கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 27). இவரது தங்கை ஷீலா (25). நேற்றுமுன்தினம் பிரின்ஸ் தனது தங்கைக்கு புது சுடிதார் வாங்கி வந்தார்.
சுடிதார் கலர் ஷீலாவுக்கு பிடிக்கவில்லை. அந்த சுடிதாரை பிரின்சின் முகத்தில் அவர் வீசி எறிந்தார். ஆத்திரம் அடைந்த பிரின்ஸ், ஷீலாவை அடித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் 2 பேரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு ஷீலா திடீரென விழித்தார். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த பிரின்சின் முகத்தில் அவர் ஆசிட்டை ஊற்றினார். வலி தாங்க முடியாமல் பிரின்ஸ் துடித்தார். அந்த சமயம் கத்தியை எடுத்து ஷீலா, பயங்கரமாக பிரின்ஸ் மீது குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பிரின்ஸ் துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து ஷீலாவை போலீசார் கைது செய்தனர். தொடுபுழா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Maalaimalar.com
3 comments:
எழில்,இந்த பதிவு எதை குறிப்பதற்கு. ஒரு மனித மனம் பிடிக்காத கலருகாக இன்னொரு மனித உயிரை பறிக்கும் அளவிற்கு கொடியதா?
விளையாட்டுக்கு என்றில்லை சிவா, உண்மையிலேயே இந்த வினோதமான செய்தியின் வினோதம்தான் என்னை பதிய தூண்டியது.
யோசித்துப்பார்த்தால் அப்படி வினோதம் ஒன்றுமில்லை என்றும் தோன்றுகிறது.
அந்த தங்கை தன் அண்ணன் தனக்கு செய்யவேண்டியது கடமை என்று எண்ணுகிறாள்.
அதுவும் இந்தமாதிரி, இந்த கலரில், இப்படித்தான் என்று வேண்டும் என்று எண்ணுகிறாள்.
இல்லையென்றால் அவனையே கொலை செய்யவும் துணிகிறாள்.
இது போன்று நிகழ்வுகள் மிகப்பெரிய அளவில் நடப்பதை நம்மைச் சுற்றி பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்..
யோசித்துப்பாருங்கள்.
எந்தக் குறையையும் உருப்பெருக்கி பெரும் குற்றமாக ஆக்கி அதை வைத்து சக மனிதரைக் கொல்லக் கூடிய அளவுக்கோ அல்லது அவர்களைக் கொடும் சிறை, கடுங்கோல் பாசறைகள் என்று அடைத்து வைத்துச் சித்திரவதை செய்ய முடியும் என்று இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, சீனா, கம்போடியா, சிலே, அர்ஜன்டினா, ஸ்பெயின், ஏன் பெரும் அறிவுத் துலக்கத் தாரகையாகக் கருதப்படும் ஃபிரான்ஸ், மேலும் அருகே இந்தோனேசியா, எகிப்து, சவுதி, பாகிஸ்தான், இந்தியா (காட்டு: பீஹார் சிறைகள்) என்று உலகெங்கும் தக்க ஆதாரங்கள் திரும்பத் திரும்ப நவீன உலகிலேயே கூட கிட்டுகின்றன. தனி நபர்கள் மட்டுமல்ல பண்பாட்டு நிறுவனங்கள், அரசியலமைப்புகள் என்று பல தளங்களிலும் மனிதர் தர்ம நெறிகளை அழித்து கொடியவர்களாக மாற அதிக நேரம் ஆவதில்லை. இதில் எல்லாம் தனி மனிதரின் தூண்டுதல், கருத்துப் பிரச்சாரம், முன்னுதாரணம், ஆர்வமான பங்கெடுப்பு இல்லாமல் கொடுமைகள் நடப்பதில்லை. Evil has both individual and collective faces.
ஈவில் என்று செமிதியக் கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறேனே தவிர அதன் பல வடிவுகள் பல மதங்களிலும் இருக்கின்றன.
இந்தச் செய்தியை மாலை மலர் அளித்த வடிவுக்குள்
பார்ப்பதனால் நாம் உண்மையை அறிய முடியாது. அண்ணன் தங்கைக்குள் முன்னால் என்னவெல்லாம் மோதல்கள் இருந்தன. இதில் யார் பெரும்பாலும் ஆக்கிரோஷமானவராகவோ, அல்லது வன்முறையைக் கையெடுப்பவராகவோ இருந்தார் என்பதும் நமக்குத் தெரியாது இல்லையா?
சில நேரம் பல காலமாக அடக்கி வைக்கப்பட்ட குரோதங்கள் திடீரென்று வெடித்து செயல்படலாம். Trigger என்று இந்தச் சம்பவம் செயல் பட்டிருக்கலாம். மேலும் நல்ல எதிர்காலம் என்று தனக்கு எதுவும் இல்லை என்று நினைக்கும் பெண்கள் நடுவே ஒரு மனநோய் எழ வாய்ப்பு இருக்கிறது. ஆண்கள் நடுவேயும் இது எழும், ஆனால் இந்திய சமூகங்களில் ஆண்கள் தெருவில், பொதுவில், வீட்டில் எல்லாம் ஒரு வித சுதந்திரத்துடன் திரிய முடியும். அந்த திரியும் சுதந்திரமே அவர்களது அடக்கப்பட்ட ஆத்திரத்துக்கு வடிகாலாக அமைய வாய்ப்பு இருக்கிறது. வீட்டோடும், பொதுவிலும் தன் சுதந்திரத்தை எளிதில் உணர முடியாத ஆனால் சுதந்திரம் வேண்டும் என்று அடக்க முடியாத ஆசை உள்ள பெண்கள் இப்படி மன நோய்வசப்படுவதோ அல்லது திடீரென்று வெடித்தெழுவதோ சாத்தியம்தான்.
மாலைமலர் செய்தி ஆய்ந்து அறிதலுக்கு இடம் தராத களம்.
Post a Comment