நெல்லையப்பர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சனிக்கிழமை, ஆகஸ்ட் 2, 2008
நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் தொடர் வெடிடுகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தமிழக்த்தில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த இருந்த தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிரவாதிகள் அலி அப்துல்லா, நெல்லையைச் சேர்ந்த ஹீரா மற்றும் அப்துல் கபூர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலும், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவிலும் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருந்ததால் அங்கு உச்சகட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் 3 பேரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க அவர்களை போலீசார் நேற்று நெல்லை கொண்டு வந்தனர். இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி தெய்வநாயகத்துக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அதில், ஹீராவை விடுதலை செய்யாவிட்டால், நெல்லையப்பர் கோவில், சாலை குமார கோவில், திருவேங்கடநாதபுரம் கோவில்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நெல்லையப்பர் கோவில் உள்பட 3 கோவில்களுக்கும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment