நான் ஏன் கத்தோலிக்கன் அல்ல என்பதை கூற வந்த கீபர் அவர்கள் கூறுவது இது
"
இந்துமதம் மட்டுமே உலகத்தில் உண்டு. ஏனெனில் அது எல்லா மதங்களையும் உள்ளடக்கியது."
செய்தியும் இணைப்பும்
Kiefer creates the twin towers of Piccadilly
By Louise Jury, Arts Correspondent
Published: 26 January 2007
They soar unsteadily into the cold January air against the Palladian splendour of the Royal Academy, two rough, unstable-looking towers crafted by the internationally acclaimed artist, Anselm Kiefer.
In the world of post-9/11, it seems almost impossible not to consider the 50ft (15m) high structures as symbols of the disaster that struck New York.
But Kiefer, 61, who has spent nearly 40 years exploring what it is to be human against the context of his own upbringing in post-war Germany, dismisses the analogy.
"I'm a political man, I'm in the world, I read newspapers and I'm very interested, but I don't do political art," he said. "9/11 is just one event."
In fact, these towers are only the latest in a series the artist has constructed, with the first built in the grounds of his studio and home in the south of France long before the events of 2001.
The new versions are called Jericho, a biblical reference in keeping with the diverse religious, literary and philosophical references in his work, and were commissioned for the courtyard of the Royal Academy, on Piccadilly, where Kiefer is an honorary academician.
Cast in concrete by a company in Guildford, Surrey, the rough walls are interspersed with lead sheets in books - another motif in his work - with a ship akin to a Noah's ark parked on the top of one tower as if stranded on Mount Ararat. "It's illogical," the artist said this week, with evident delight.
They are not necessarily rendered more comprehensible by taking in the rest of his new exhibition, which opens on the other side of Piccadilly in the White Cube Mason's Yard gallery today.
The show takes its title, Aperiatur Terra, from a quotation in the Book of Isaiah which translates as "let the earth be opened" - and continues "and bud forth a saviour and let justice spring up at the same time".
There is a sequence of large paintings inspired by photographs of fields in Germany and a work called Palm Sunday, featuring a large palm tree from Morocco and 18 paintings exploring the pivotal day in the Christian calendar when Christ entered Jerusalem at the beginning of the week that ends in his crucifixion.
"On the one hand, it's victory and triumph, but on the other it's also death," he said. Such dualities appear to have obsessed Anselm Kiefer since he was born in the small southern German town of Donaueschingen in 1945. "Our house was bombed the day I was born. For me, ruins are not a bad thing. They're a good beginning," he said.
But, growing up in a country in horrified denial of its wartime history, he became one of the first German artists to confront and challenge its recent past.
He began his career with performances in which he mimicked the Nazi salute in a bid to force his fellow countrymen to acknowledge the Third Reich.
He then went on to study under another influential German artist, Joseph Beuys, in Düsseldorf and has since carved out a career as an influential and deeply philosophical artist.
Kiefer, who has lived in a 35-hectare estate in Barjac, Provence, since 1991, has explored Teutonic mythology, history, alchemy, Greco-Roman mythology, ancient gnosticism and Kabbalistic mysticism in his art. His works abound with references to everything from Plato to Velimir Khlebnikov, the Russian Futurist poet.
But although raised a Catholic, he no longer follows the faith. "I don't believe in this Catholic dogma. I see a stream of spirituality. The only religion in this world is Hinduism because Hinduism allows all religions."
Tim Marlow, White Cube's director of exhibitions, said: "I know of few artists, if any, who are as interested in and as well-versed in human history. That is what he has immersed himself in since he was an adolescent."
There was no doubt Kiefer was influenced by the shadow of Nazi Germany, but Mr Marlow said he also saw "the bigger picture - the cyclical nature of history, the inevitable decline and fall - he really does have the grand sweep".
Aperiatur Terra is at White Cube until 17 March and will then travel to the Art Gallery of New South Wales in Sydney. The Royal Academy commission will stay in situ until the spring.
Kiefer is thrilled at the impact of Jericho amid the classical grandeur of the courtyard, not least because the authorities in France have been loath to allow similar constructions in public.
"I was very surprised when I arrived because I didn't know whether it would work," he said. "But there's an immediate dialogue with the buildings. [The towers are] the Royal Academy in 200 years' time."
Kiefer's last exhibition in London was at White Cube Hoxton in 2005 when he built a pavilion similar to those that populate the landscape at Barjac. Andrew Hall, an Americancollector, bought the pavilion and the 30 paintings inside.
23 comments:
//The only religion in this world is Hinduism because Hinduism allows all religions."//
உண்மை. இது 'எல்லா' இந்துக்களுக்கும் தெரியுமா?
நன்றி சிறில் அலெக்ஸ்,
நிச்சயமாக "எல்லா" இந்துக்களுக்கும் தெரியாது.
ஆனால், இந்துமதம் என்றால் என்ன என்று தெரிந்த எல்லா இந்துக்களுக்கும் தெரியும்.
தாங்கள் இந்துக்கள் அல்ல என்று கூறிக்கொள்பவர்கள் ஒருவருக்கும் தெரியாது.
நன்றி
இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
சகோதரர் எழில் அவர்களுக்கு
ஒரு மேற்கத்தியருடைய எழுத்தை மேற்கோள் காட்டி எனவே இந்து மதம் மட்டுமே இந்த உலகத்தினுடைய மதம் என்பது சிறந்த வாதமாக முடியாது. இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள சித்தாந்தத்தை தக்க ஆதாரத்தோடு சொல்லி பின்பு அதன் காரண காரணிகளை விளக்கி எனவே இந்து மதம் மட்டுமே இந்த உலகத்தினுடைய மதம் என்று சொல்வது அறிவுடமையாகுமா? அல்லது மாற்று மதத்தை சார்ந்த ஒருவர் இந்து மதம் மட்டுமே இந்த உலகத்தினுடைய மதம் என்று கூறிவிட்டார் இதனால், இந்து மதம் மட்டுமே இந்த உலகத்தினுடைய மதம் என்று வாதிடுவது அறிவுடமையா?
ஒரு சித்தாந்ததம் முதலில் தனது கொள்கைகளை தெளிவாக வகுத்திருக்க வேண்டும். அந்த கொள்கைகள் மக்களை சரியான வழி நடந்திட உதவ வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அதன் கொள்கைகளில் சமரசம் செய்யாதிருக்க வேண்டும். அப்போது தான் அது மக்களை கட்டுகோப்பாக வழி நடத்த முடியும். நீங்கள் மேற்கத்திய ககோதரரின் செய்தியிலிருந்து இந்து மதத்தின் பெருமை என கோடிட்டு காட்டும்
//The only religion in this world is Hinduism because Hinduism allows all religions."//
தகவலே இந்து மத கொள்கை என்பது உறுதியற்ற கொள்கைகாகும் என்பதற்கு சான்றாகும். எந்த சித்தாந்தம் என்ன சொன்னாலும் அது எல்லாம் எனக்கு உடன்பாடு தான் என்றால், இது ஒரு கொள்கையாக முடியுமா? எது சரி? எது தவறு என்கின்ற பாகுத்தாய்வுக்கு இடமே இல்லாதது பகுத்தறிவால் படைக்கப்பட்ட மனிதன் பின்பற்ற தகுதியாகுமா? என்னும் கேள்வி என்னுள் எழுகிறது சகோதரரே!
இறைவன் என்னும் கொள்கையில் இஸ்லாம் சொல்லும் தெளிவான வரையறை இந்து மதத்தில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. காரணம், எதை வேண்டுமானாலும் வணங்கி வழிபடுகிறார்கள். மனிதனை, மரத்தை, மிருகங்களை, நெருப்பை, நீரை, காற்றை, சந்திரனை, சூரியனை ... என ஒரு வறையறை இல்லாத நிலையை பார்க்கிறேன். நான் இந்து மதத்தை படித்து விட்டு இவ்வாறு கூறவில்லை. இந்து சகோதரர்களின் செயல்பாட்டிலிருந்து இவ்வாறு எண்ண தோன்றுகிறது. இந்து மதத்தின் கடவுள் கொள்கையில் எனது கருத்து தவறாக இருக்குமானால் என்னை தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.
மாறாக! இஸ்லாத்தில் இறைவன் என்பவன் யார்? என்பது தெளிவாக கூறப்படடுள்ளது. அவன் ஒருவன் மட்டுமே வணங்கி வழிபட தகுதியானவன். அந்த இறைவன் எத்தகையவன் என்றால், அவன் ஒருவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவுமில்லை. அவன் தான் எல்லா ஜீவராசிகளையும், அகிலவுலகங்களையும் எந்தவித முன்னுதாரனமும் இன்றி படைத்தான். அவன் எந்த தேவையும் அற்றவன். அவனுக்கு தூக்கம், பசி, தாகம், மறதி, பலகீனம் என்று எதுவுமில்லை. இத்தகைய தன்னுமையுடைய ஒரே இறைவன் மட்டுமே உண்டு. அந்த இறைவனை மட்டுமே வணங்கி வழிபட தகுதியானவன் என்பது இஸ்லாத்தில் இறைவனை பற்றிய கொள்கையாகும்.
இறைவன் நாடினால் மேலும் நாம் இந்து மற்றும் இஸ்லாம் மதங்களை பற்றி கலந்துரையாடலாம். இத்தகைய கருத்து பரிமாற்றங்கள் நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவிடும் என்னும் நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
எனது பதிவில் உண்மைகளை தாங்கள் அறியும் பட்சத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனது பதிவில் தவறுகள் இருக்குமானால், அது எனது சிறுமதியால் ஏற்பட்ட குற்றமாகும். அதற்கு நான் மன்னிக்க வேண்டுகிறேன். அந்த தவறுகளை சரியாக எடுத்துகாட்டும் பட்சத்தில் திருத்தி கொள்வேன்.
நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
உங்கள் சகோதரன்
நெய்னா முஹம்மது
அன்புள்ள சகோதரர் நெய்னா முஹம்மது,
பல மாதங்களுக்கு முன்பு சகோதரர் சுவனப்பிரியன், சகோதரர் அபுமுஹை, சகோதரர் இப்னுபஷீர் ஆகியோருடன் இது போல பேசியிருக்கிறேன்.
எதனாலோ ஆரம்பித்து, எங்கோ போய்விட்ட இந்த விவாதத்தை மேலும் நடத்த எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும்.
வேண்டுமென்றால், அந்த பழைய பதிவுகளை படித்துவிட்டு அதில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
என்னால் முடிந்த தன்னிலை விளக்கங்களை அளிக்க முயல்கிறேன்.
மேலும் ஏற்கெனவே பேசிய விஷயங்களை மீண்டும் பேசுவதும், மீண்டும் எழுதியதையே எழுதுவதும் எனக்கு உகந்ததாக இல்லை. அதனால்தான் சமீபத்தில் திருசுவனப்பிரியன் அவர்கள் எழுதிய கேள்விகளுக்கும் பதில் எழுத தோன்றவில்லை.
நேரமிருந்தால் எப்போதேனும்...
நன்றி
எழில்
November ezhil pathivukal
october ezhil pathivukal
November ezhil pathivukal
//மாறாக! இஸ்லாத்தில் இறைவன் என்பவன் யார்? என்பது தெளிவாக கூறப்படடுள்ளது.//
இறையை அப்படி ஒரு புத்தகத்தில் கூறி அடைத்துவிடமுடியாது என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.
// அவன் ஒருவன் மட்டுமே வணங்கி வழிபட தகுதியானவன். அந்த இறைவன் எத்தகையவன் என்றால், அவன் ஒருவன்.//
ஏன் இறையால் பலவாக இருக்க முடியாதா? அது இறையின் சக்திக்கு மீறியதா?
//அவன் எந்த தேவையும் அற்றவன்.//
இந்துக்களும் இறையை அப்படித்தான் கருதுகிறார்கள். அதனாலேயே தன்னை மக்கள் வணங்கவேண்டும் என்ற தேவை இறைவனுக்கு இல்லை என்று கருதுகிறார்கள். அதுவும் தன்னை இப்படித்தான் வணங்கவேண்டும் என்றும் இறைக்கு எந்த வித தேவையும் இல்லை என்று கருதுகிறார்கள்.
நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
உங்கள் சகோதரன்
எழில்
/எந்த சித்தாந்தம் என்ன சொன்னாலும் அது எல்லாம் எனக்கு உடன்பாடு தான் என்றால், இது ஒரு கொள்கையாக முடியுமா? எது சரி? எது தவறு என்கின்ற பாகுத்தாய்வுக்கு இடமே இல்லாதது பகுத்தறிவால் படைக்கப்பட்ட மனிதன் பின்பற்ற தகுதியாகுமா? என்னும் கேள்வி என்னுள் எழுகிறது சகோதரரே!
இறைவன் என்னும் கொள்கையில் இஸ்லாம் சொல்லும் தெளிவான வரையறை இந்து மதத்தில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. காரணம், எதை வேண்டுமானாலும் வணங்கி வழிபடுகிறார்கள். மனிதனை, மரத்தை, மிருகங்களை, நெருப்பை, நீரை, காற்றை, சந்திரனை, சூரியனை ... என ஒரு வறையறை இல்லாத நிலையை பார்க்கிறேன். நான் இந்து மதத்தை படித்து விட்டு இவ்வாறு கூறவில்லை. இந்து சகோதரர்களின் செயல்பாட்டிலிருந்து இவ்வாறு எண்ண தோன்றுகிறது. இந்து மதத்தின் கடவுள் கொள்கையில் எனது கருத்து தவறாக இருக்குமானால் என்னை தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்./
இறைவனை பற்றி அனைத்து சித்தாந்தங்களும் சொல்வது சரி என இந்துமதம் சொல்லவில்லை நண்பரே.பல, பல சித்தாந்தங்களும் வழிபடும் இறைவி ஒருத்தியே என்று தான் சொல்கிறது. உருவமற்றவளாகவும், உருவம் இல்லாதவளாகவும, காற்றாகவும், மலையாகவும், மின்சாரமாகவும் நிற்பது அன்னை ஆதிபராசக்தி. எங்கும் நிறைந்த அந்த பரம்பொருளே சக்தி. சக்தி தான் அனைத்துமாகி நிற்கிறது. அனைத்துக்கும் அடிப்படை சக்திதான் என்கிறது இந்துமதம்.
சக்திக்கு உருவம் இல்லை என இஸ்லாம் சொல்வது ஒரு விதத்தில் சரி. மின்சாரத்துக்கு எந்த உருவமும் இல்லை. சக்திக்கு உருவம் உண்டு என சைவமும் வைணவமும் சொல்வதும் சரி. ஏனெனில் சக்திதான் ஜடப்பொருளாக உருவெடுத்தும் வருகிறது. எங்கும் நிறைந்த இப்பரம்பொருளை உருவமுள்ளது, உருவமற்றது என இரு வர்ணனைகளில் அடைத்த விடவே முடியாது என்று தான் இந்துமதம் சொல்கிறது.
இந்துக்கள் எதை வேண்டுமானாலும் வழிபடுகிறார்கள் என்பதும் தவறு. அனைத்தும் இறைவியாகி நிற்கும்போது அவர்கள் வழிபடுவது அனைத்தும் இறைவியாகத்தானே இருக்க முடியும்?
'யாரை நீ வணங்கினாலும் அது என்னையே சேர்கிறது. எந்த வடிவம் மூலம் நீ எதை விரும்பி வேண்டுகிறாயோ அதை அந்த வடிவம் மூலமாக உனக்கு அளிப்பவன் நான் தான' - பகவான் கிருஷ்ணர்
பதிவு நன்று எழில்.அது மட்டும் அல்ல,பின்னுட்டங்களும் நன்று.விவாதங்கள் அவசியம் தேவை,ஆனால் அதில் சாரம் இருக்க வேண்டும்.நிச்சயமாக "எல்லா" இந்துக்களுக்கும் தெரியாது இந்துமதம் என்றால் என்ன என்று.எனவே இந்துமதம் பற்றிய அறிவியல் பூர்வமான கருத்துக்களை ஒருஒரு இந்துவும் எழுதுவது அவசியம் என்று கருதுகிறேன்.
//இந்துமதம் என்றால் என்ன என்று தெரிந்த எல்லா இந்துக்களுக்கும் தெரியும்//
இது தவறான கருத்து.'எல்லா' இந்துக்களும் இந்துமதம் என்றால் என்ன என்று தெரிந்து இருப்பதில்லை.
இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
சகோதரர் எழில் அவர்களுக்கு
எனது கருத்துக்கு நீங்கள் அளித்த விளக்கங்களுக்கு முதலில் நன்றி. சகோதரரே! நமது கலந்துரையாடல்கள் யாருடைய கருத்தை யார் மீது திணிப்பது என்ற கோணத்திலேயோ அல்லது யாருடைய கருத்து இறுதியாக நிலைநாட்டப்பட்டது என்ற கோணத்திலேயோ இங்கு பறைசாற்ற நான் எழுதவில்லை.
இன்று இஸ்லாம் மாற்ற கருத்தாளர்களிடம் தவறாக முன்னிலை படுத்தபடுகிறது. இதனால் முஸ்லிம்களாகிய எங்களை மாற்றுமத சகோதரர்களிடத்தில், தீவிரவாதிகளாக, வெறுக்கும் குணமுடையவர்களாக, இரக்கமற்றவர்களாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்கிற நச்சு கருத்து மிக வேகமாக பரப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு முஸ்லிம் இஸ்லாமிய நெறிப்படி வாழ்வதே தேச விரோதமாக, அடிப்படைவாதியாக, சிலரால் சித்தரிக்கப்படுகிறது. எனவே எனதருமை மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் கொள்கைகள் என்ன? என்பதை தெரிவிப்பது மட்டுமே குறிகோளாகும். இதனால் நாம் ஒருவரை ஒருவர் புரிந்துணர்ந்து, மதித்து வாழவும் வழிவகை செய்யும் என்ற ஒரு குறிக்கோளின் அடிப்படையிலேயே எனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். விவாதம் செய்ய வேண்டியது எனது குறிக்கோள் அல்ல. எனவே எனது பதிவுகளுக்கு மாற்று கருத்து பதிவு செய்ய விரும்பும் சகோதரர்களுக்கு மீண்டும் இங்கே பதில் அளிக்க போவதில்லை. அவ்வாறு பதிலுக்கு பதில் என்று தொடரும் போது தான், சகோதரரே! நீங்கள் கூறியுள்ளதை போல் "எதனாலோ ஆரம்பித்து, எங்கோ போய்விட்ட இந்த விவாதத்தை மேலும் நடத்த எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும்" என்னும் சூழல் ஏற்படும்.
இஸ்லாத்தில் அடிப்படை 5 விசயங்களாகும். முதலாவது, "வணங்கி வழிபட தகுதியானவன் ஒரே ஒரு இறைவனேயாகும். முஹம்மது நபி (சாந்தி அவர்கள் மீது நிலவட்டும்)அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார்கள்" என்று நம்பிக்கை கொள்வதாகும்.
இரண்டாவது இறைவனை ஒவ்வொரு நாளும் 5 முறை வணங்கி வழிபடுவது.
இவ்வாறு வழிபடுவது இறைவனுடைய தேவைக்காக அல்ல. மாறாக மனிதனுடைய தேவைக்காகவேயாகும். ஏனெனில் மனிதன் இவ்வுலகின் இன்பங்கங்களில் அதிகம் நாட்டமுடையவனாக இருப்பதை பார்க்கிறோம். இந்த உலக சிற்றின்பங்களை அடைந்திட தான் மனிதர்களில் பலர் தவறான முறையில் பொருளீட்டுவதையும், ஒழுக்க சீர்கோடன காரியங்களில் ஈடுபடுவதையும், பிறர் உரிமைகளை பறிப்பதையும் காணுகிறோம். இஸ்லாம் இவ்வுல வாழ்க்கை மறுவுலக வாழ்க்கையை தேர்வு செய்யும் தேர்வு களமாக காட்டுகிறது. நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கையில் எப்படி மனிதன் வாழ்ந்தானோ அதனடிப்படையில் தான் நிரந்தரமான மறுவுலகில் இறைவனால் வாழ்க்கை கொடுக்கப்படுவான். மனிதனின் ஒவ்வொரு செயல்களும் பதிவு செய்யப்படுகின்றன. மறு உலகில் இச்செயல்கள் குறித்து இறைவனால் விசாரிக்கப்படுவான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆக தினந்தோறும் 5 முறை இறைவன் முன்னால் போய் நிற்கும் போது, இவ்வுலக மாயை என்னை தவறான வழியில் திசை திருப்புவதிலிருந்தும் தடுக்கும் கேடயமாக இருக்கிறது. இறைவனின் ஞாபகம் மிக அதிகமாக என்னுள் உருவாகிடும் போது சாத்தானிய சபலங்களிலிருந்து விலக்கிடும் வேலியாக இருக்கிறது. நான் இவ்வுலகில் பிறருக்கு அநியாயம் செய்து, ஒழுக்க சீர்கேடுகளில் முழ்கி இவ்வுலக சட்டங்களிலிருந்து தப்பி விடலாம். ஆனால் மறுவுலக விசாரணையின் போது என் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்கிற பயம் என்னுள் அதிமதிகம் ஏற்படும் எதுவரையிலும் நான் இறைவனுடைய சிந்தனையில் வாழ்கிறேனோ அதுவரையிலும் தான். இறைவனுடைய சிந்தனை மழுங்கிடும் போது மறுவுலக சிந்தனையும் மறந்துவிடும் இதனால் மனிதன் தவறான பாதையில் தன்னை செலுத்தி தனக்கும் கேட்டை ஏற்படுத்துகிறான். தான் சார்ந்துள்ள சமூகத்துக்கும் தீங்கை ஏற்படுத்துகிறான். எனவே மனிதன் இறைவனை வணங்குவது மனிதனின் நன்மைக்காவும், அவன் சார்ந்துள்ள சமூகத்தின் நன்மைக்காகவுமே தவிர இறைவனின் கீர்த்தியும், மகத்துவமும் மனிதனட வணங்குவதால் கூடிவிடுவதாகவோ அல்லது வணங்காது போனால் குறைந்து விடவோ போவதில்லை. எனவே சகோதரர் எழில் அவர்களே மனிதன் இறைவனை வணங்குவதும் மனிதர்களின் நன்மைக்காகவே தவிர இறைவன் தேவைக்காக அல்ல. இறைவன் எந்த தேவையும் இல்லாத பரிசுத்தமானவனாக இருக்கிறான். இத்துடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். இறைவன் நாடினால் தொடர்ந்து எழுதுகிறேன்.
எனது பதிவில் உண்மைகளை தாங்கள் அறியும் பட்சத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனது பதிவில் தவறுகள் இருக்குமானால், அது எனது சிறுமதியால் ஏற்பட்ட குற்றமாகும். அதற்கு நான் மன்னிக்க வேண்டுகிறேன். அந்த தவறுகளை சரியாக எடுத்துகாட்டும் பட்சத்தில் திருத்தி கொள்வேன்.
நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
உங்கள் சகோதரன்
நெய்னா முஹம்மது
இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
சகோதரர் கபிர் அவர்களுக்கு
இந்து மத கோட்பாடு என்ன என்பதை தாங்கள் எடுத்து கூறியமைக்காக எனது நன்றி தெரிவிக்கின்றேன். எனது சில ஐயங்களை நிவர்த்தி செய்வதற்காக சில விபரங்களை தங்களிடம் கேட்க ஆசைபடுகிறேன். தங்களுடைய பதிவின் படி ஆதிபராசக்தியை தான் இறைவனாக கருதுவதாக எழுதியிருந்தீர்கள். இதனை எந்த ஆதாரத்தின் (இந்து வேதங்கள் அல்லது உபநியாசங்கள்) படி தாங்கள் சொல்லுகிறீர்கள் என்பதனை கூறவும். சில இந்து சகோதரர்கள் பரமசிவனை இறைவனாக சொல்ல கேட்டிருக்கிறேன். இதே பதிவில் சகோதரர் எழில் அவர்கள் இறைவன் ஒருவன் தான் ஆனால் பல வடிவங்களில் வருவது அவனது வல்லமைக்கு முடியாத ஒன்றா? என்று வினா எழுப்பி, பல வடிவங்களிலில் ஒரு இறைவனை வணங்குவதாக எழுதியிருந்தார். இந்த கருத்துக்கள் பற்றிய தங்கள் கருத்தும் இது சரியான கூற்று என்றால், இதற்கு ஆதாரம் என்ன? என்பதையும் இந்து வேதங்களிலிருந்து நான் அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
உங்கள் சகோதரன்
நெய்னா முஹம்மது
identify you as islam fundamentalist
By Nurhadi
1. You will tolerate if someone says that there is no Allah, but will call for his head if he says that Mohammad is not the final prophet of that Allah.
2. You will claim that Allah is most merciful and most compassionate, but will also say those who do not believe in Allah will be roasted in the boiling oil by Allah.
3. You will claim that Allah has already decided who will be the Muslim and who will not be, but you will also claim that Allah has ordered the Muslims to convert the kafirs into Islam.
4. You will claim that Allah is omnipotent, but will also say the Allah is begging everyone to believe Him.
5. You will claim that Allah is omniscient, yet you will claim that Allah does not know what you are going to do next, since He has given you the freewill.
6. You will claim that Islam is a religion and those who critisize Islam are anti-muslim racists, but will also ask all the nations should be politically ruled by Islamic Law.
7. You will claim that Islam gives equal freedom/rights to women as well as men, but will say that women should be veiled but not men.
8. You will ask for rights for veling Muslim women in non muslim countries, but will refuse the rights of non muslim women to wear what they like in Muslim majority nations.
9. You will ridicule the myths in other religions but you will also claim that Mohammad rode a mythical horse to heaven.
10. You will always say "insha Alla" meaning all things happen due to the will of Allah, but will say all the criticism of Islam is satanic act and all the anti-Muslim acts are satanic acts.
11. You will claim that Islam is most tolerant but you will also shout all the critics of your views should be killed.
12. You will claim that Quran is without confusion, but you will also claim that your own sect is the only one that correctly understood Quran.
13. You will claim that Allah is limitless in his capacity but will also claim that Allah cannot talk to anyone after having talked to Mohammad.
//தங்களுடைய பதிவின் படி ஆதிபராசக்தியை தான் இறைவனாக கருதுவதாக எழுதியிருந்தீர்கள். இதனை எந்த ஆதாரத்தின் (இந்து வேதங்கள் அல்லது உபநியாசங்கள்) படி தாங்கள் சொல்லுகிறீர்கள் என்பதனை கூறவும். சில இந்து சகோதரர்கள் பரமசிவனை இறைவனாக சொல்ல கேட்டிருக்கிறேன். //
நண்பர் நைனா முகம்மது அவர்களே,
பரமசிவனை இறைவியாக சொல்வதும் ஆதிபராசக்தியை இறைவியாக சொல்வதும் கண்னனை இறைவியாக சொல்வதும் ஏசுவை இறைவியாக சொல்வதும் ஒன்றுதான்.
உதாரனத்துக்கு கடவுள், இறைவன், பகவான், காட் என்று எந்த பெயரில் சொன்னாலும் அது இறையை தானே குறிக்கிறது.
பரமசிவன் என்பது இறைவியின் திருப்பெயர்களில் ஒன்று.இறைவி எடுத்த வடிவங்களில் ஒன்று பரமசிவன் வடிவம்.நடராஜன் என்றால் நாட்டியத்துக்கு அரசன் என்று பொருள்.விஷ்ணு என்றால் விசுவம் முழுக்க நிறைந்தவன் என்று பொருள்.பராசக்தி என்றாலும் அதே பொருள்தான்(எங்கும் நிறைந்த சக்தி).முருகன் என்றால் அழகானவன் என்று பொருள்.இறைவி தானே உலகில் மிக அழகானவள்?பரமசிவம் என்றால் 'எங்கும் நிறைந்த நன்மையை அளிப்பவன்' என்று பொருள்.
இவை அனைத்தும் குறிப்பது இறைவியையே என்பதையும் அந்த இறைவி எந்த பெயரிலும், ரூபத்திலும் உருவெடுக்க கூடியவள் என்பதையும் அறிந்தால் குழப்பமிருக்காது.
//இதே பதிவில் சகோதரர் எழில் அவர்கள் இறைவன் ஒருவன் தான் ஆனால் பல வடிவங்களில் வருவது அவனது வல்லமைக்கு முடியாத ஒன்றா? என்று வினா எழுப்பி, பல வடிவங்களிலில் ஒரு இறைவனை வணங்குவதாக எழுதியிருந்தார். இந்த கருத்துக்கள் பற்றிய தங்கள் கருத்தும் இது சரியான கூற்று என்றால், இதற்கு ஆதாரம் என்ன? என்பதையும் இந்து வேதங்களிலிருந்து நான் அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன்.//
சகோதரர் எழில் சரியான கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.
இதற்கு ஆதாரம் கீதையிலேயே இருக்கிறது.
And others again, offering up the sacrifice of knowledge, worship me as one, as distinct, and as all-pervading in numerous forms. I am the Kratu, I am the Yajna, I am the Svadhâ, I am the product of the herbs. I am the sacred verse. I too am the sacrificial butter, and I the fire, I the offering. I am the father of this universe, the mother, the creator, the grandsire, the thing to be known, the means of sanctification, the syllable Om, the Rig, Sama, and Yajur also; the goal, the sustainer, the lord, the supervisor, the residence, the asylum, the friend, the source, and that in which it merges, the support, the receptacle, and the inexhaustible seed. I cause heat and I send forth and stop showers. I am immortality and also death; and, Arjuna, I am that which is and that which is not.
http://www.wsu.edu/~dee/ANCINDIA/GITA9.HTM
இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
சகோதரர் கபீர் அவர்களின் பதிலுக்கு நன்றி.
சகோதரர் Nurhadi அவர்களின் பதிவிற்கும் நன்றி. நான் முன்பே கூறியது போல என்னுடைய பதிவின் விமர்சனங்களுக்கு நான் பதில் விளக்கம் இதில் எழுத போவதில்லை. ஏனெனில் அது திகை மாற்றி எங்கெங்கோ அழைத்து சென்று விடுவதாக சகோதரர் எழில் அவர்கள் கூறியதை ஏற்கனவே ஏற்று கொண்டுள்ளேன். எனவே எனது பதிவுகளுக்கு விமர்சனம் எழுத விரும்பும் சகோதர சகோதரிகள், எனது மின்னஞ்சலுக்கு தயவு செய்து எழுதினால். அது பற்றி மேலும் விரிவாக கலந்துரையாடலாம். mohammednaina@hotmail.com
சகோதர சகோதரிகளே! முந்தய பதிவில் இஸ்லாத்தின் 5 அடிப்படைகளில் இரண்டை கூறியிருந்தேன். முதலாவது கடவுள் கொள்கையை கூறும் சத்திய பிரமாணமாகும். இரண்டாவது தினந்தோறும் 5 நேர தொழுகை நிலைநாட்டுதல்.
முன்றாவதாக வருடம் தோறும் ரமழான் (சந்திரன் காலண்டர்)என்னும் மாதத்தில் அனைத்து நாட்களும் நோன்பிருத்தலாகும். இந்த நோன்பிருக்கும் நேரம் சூரியன் உதிப்பதற்கு சுமார் 90 நிமிடத்திற்கு முன்பிலிருந்து சூரியன் மறையும் வரையிலாகும். இந்த காலகட்டத்தில் மனிதனுக்கு அவசியமான, செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட சில விசயங்களை இறைவனுக்காக விலகியிருப்பதன் மூலம் தன்னுடைய மனதை தான் கட்டுபடுத்திக் கொள்ள மனிதனுக்கு கொடுக்கப்படும் ஒரு மாத கால பயிற்சியே இந்த நோன்பாக இருக்கிறது. இந்த பயிச்சியின் பயனாக ரமழான் இல்லாத காலங்களில் சாத்தானுடைய சபலங்கள் உள்ளதை ஊசலாட்டும் போது ரமழான் காலங்களில் இறைவன் அனுமதித்ததவகளையே அனுபவிக்க செயல்படுத்த தன்னை தடுத்து கொண்ட மனிதன், இப்போது இறைவன் தடுத்த காரியங்களிலிருந்து தனது மனதை கட்டுபடுத்தி தீமைகளிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளவேயாகும்.
நோன்பிருத்தல் என்பது ஏனைய நாட்களில் அனுமதிக்கப்பட்டிருந்த உண்பதிலிருந்து, பருகுவதிலிருந்து, தாம்பத்திய உறவிலிருந்து தன்னை தடுத்து கொள்வதோடு, எல்லாகாலங்களிலும் தடுக்கப்பட்டுள்ள வாயால், கண்ணால், காதால், கைகலால், கால்களால், மனதில் தவறான சிந்தனைகளை கொள்ளுதல் போன்ற தீமைகளிலிருந்து தன்னை தடுத்து கொள்வதும், பொறுமையை மேற்கொளவதும் இவையே நோன்பின் அவசியங்களாகும். உண்ணுவது பருகுவதிலிருந்து மட்டும் தடுத்து கொண்டு மற்ற தீமைகளை செய்வானேயானால், அவனது நோன்பிற்காக நற்கூலி இறைவனால் கொடுக்கப்படாது. ஆக இந்த நோன்பின் போது மனிதனுக்கு பசியால், தாகத்தால் சிறிது கஷ்டம் ஏற்பட்டாலும் படைத்த இறைவனுக்காக நான் என்னை தியாகம் செய்ய தாயாராக இருக்கிறேன், பொறுமையோடு கஷ்டங்களை தாங்கி கொள்ள தாயாராகிறேன். சாத்தானின் சபலத்திலிருந்து எனது மனதை கட்டுபடுத்தி தீமைகளிலிருந்தும் என்னை பாதுகாத்து கொள்ள முற்படுகிறேன். எனது வாயால், கண்ணால், காதால், கையால், காலால், தீய சிந்தனைகளால் பிற மனிதர்களுக்கு இழைக்கும் தீமையிலிருந்தும் என்னை தடுத்து கொண்டு இறைவன் வகுத்து தநத பாதையில் நல்லவனாக வாழ்வேன் என இறைவனுக்கு செய்து கொடுக்கும் உறுதிமொழியே நோன்பின் தத்துமாய், நோக்கமாக இஸ்லாத்தில் அமைந்துள்ளது. இறைவன் தனக்களித்த பொருளாதார வசதியால் தினந்தோறும் உண்டு, பருகி களித்து மகிழ்ந்திருந்த மனிதனே, உன்னிடத்தில் பசியின் பரிதவிப்பால் எத்தனையே ஏழைகள் ஒரு நேர உணவுக்காக உன்னிடத்தில் வந்த போது அவர்களின் பசி துயரம் என்ன என்பது தெரியாதிருந்ததே அது இது தான் என்று சுயப்பாடம் கற்று கொடுக்கும் கல்வியாகவும் நோன்பு திகழ்கிறது. இரக்கத்தை, பொறுமையை, விட்டு கொடுக்கும் பக்குவத்தை நோன்பு மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.
இந்த நோன்பில் விதிவிலக்கும் சிலருக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், வியாதியால் கஷ்டப்படுபவர்கள், பிரயாணத்திலிருப்பவர்கள், மாதவிலக்குடைய பெண்கள் என்போர் நோன்பு பிடிப்பதிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளார்கள். பிரயாணத்திலிருப்பரும், மாதவிலக்குடைய பெண்களும் பின்னர் எத்தனை நாட்கள் நோன்பு நோற்காமல் இருந்தார்களோ அத்தனை நாட்களுக்கும் பின்னர் நோற்க வேண்டும்.நோயாளிகள் சுகமாகி விட்டால் பின்னர் சாதாரண நாட்களில் நோற்க வேண்டும்.
இத்துடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
இறைவன் நாடினால் தொடர்கிறேன்.
நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
உங்கள் சகோதரன்
நெய்னா முஹம்மது
அன்பு சகோதரர் நெய்னா முகம்மது,
//"எதனாலோ ஆரம்பித்து, எங்கோ போய்விட்ட இந்த விவாதத்தை மேலும் நடத்த எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும்" // என்று நான் கூறியதன் காரணம், இந்த விவாதத்தை நான் இஸ்லாமியர்களிடம் நடத்தவேண்டும் என்ற கருத்துடன் எழுத ஆரம்பிக்கவில்லை என்று குறிக்கத்தான். தொடர விருப்பமில்லாத காரணம் முன்னர் நான் எழுதிய அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் எழுத விருப்பமில்லை என்ற காரணத்தால்.
ஏனெனில், இதே விஷயங்களை பல முஸ்லிம் சகோதரர்கள் எழுதியபோது நான் எழுதினேன். அதற்கு பதில் வருவதில்லை. திருப்பி நீங்கள் அதே விஷயங்களை எழுதுகிறீர்கள். அதற்கும் அதே பதில் எழுதுகிறேன். மீண்டும் உங்களிடமிருந்து பதில் வருவதில்லை.
நீங்கள் கூறுவதை ஏற்கெனவே பல இஸ்லாமிய சகோதரர்கள் கூறிவிட்டார்கள். ஆகவே மறுபடி கூறுவதில் பயனில்லை.
இப்போது என்னுடன் இணைந்து கபீர் என்னும் நண்பரும், இந்து என்னும் நண்பரும் பதில் எழுதுகிறார்கள். அவர்கள் கூறியுள்ளதை புரிந்துகொள்ளும் முயற்சி கூட பல இஸ்லாமிய சகோதரர்களிடம் இல்லை. அவர்கள் கூறியுள்ளதை புரிந்துகொண்டு அதன் மீது கேள்வி எழுப்பவேண்டும். ஆனால், அதே போல சகோதரர்கள் நபிகள் நாயகம் அவர்களே இறுதி நபி என்று கூறியதற்கு ஆதாரம் கேட்டபோது அது விதண்டாவாதம் என்று பதில் கூறினார்கள்.
இறைவனின் மீது பயத்துடன் இருக்கவேண்டும் ஆகிய விஷயங்களை இந்துமதம் ஒப்புக்கொள்வதில்லை. இறையிடம் அஞ்சவும் இந்துமதம் கூறுவதில்லை. தண்டனைக்கு அஞ்சுவதன் மூலம் அமைக்கப்படும் அமைப்பிலும் இந்துக்களுக்கு நம்பிக்கை இல்லை. விட்டுக்கொடுத்தல் மூலமும், மற்றவர்களின் கருத்துக்கு புரிந்துணர்வு மூலமும் அமைக்கப்படும் பழக்க வழக்கங்களை கொண்டதுதான் இந்து சமூகம். அது மட்டுமல்ல, பௌத்த சமூகங்களிலும் இறைவனுக்கு அஞ்சும் கருத்தாக்கம் இல்லை. சீனா ஜப்பான் போன்ற சமூகங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஜப்பானியர்களே உலகத்தில் மிக அதிகமாக சமூக சேவைக்கு பணம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களும் நன்றாக வளம் பொருந்தியவர்களாகவே இருக்கிறார்கள். பௌத்த சமூகங்களிலும் இந்து சமூகங்களிலும் பல குற்றங்கள் குறைவாகவே இருக்கின்றன.
சொல்லப்போனால் போலீஸே இல்லாத சமூகங்கள் கூட உலகெங்கும் இருக்கின்றன. பழங்குடி சமூகங்களில் போலீஸே கிடையாது. அங்கு குற்றங்கள் மற்ற சமூகங்களை விட மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன.
இறை என்பது பயமுறுத்தும் கருவி அல்ல. இறை என்பது அன்பு நிறைந்தது. அழகானது. காருண்யம் மிக்கது. அதனாலேயே இந்து மதத்தில் இறையை அம்மாவாக பார்ப்பது பரவலாக இருக்கிறது. இந்த பூவுலகத்து அம்மாவே இவ்வளவு கருணை மிக்கவராகவும் அன்பு செலுத்துபவராகவும் இருக்கும் போது இந்த பேரண்டத்தை படைத்த அம்மா எவ்வளவு கருணை மிக்கவளாகவும் அன்பே உருவமானவளாகவும் இருக்கவேண்டும்.. சற்றே சிந்தித்துப்பாருங்கள்...
சகோதரன்
எழில்
இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
சகோதரர் எழில் அவர்களுக்கு
தங்களது பதிவிற்கு நன்றி. நீங்கள் முதலில் எழுதிய பதிலில்,பதிவில் உள்ள ஐயங்களுக்கு பதில் சொல்வதால் நீண்டு கொண்டே செல்வதாக தாங்கள் கருதி, அத்தகைய சலந்துரையாடலை விரும்பவில்லையோ என்று கருதி தான், நான் அதை இந்த பதிவுகளில் தொடர முயற்சி செய்யவில்லை. இப்போது தாங்கள் பதில் எழுதுவதை வரவேற்பதாக தெரிகிறது. எனவே நான் உங்கள் ஐயங்களுக்கான பதில்களை
இறைவன் நாடினால் தர முயற்சிக்கிறேன்.
//ஏன் இறையால் பலவாக இருக்க முடியாதா? அது இறையின் சக்திக்கு மீறியதா? //
இறைவனக்கு பலவடிவங்கள் இருக்க வேண்டிய தேவையில்லை என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இன்னும் திருகுர்ஆனில் தன்னை பற்றி இறைவன் குறிப்பிடும் போது "அவனுக்கு நிகாராக எதுவுமில்லை.". (அத்தியாயம்:112, வசனம்:4). பல வடிவங்களில் வருவதால் ஏதேனும் நன்மை உண்டா? ஆனால் தீமைகள் பலவுண்டு. ஏனெனில் வேடதாரிகளும் விசமிகளும் இதன் மூலம் மக்களை, இறைவன் இந்த வடிவில் வந்துள்ளதாக ஏமாற்றி பிழைக்க வாய்ப்புகள் உண்டு. ஆன்மீக கவசத்தை தாங்கி மக்களை ஏமாற்றி சீர்கெடுக்கும் எத்தனை போலி ஆன்மீகவாதிகளை எல்லா மதங்களிலும் பார்க்கிறோம். எனவே இறைவன் அவன் மகத்துவத்துக்கும், மேன்மைக்கும் தகுந்தவகையில் நித்திய ஜீவனாக இறுக்கிறான். அவன் வடிவத்தை உதாரணபடுத்தி, இந்த வடிவாக தான் இருக்கிறான் என்று கூறமுடியாது. ஏனென்றால் அவனுக்கு நிகராக எதுவுமில்லை. பின்பு எப்படி இறைவன் தோற்றத்தை உருவகப்படுத்த முடியும்? இதுவே இஸ்லாத்தின் நிலைபாடு சகோதரரே.
//அதனாலேயே தன்னை மக்கள் வணங்கவேண்டும் என்ற தேவை இறைவனுக்கு இல்லை என்று கருதுகிறார்கள்//
இதற்குரிய பதிலை, இஸ்லாத்தின் இரண்டாம் கடமையான தொழுகையை பற்றிய பதிவில் கூறியுள்ளேன்.(05/2/07) மேற்கொண்டும் ஏதேனும் தேவை என்றால் கேட்கவும்.
சகோதரர் கபீர் அவர்களின் பதிவில் எழுதபட்டுள்ள
//சக்திக்கு உருவம் இல்லை என இஸ்லாம் சொல்வது ஒரு விதத்தில் சரி. மின்சாரத்துக்கு எந்த உருவமும் இல்லை. சக்திக்கு உருவம் உண்டு என சைவமும் வைணவமும் சொல்வதும் சரி.//
என்ற கருத்துக்கும் இதே பதிவில் ஆரம்பத்தில் இறைவன் ஏன் பலவடிவமாக இருக்க தேவையில்லை என்று எழுதிய பதிலே போதுமானதாகும் என கருதுகிறேன்.
எனது பதிவில் உண்மைகளை தாங்கள் அறியும் பட்சத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனது பதிவில் தவறுகள் இருக்குமானால், அது எனது சிறுமதியால் ஏற்பட்ட குற்றமாகும். அதற்கு நான் மன்னிக்க வேண்டுகிறேன். அந்த தவறுகளை சரியாக எடுத்துகாட்டும் பட்சத்தில் திருத்தி கொள்வேன். இறைவன் நாடினால் தொடரும்.
நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
உங்கள் சகோதரன்
நெய்னா முஹம்மது
இந்த விவாதத்தை சகோதரர் அபுமுஹை அவர்களது "இறைவன் மன்னிக்காத குற்றம்" என்ற பதிவில் ஆரம்பித்தேன். அதனை சற்று படித்துபாருங்கள். அதில் இறைவன் மன்னிக்காத குற்றமாக இணைவைப்பதை கூறுகிறார். இணைவைப்பது அல்லாவுக்கு சமமாக இன்னொரு கடவுளை வணங்குவது என்று புரிந்துகொண்டால், அதற்கு ஏன் அல்லா கோவித்துக்கொள்ளவேண்டும்? இன்னொரு கடவுள் இருந்தால்தானே அதனைப்பற்றி கவலைப்படவேண்டும்? இருப்பது ஒருதாய்தான் என்றால் தாயின் ஞாபகமாக எந்த விஷயத்தை கையில் வைத்திருந்தால் என்ன? அம்மாவின் புகைப்படத்தை ஒரு மகன் வைத்திருக்கலாம். அம்மாவின் ஞாபகமாக ஒருமகன் அம்மாவின் சிற்பத்தை வைத்திருக்கலாம். ஒருமகன் அம்மாவின் ஞாபகம் என் மனத்தில் இருந்தால் போதும் என்று நினைக்கலாம். அம்மாவின் ஞாபகமே எனக்கு வேண்டாம் என்று ஒரு மகன் இருந்தாலும் அந்த மகன் மீது அம்மா கோபம் கொண்டு எண்ணெயில் போட்டு சுடுவாளா? அது அம்மா. அது கருணை. அன்பு.
இந்துமதம் அதனால்தான் கவலைப்படுவதில்லை. வணங்கப்படுவதெல்லாம் இறையே.
மேலும் சாதாரண மனித லாஜிக்குகளை இறையிடம் கொண்டுசெல்ல முடியாது. ஒருமை பன்மையெல்லாம் கடந்தது இறை. ஒரே நேரத்தில் ஒருமையாகவும் அதே நேரத்தில் பன்மையாகவும் இறை இருக்கிறது. ஏகன் அநேகன் என்று இறையை கூறுகிறார்கள்.
அநேக உருவங்களில் இந்துக்கள் இறையை வணங்குகிறார்கள். அவர்கள் நன்றாக ஒருவரோடு ஒருவர் சுமுகமாகத்தான் இவ்வளவு ஆயிர ஆயிர வருடங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அரியும் சிவனும் ஒன்று. சக்தியை வணங்கியதற்காக முருக பக்தர்கள் சக்தி வழிபாட்டாளர்களை கொன்றதாகவோ, சிவனை வணங்கியதற்காக விநாயக பக்தர்கள் கொன்றதாகவோ ஏதேனும் வரலாறு உண்டா? ஏனெனில் வணங்கப்படுவதெல்லாம் இறையே என்று இந்துக்களுக்கு தெரியும்.
ஆனால், ஒரே கடவுளை ஒரே பெயரில் வணங்கும் ஷியாக்களும் சுன்னிகளும் இன்றும் ஒருவரை ஒருவர் வெட்டி கொன்று சாகிறார்கள். ஒரே இயேசுவை வணங்கிய கத்தோலிக்கர்களும் புரோடஸ்டண்டுகளும் ஒருவரை ஒருவர் வெட்டி செத்தார்கள். ஏனெனில், அவர்கள் "இப்படித்தான் கடவுளை கும்பிடவேண்டும்" என்று வெறி கொண்டு அலைந்த காரணத்தால்.
அந்த வெறி இந்துமதத்தில் இல்லை. ஏனெனில், எப்படி வணங்கினாலும் இறையையே வணங்குகிறீர்கள் என்றுசொல்லும்போது எப்படி மத வெறி வரும்?
அதனால்தான் இந்துக்கள், கிறிஸ்துவத்தின், இஸ்லாமின் குரூரமான வரலாறு இந்தியாவில் இருந்தாலும், அவர்களையும் மதித்து சகோதரர்களாக வாழ்கிறார்கள்.
இந்துமதம் அன்புமதம். இதுவே ஆன்மீகம். ஆன்மீகம் என்பது அரசியல் கட்சி அல்ல.
வாருங்கள்.
சகோதரன் எழில்
I have one suggestion to improve the blogfile. You have a list of topics or posts on the front page. If you can arrange to have some sort of a marker on each topic when there is a new comment on that post that would make it easy for people who visit your blog to go directly to the new comments or further developments on the blog site. Otherwise one has to click on each post everyday to see how discussions develop and it is a bit tiresome when people are pressed for time in general
:-)
Islam is an "Markkam". It is a clearly drawn way to reach god. Like that, There are many ways to reach god such as "san markkam, sarputhira markkam, saha markkam, thaasa markkam...." they all markkams, not Matham. But hinduism is matham. It is a way of life. can say a culture, a science etc.
It is not that easy to explain. Islam or any Markkam can be followed. But hinduism to be lived. A muslim can follow islam by living in hindu culture.
I think, to understand, you can read "Hindumaha Samuthram" written by CHO in thuklak weekly-from first episode.
நைனா முகம்மது,
உங்கள் பதில்களுக்கு காத்திருக்கிறேன்.
ezhil,
It is waste of time to argue with brain dead people. They are strangled by dogmas.They are closed minded. They never allow rational thoughts. It is very difficult to talk to such people.
We can pity them for their inborn handicap.
Thanks.
"inborn handicap"
பிறவி ஊனம்.
இன்றைய நவீன மருத்துவத்திலும் செப்பனிடுவது கடினமே.
Post a Comment