்துவம் என்று ஜல்லி அடிக்கிறார்கள்..
கருத்துக்கு நன்றி
Post a Comment