விசாரணையில் பகீர் தகவல்
லண்டன்ஜூலை 9: ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்க பெங்களூரில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லண்டனில் கைதாகியுள்ள கபில் முகமது, சபில் முகமதுவின் பெங்களூர் வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
லண்டனில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 2 கார்கள் பிடிப்பட்டன. அடுத்த 2 நாட்களில் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தை, எரியும் ஜீப்பை மோதி தகர்க்க முயற்சி நடந்தது. இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக, இங்கிலாந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சதித்திட்டங்களின் பின்னணியில் அல்&கய்தா தீவிரவாத அமைப்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக 8 டாக்டர்களை கைது செய்தனர்.இவர்களில், இங்கிலாந்தில் டாக்டராக பணியாற்றும் சபீல் முகமது, ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் முகமது ஹனீப் ஆகியோர் இந்தியர்கள். எரியும் ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் கபில் முகமதுவும் இந்தியர். இவர் டாக்டர் சபில் முகமதுவின் சகோதரர்.
லண்டனில் 2 கார்களில் குண்டுகளை வைத்து அதை வெடிக்க திட்டமிட்ட சதியிலும் கபில் முகமதுக்கு பெரும் பங்கு இருந்துள்ளது. Ôஇந்த சதித்திட்டத்தை போலீசார் முறியடித்தது பற்றி, Ôஎங்களின் முதல் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. அடுத்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.அதற்காக அல்லாவை வேண்டுங்கள்Õ என்று தனது இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம், பெங்களூருக்கு கபில் முகமது வந்துள்ளார். அப்போதுதான், கிளாஸ்கோ விமானநிலையத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியுள்ளார். காரில் எந்தெந்த பாகங்களில் குண்டுகளை பொருத்த முடியும்?
அதை ரிமோட் கண்ட்ரோல் மூலம் எப்படி வெடிக்க வைப்பது? வெடித்தால் அதன் பாதிப்பு எப்படியிருக்கும்?Õ என்றெல்லாம் ஆய்வு செய்துள்ளார். இதற்காக கம்ப்யூட்டரில் வரைபடம் தயாரித்து ஒத்திகை பார்த்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து, லண்டனில் இருந்த தனது சகோதரர் சபில் முகமது, ஆஸ்திரேலியாவில் உள்ள முகமது ஹனீப் ஆகியோரிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment