திருநெல்வேலி: தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி பைப் வெடிகுண்டு வெடித்தது. தொடர்ந்து புதிய பஸ்நிலையத்திலும் குண்டு வெடித்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார், குண்டு வைத்ததாக, தென்காசி மலையான் தெரு, ரவி பாண்டியன்(42), செண்பக விநாயகர் கோவில் தெரு, குமார் (எ) கேடிசி குமார் (28), செங்கோட்டை ஆற்றங்கரை தெரு, நாராயணசர்மா (26) ஆகியோரை கைது செய்தனர்.
இது குறித்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., சஞ்சீவ்குமார், டி.ஐ.ஜி., கண்ணப்பன் ஆகியோர் கூறியதாவது:
ரவிபாண்டியனின் சகோதரர்கள் நான்கு பேர் கொலை செய்யப்பட்டனர். இதில், இந்துக்களிடம் போதுமான எழுச்சி ஏற்படவில்லை. இதனால், தென்காசியில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம், பஸ் நிலையத்தில் குண்டுகள் வைத்தால் இரு தரப்பினரும் மோதிக் கொள்வர். கலவரம் ஏற்படும் என எதிர்பார்த்து டைம்பாம் தயாரித்து வைத்துள்ளனர். ரவிபாண்டியன் கேபிள் "டிவி' நடத்தி வருகிறார். அவர் பாலிடெக்னிக் படித்துள்ளார். அதனால் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவது அவருக்கு எளிதாக இருந்துள்ளது.
ரவிபாண்டியனுக்கு கேடிசி குமார், நாராயணசர்மா மற்றும் சிலர் துணையாக இருந்து டைம்பாம் தயாரித்துள்ளனர். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வெடிபொருள் அமோனியம் நைட்ரேட். முதலில் இவர்கள் டைம்பாம் தயாரித்து பாபநாசம் மலைப்பகுதியில் வெடித்து சோதனை செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதமே டைம்பாம் தயாரிக்கும் திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரும்பு குழாய்க்குள் டெட்டனேட்டர் மற்றும் வெடிபொருட்கள் வைத்து மூடியுள்ளனர். அதில் உள்ள ஒயரில் எலக்ட்ரானிக் போர்டு மூலம் பாட்டரியை இணைத்துள்ளனர். பின்னர் வெடிகுண்டு வெடிக்கும் நேரத்தை குறிக்கும் எலக்ட்ரானிக் டைமரை அத்துடன் சேர்த்து வைத்து வெடிக்க வைத்துள்ளனர். 14 டைம் பாம்கள் தயாரித்துள்ளனர். இவற்றை இரண்டு இரண்டாக சேர்த்து வைத்து வெடிக்க வைத்துள்ளனர். ஒரு செட் டைம்பாமை கைப்பற்றி செயலிழக்க செய்துள்ளோம். இதில் தொடர்புடைய இன்னும் சிலர் கைது செய்யப்பட்ட பின்னர் வழக்கு முழுமை பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி தினமலர்
-
அமைதிமார்க்கமான இந்துமதத்துக்கு களங்கம் விளைவிக்கும் படி நட்ந்துகொண்ட இந்த இந்து பெயர் தாங்கிகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
1 comment:
r u think they r terriost
Post a Comment