Wednesday, May 02, 2007

செய்தி: கேரள கத்தோலிக்க மருத்துவமனையில் கொலைகள், சிறைவைப்பு, கற்பழிப்புகள்

கொச்சிக்கு அருகே இருக்கும் முரிங்கூரில் "முரிங்கூர் டிவைன் ரிட்டீட் செண்டர்" என்ற கத்தோலிக்க மருத்துவமனைதான் உலகிலேயே மிகப்பெரிய கத்தோலிக்க மருத்துவ மனை என்று அழைக்கப்படுகிறதாம்.

இதில் இருந்த கத்தோலிக்க பக்தர் ஒருவர் அனானியாக நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த மருத்துவமனையில் கொலைகளும், கட்டாய சிறைவைப்புகளும், பாலுறவு பலாத்காரங்களும் நடப்பதாக எழுதியதை வைத்து போலீசை ஆராய அனுப்பி வைத்தது.

வின்சென்ட் எம் பால் என்பவரின் தலைமையில் போலீஸ் இந்த மருத்துவமனையை ஆராய்ந்து, இந்த குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று அறிவித்து, இந்த மருத்துவமனையின் டைரக்டராக இருக்கும் பாதர் ஜார்ஜ் பனக்கல் மற்றும் எட்டு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.


சிகிச்சை என்ற பெயரில் கட்டாயமாக அடைத்து வைப்பது, என்னவென்றே தெரியாத மருந்துகளை கொடுப்பது , கொலைகள், அந்த கொலைகளை போலீசுக்கு தெரிவிக்காமல் அங்கேயே புதைத்துவிடுவது என்று ஏகப்பட்ட குற்றசாட்டுகளை போலீஸ் கூறியிருக்கிறது.

இது மத நிறுவனமாக இருக்கிறபடியால் இதனை போலீஸ் விசாரிக்கக்கூடாது என்று பாதர் ஜார்ஜ் பனக்கல் நீதி மன்றத்தில்முறையிட்டார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

நன்றி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி

2 comments:

Anonymous said...

சர்ச்சுக்கு வருகிற ஆண் குழந்தைகளை பாலியல்பலாத்காரம் செய்த வெளிநாட்டு பாதர்களே சுதந்திரமாக வெளிநாட்டில் திரியும்போது, பன்னாடை இந்தியர்களிடம் நீதியை விலை பேசி வாங்குவது ஒன்றும் கஷ்டமில்லை.

இதெல்லாம் யாரும் பேசவும் மாட்டார்கள், தொடர்ந்து செய்தியில் இருக்கவும் இருக்காது..

பத்திரிக்கை துறையில் மிக அதிகமான அளவு கிரிஸ்துவர்கள் இருக்கிறார்கள்.

ஆக... பிரச்னை ஒன்றுமில்லை...

Anonymous said...

ஏழைகளின் கண்ணீரின் சக்தி தெரியாமல் எல்லோரும் விளையாடுகிறார்கள்.
சத்தியத்தின் சக்தி ஒன்றும் மாண்டுவிடவில்லை. பரசுராமரின் நாட்டிலேயே
நாட்டாண்மை காட்டத் தொடங்கி விட்டார்கள்.
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்.