சென்னை, மே. 21-
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தமிழ்நாட்டை உலுக்கியது.
பலரை பலி கொண்ட இந்த நாசவேலை தொடர்பாக அல்-உம்மா இயக்கத்தலைவர் பாட்சா, கேரள மக்கள் ஜன நாயகக் கட்சித் தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக கோவை கோர்ட்டில் நடந்து முடிந்துள்ளது.
தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளில் ஒருவர் இறந்து விட்டதால் மீதமுள்ள 166 பேரும் தீர்ப்பை எதிர் நோக்கி உள்ளனர். தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை வரும் 31-ந் தேதி அறிவிப்பதாக கோவை கோர்ட்டு கூறி உள்ளது. இந்த தீர்ப்பை அறியதமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பழமைவாதிகள் மிகவும் பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழக உளவுத்துறை அதிர்ச்சி ïட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டு அதிகாரிகளை உஷார்படுத்தி உள்ளது. கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப் புக்கு பிறகு தமிழ்நாடு, கேரளா வில் சில தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடதிட்டம் தீட்டி உள்ளனர். இதற் காக ரகசிய ஆயுதப்பயிற்சி அளித்து வருகிறார்கள் என்பதே உளவுத்துறை மோப்பம் பிடித்து வெளியிட்டுள்ள எச்ச ரிக்கை தகவலாகும்.
தமிழ்நாட்டில் சில இயக் கங்கள் "மனித உரிமை அமைப்பு'' என்ற ரீதியில் செயல் பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அதை வைத்து அவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் முகாம் உருவாக்கி உள்ளனர்.
இந்த முகாம்களில் உள்ள வாலிபர்கள் கடந்த சில மாதங்களாக கேரளாவில் உள்ள வண்டிப் பெரியார், கரும்பள்ளம், மலப்புரம் பகுதி களில் உள்ள காடுகளில் ரகசிய ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களுக்கு கேரளாவில் உள்ள தேசிய வளர்ச்சி முன்னணி (என்.டி.எப்.) ஆயு தப் பயிற்சி அளிப்பது உறு திப் படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிப் பது, வெடிக்க வைப்பது, துப்பாக்கியால் குறிதவறாமல் சுடுவது போன்ற பயிற்சிகள் தமிழக வாலிபர்களுக்கு அளிக் கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
தமிழக வாலிபர்களை "மூளை''ச் சலவை செய்து இந்த ரகசிய ஆயுதப்பயிற்சியில் ஒரு அமைப்பு ஈடுபடுத்தி உள்ளது. இந்த அமைப்புக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான வாலிபர்கள் உள்ளனர். குறிப்பாக கோவையில் மட்டும் குறைந்த பட்சம் 1000 பேர் இருக்கிறார்கள்.
இவர்கள் சிறு சிறு ரகசிய குழுக்களாக இயங்குகின்றனர். ஏரியா கவுன்சில் மாவட்ட கவுன்சில் என்றெல்லாம் அழைக்கப்படும் இவர்களிடம் சிறு, சிறு 'செல்'லும் உண்டு. இந்த `செல்' ஒவ்வொன்றிலும் தலா 5 பேர் இருப்பார்கள்.
அவர்கள் செய்யும் செயல்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாத படி இருக்கும். அந்த அளவுக்கு அவர்களை அந்த அமைப்பு இயக்கி வருகிறது.
அந்த அமைப்பை மிக ரகசியமாக கண்காணித்து வரும் உளவுத் துறையினர் தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதி களில் இருந்து எத்தனை பேர் கேரளா சென்று ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர் என்ற விபரத்தை சேகரித்துள்ளனர். அதோடு கேரளாவில் உள்ள ரகசிய ஆயுத பயிற்சி மையங்கள் குறித்தும் தகவல்களை திரட்டி உள்ளனர். இதை கேரளா அரசுக்கு அனுப்பி அவர்களையும் தமிழக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மலப்புரம், மஞ்சேரியில் பெரிய அளவில் ஆயுதப் பயிற்சி நடந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கேரள உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எல்லைகள் சந்திக்கும் மலைக்காடுகளில்தான் அதிக அளவில் ஆயுதப் பயிற்சி நடக்கிறது. கூடலூர் வழியாக ஆயுதங்களை கடத்தி வருகிறார்கள். குண்டல்பேட்டையில் தான் பெரிய முகாம் உள்ளது. இவை எல் லாம் தெரிந்தும் அரசியல் குறுக் கீடுகளால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை'' என்றார்.
கோவை குண்டு வெடிப்பு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாதபட்சத்தில் மீண்டும் நாசவேலையில் ஈடுபட அவர்கள் சதி திட்டம் தீட்டி இருப்பதை `கிï' பிராஞ்ச் போலீசாரும் உறுதி செய் துள்ளனர். சமீபத்தில் புதுச்சே ரியில் இருந்து ரகசிய ஆயுதப்பயிற்சிக்கு சென்ற 25 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி னார்கள்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம்தான் இந்த அதிர்ச்சி தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கசிந்தன. இதையடுத்து தமிழ் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண் காணிப்பு பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
-
நன்றி மாலைமலர்
No comments:
Post a Comment