28 மே 2007
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் ரயில்வே பாலம், தண்டவாளம் ஆகியவை தகர்க்கப்பட்டன.
சட்டீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா மற்றும் ம.பி., மாநிலங்களில் போலி என்கவுன்டர்கள் நடத்தப்படுவதை கண்டித்து சட்டீஸ்கர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நேற்று, "பந்த்'க்கு அழைப்பு விடுத்திருந்தனர். தண்டேவாடா மாவட்டம், பச்சேலி மற்றும் கிரன்டூல் ஆகிய இடங்களுக்கு இடையே ரயில் பாதையின் இரண்டு இடங்களில் நக்சலைட்டுகள் கண்ணிவெடிவைத்தனர். இதில், ரயில்வே பாலம் மற்றும் தண்டவாளம் சேதமடைந்தன. இதன் காரணமாக அந்த பாதையில் வந்த சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. மத்தாடி என்ற இடத்தில், "எஸ்ஸார்' நிறுவனத்தின் ஸ்டீல் தொழிற்சாலையையும் நக்சலைட்டுகள் தீவைத்து எரித்தனர். இச்சம்பவங்களில் எந்த உயிர்சேதமும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
-
நன்றி தினமலர்
1 comment:
ஒருவேளை முதலாளிகள் இந்த ரயில்களை நடத்துகிறார்களோ?
சனியன்கள்..
இந்த கம்யூனிஸ்ட் சனியன்கள் ஒழிந்தால்தான் நாடு முன்னேறும்..
இந்த சனியன்களை ஒழித்தபின்னால்தான் சீனாவும் கொஞ்சமாவது முன்னேறியிருக்கிறது.
Post a Comment