முருகமலை காட்டுக்குள் தீவிரவாத படை : ஆபரேஷனுக்கு தயாராகிறது அதிரடி படை
சென்னை : தேனி மாவட்டம் முருகமலை காட்டுக்குள் பதுங்கியுள்ள புலிகளுடன் தொடர்புடைய தீவிரவாத கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வீரப்பன் வேட்டையில் சாதித்தவர்களே இந்தப் படையிலும் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து இவர்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை காட்டுப் பகுதியில் மர்ம கும்பல் முகாமிட்டு இருந்தது. சந்தேகத்திற்கு இடமான இக்கும்பலின் நடமாட்டம் பற்றி அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலின் பேரில் போலீசார் காட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். போலீசை கண்டதும் பலர் தப்பி விட்டனர். எனினும், மூன்று பேர் சிக்கினர்.
மேலும், இக்கும்பல் காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலின் பின்னணியில் பெரிய பயங்கரவாத அமைப்பு செயல்படுவது தெரியவந்துள்ளது. இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்தவும், தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment