Tuesday, May 01, 2007

ஜோஸப் ஸ்டாலின் ஆவணப்படம் பாகம் 1

ஹிஸ்டரி சேனலின் ஜோஸப் ஸ்டாலின் ஆவணப்படம்.



ஒரு கொடுங்கோலனை அவன் மீது கட்டப்படும் விளம்பர பிம்பங்களை தாண்டி புரிந்துகொள்ள இது உதவலாம்.

அடுத்த பாகங்கள் அடுத்த பதிவுகளில்

7 comments:

Naina said...

எல்லாம் வல்ல ஏக இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் காய்கறி நருக்கும் போது தவறுதலாக கையை வெட்டிக் கொண்டாலும் கூட, அதையும் ஒரு மத சார்பு தீவிரவாதமாக சித்தரித்து, மக்கள் மனங்களில் குரோதத்தையும் விரோதங்களையும் வளர்த்து, மக்களை பிரித்தாள கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் சங்பரிவார சாதனையாளர் சகோதரர் எழில் அவர்களே!

காவல் துறையும், ஊடகங்களும் காவிகளின் கைப்பாவையாக மாற்றப்பட்டு வருகிறதோ என்ற அச்சவுணர்வை ஏற்படுத்திவுள்ள குஜராத் போலி எண்கெளண்டர்கள் இன்று அம்பலமாகியுள்ளது. இந்த செய்திகள் தங்களின் காதுகளை எட்டவில்லையோ?

லக்ஷரி தோய்பா, ஜெய்சீ முஹம்மது என்னும் துருப்பு சீட்டுகள், அப்பாவி முஸ்லிம்களை அநியாயமாக பலியிடவும், முஸ்லிமல்லாத மக்கள், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கருதிடவும் பயன்படுத்தப்படுகிறது என்ற அச்சமும், காவிக்கும்பல்கள் அரசு, நிர்வாக துறைகளில் ஊடுறுவி மக்களின் அமைதியான வாழ்க்கையில் பெரும் சதிகளை செய்து வருகிறது என்னும் அச்சமும், இந்தியாவில் தீவிரவாதிகள் அதிகாரிகள் என்ற போர்வையில் பதுங்கிவுள்ளார்கள் என்ற சந்தேகங்களும் இந்த போலி எண்கெளண்டர்கள் மூலம் அம்பலப்படுத்தபட்டுள்ளதே அறிவீர்களா?

உலகத்திலுள்ள தீவிரவாத செய்திகளை திரட்டும் நிபுணர் சகோதரர் எழில் அவர்களே!

அப்பாவிகள், தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு அநியாயமாக சுட்டு கொள்ளபட்டார்கள். அப்போது முதல் பக்கம் கட்டி முதன்மை செய்திகள் போட்ட ஊடகங்கள், போலி எண்கெளண்டர் தகவல்களை இன்று ஒரு மூலையில் பெட்டி செய்தியாக பேடுகின்றனர். போலி எண்கெளண்டரின் ஒரு பெண்ணின் கதி என்ன ஆயிற்று என்பது நவம்பர் 2005ல் இருந்து நேற்று வரை தெரியாமல் இருந்து. இன்று குஜராத் பாஸிச அரசு அப்பெண்ணும் கொல்லப்பட்டு, அந்த சகோதரியின் பிரேதம் அவளின் மதவுணர்வுக்கு மாறாக எரிக்கபட்ட தகவலை தந்துள்ளது. ஆள்பவனும், அதிகாரிகளும் ஒரு சேர அக்கிரமக்கார்களாக இருப்பது சங்பரிவார கும்பல்களால் மட்டுமே முடியும். தீவிரவாதத்தை உருவாக்கும் களமாக சங்பரிவார் இருக்கிறது என்பது தான் உண்மை.

"சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயம் அசத்தியம்னது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக!" திருக்குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 81 .

நெய்னா முஹம்மது

அரவிந்தன் நீலகண்டன் said...

மேதினம் மேதினம் என்று கதைவிட்டு பொன்னுலகம் விளையும் என்று பிணங்களை புதைக்கும் கும்பல்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

எழில் said...

//உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் காய்கறி நருக்கும் போது தவறுதலாக கையை வெட்டிக் கொண்டாலும் கூட, அதையும் ஒரு மத சார்பு தீவிரவாதமாக சித்தரித்து,//

நைனா,

ஜோஸப் ஸ்டாலின் பதிவில் ஏன் இதனை எழுதவேண்டும்? அப்படி காய்கறி வெட்டியதை பயங்கரவாதமாக எழுதிய பதிவின் கீழ் எழுதியிருக்கலாமே?

Unknown said...

நல்ல பதிவு. நன்றி எழில்.

ஆனால் ஹிட்லருக்கு சமமான அயோக்கியனை கடவுளாக கொண்டாடுவோருக்கு இது எல்லாம் ஒரு பொருட்டில்லை.

கால்கரி சிவா said...

//சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது//
இது கீழே உள்ள உபநிடத்திலிருந்து காப்பி அடித்தது.

பொய்மையிலிருந்து வாய்மைக்கு

அதுக்கு அடுத்த வரி

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு என்பது.

எப்பதான் வெளிச்சத்திற்கு வரப்போறாங்களோ

எழில் said...

//அந்த சகோதரியின் பிரேதம் அவளின் மதவுணர்வுக்கு மாறாக எரிக்கபட்ட தகவலை தந்துள்ளது. //

மிக மிக தவறான காரியம். இதை யார் செய்திருந்தாலும் கட்டாயம் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை.

என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை அந்த குடும்பத்தினருக்கு தெரிவித்துகொள்ளும் அதே வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் நீதித்துறை பத்திரிக்கை ஆகியன சுதந்திரத்தோடு இந்த அசிங்கத்தைவெளிக்கொணர்ந்து குற்றவாளிகள் எந்த அதிகாரத்தில் உட்கார்ந்திருந்தாலும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றியதையும் பாராட்டுகிறேன்.

வாய்மையே வெல்லும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

எழில்,
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித இரண்டாம் கருத்தும் கிடையாது. ஆனால் இதுவும் குஜராத் அரசே குற்றவாளிகளைக் குறித்து புகார் அளித்துள்ள போது இந்த போலி-மதச்சார்பற்ற கீழ்த்தரங்கள் செய்யும் மீடியா சர்க்கஸ் கூத்துகளின் ஆபாசம் தாங்கவில்லை.
இந்த 'போலி' என்கவுண்டர்கள் குறித்த சில புள்ளிவிவரங்கள்:
தேசிய மனித உரிமை அமைப்பின் புள்ளியியலிலிருந்து:
2004-2005 இல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இத்தகைய போலி என்கவுண்டர்கள் குஜராத்தில் 1. காங்கிரஸ் அரசாளும் ஆந்திர பிரதேசத்தில் 5. எஸ்.பி ஆளும் உத்தர பிரதேசத்தில் 54. காங்கிரஸ் ஆளும் ஹரியானாவில் 4. இன்னமும் விசாரணைக்காக காத்திருக்கும் போலி என்கவுண்டர் கேஸ்கள்: குஜராத் 5. ஆந்திர பிரதேசம் - 21 மகாராஷ்டிரா - 29. உத்திர பிரதேசம் 175. டெல்லி - 18. உத்தராஞ்சல் - 14. இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானோர் இந்துக்கள். ஆக இந்த புள்ளிவிவரத்தில் அடங்கும் ஒரு சோக்ரபுதீனை வைத்து போலி மதச்சார்பின்மைகள் போடுகிற ஆட்டம் அப்பட்டமான வகுப்புவாதம். நிற்க. சோக்ரபுதீனோ 50க்கும் மேல் கிரிமினல் கேஸ்களை தன் மேல் தாங்கும் அப்பாவி - அதில் சில முஸ்லீம்களை மிரட்டி பணம் வசூலித்தது உட்பட. எனவே கொல்லப்பட்டது ஒன்றும் அப்பாவி முஸ்லீமும் அல்ல. மேலும் கஷ்டப்பட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு வக்காலத்து வாங்க ஐரோப்பிய யூனியன் வரை பிடி உள்ள ஒரு மாஃபியா கும்பல் மதம் எனும் பெயரில் வேலை செய்கிறது எனும் யதார்த்தம் இத்தகைய போலி என்கவுண்டர்களை உருவாக்கும் மற்றொரு காரணி. என்றாலும் தவறு செய்தவர்கள் அதுவும் அதிகாரத்தில் இருந்தபடி அதை மனித உரிமைக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்.