Tuesday, January 23, 2007

இந்துமதமே அகிலத்துக்கான சிறந்த மதம்

எலிசெபத் டவுண் பேராசிரியர் ஜெ·ப்ரி லாங் எழுதி வந்திருக்கும் புத்தகம், இந்துமதமே அகிலத்துக்கான சிறந்த மதம் என்று கூறுகிறது.

"இந்து மதத்தின் தரிசனம்: இந்து தேசியவாதம் கடந்த ஒரு பார்வை" என்ற தலைப்பில் இவர் வெளியிட்டிருக்கும் புத்தகத்தில், இந்து மதம் ஒரு உலக மதம் என்பதையும், அது எல்லா மக்களும் பின்பற்ற வேண்டிய ஒரு மதம் என்பதையும், அது இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானது அல்ல என்பதையும் கூறுகிறார்.

உலக மக்கள் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், மற்றவர்களது கலாச்சார வேறுபாடுகளை மதித்து வாழ உலக மதமாக இந்துமதத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தியடிகள் ஆகியோர் விளக்கும் இந்துமதம் தேச எல்லைகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கக்கூடியது என்பதையும் இவர் எழுதுகிறார்.

(செய்தியில் இருக்கும் அவரது படத்தில், அவருக்கு பின்னே விநாயகர், நடராஜர் விக்கிரகங்களை காணலாம்)

நன்றி.

Book Presents Hinduism as ‘Universal’ Religion

An Elizabethtown College religion professor has written a book that presents Hinduism as the ‘universal’ religion, capable of providing a model for global inter-religious cooperation and world peace.

Newswise An Elizabethtown College religion professor has written a book that presents Hinduism as the ‘universal’ religion, capable of providing a model for global inter-religious cooperation and world peace.

“A Vision for Hinduism: Beyond Hindu Nationalism” builds upon Jeffery Long’s arguments for religious pluralism developed in his doctoral dissertation for the University of Chicago. In his book, he argues for a traditional pluralistic understanding of Hinduism – as articulated by such figures as Sri Ramakrishna and Mahatma Gandhi – in opposition to the narrow identification of Hinduism with Indian nationality and ethnicity that characterizes contemporary Hindu nationalist movements.

Long asserts that Hindu nationalism is not only destructive of communal relations, but that it also prevents Hinduism from emerging as a world religion in the true sense of the term. He presents a vision of Hinduism as a tradition capable of pointing the way toward a future in which all the world's religions manifest complementary visions of a larger reality - and in which they all, in various ways, participate.

Reviews of Long’s manuscript have described it as “both highly relevant and timely” and “fascinating, ambitious and represents an important foray into inter-religious exchange.”

Long has taught at Elizabethtown College since receiving his doctoral degree at the University of Chicago in 2000. He is the author of the forthcoming “Jainism: An Introduction” and has published in Prabuddha Bharata, The Journal of Religion, Science and Spirit, Creative Transformations and several edited volumes. Long has presented papers for a variety of scholarly organizations, including the American Academy of Religion, the Association for Asian Studies, and the Society for Asian and Comparative Philosophy.

Ranked as one of the best colleges in the northern United States by U.S. News and World Report, Elizabethtown offers its 1900 students 53 academic programs in the liberal arts, sciences and professional studies. Driven by its motto to “Educate for Service,” Elizabethtown centers learning in strong relationships, links classroom instruction with experiential learning, emphasizes international and cross-cultural perspectives and nurtures the capacity for lives of purpose.

17 comments:

Anonymous said...

இந்த பதிவுக்கு நன்றி

இந்துமதம் எந்தவிதமான பிரச்சாரமும், பணபலமும் இல்லாமலேயே தன் உள்ளே இருக்கும் நல்லவைகளால் தொடர்ந்து உலக மானிடர்களை கவர்ந்து வருகிறது

கால்கரி சிவா said...

இந்து மதம் மட்டும்தான் ஆர்கானிக் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மற்றவை எல்லாம் பயமுறுத்தி ஆசை காட்டி ஆளை அடிமையாக்கும் வேலையை செய்கின்றன

வெற்றி said...

ஐயா,
உங்களுக்கு இப் பதிவு சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

எழில் said...

எனக்கு அப்படி தெரியவில்லை. உங்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தெரிகிறதா? ஏன் அப்படி தெரிகிறது?

ஜெ·ப்ரி லாங் அவர்கள் புத்தகத்தை பற்றி எழுதியிருக்கிறேன். அந்த புத்தகத்தில் அவர் என்ன கூறுகிறார் என்பதை பற்றி அவர் கொடுத்திருக்கும் செய்தியை குறிப்பிட்டிருக்கிறேன். அவர் எழுதுவது உங்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறதா?

அவர் எழுதுவது சிறுபிள்ளைத்தனம் என்று அவருக்கு எழுதி விளக்கலாமே?

எனக்கென்னவோ, அவர் தமிழில் வலைப்பதிவுலகில் எழுதும் பலரைவிட மிகவும் ஆழமாக படித்தவராகவும், பல்வேறு மதங்களை படித்து ஆராயந்தவராகவும், அதனால் religion professor ஆகவும் உயர்ந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

Anonymous said...

தொடர்ந்து மிகச்சிறப்பான பதிவுகளை தந்துகொண்டிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி

கருப்பு said...

//உலக மக்கள் ஒருவரை ஒருவர் வெறுக்காமல்//

நல்வகை வர்ணம் கொண்டு தீண்டத் தகாதவன், தாழ்த்தப்பட்டவன் என்று மனிதனில் பேதம் காட்டச் சொன்னது யார்? காட்டிய இழிபிறவிகள் யார்?

கருப்பு said...

//இந்து மதம் மட்டும்தான் ஆர்கானிக் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.//

அப்ப இஸ்லாம் மதம் இநார்கானிக்கா? கால்மாரி கெமிஸ்ட்ரி எல்லாம் படிச்சிருக்கும் போல!

எழில் said...

என்னை அன்புத்தம்பி என்று அன்புடன் அழைத்த சகோதரர் விடாது கருப்பு,

உங்கள் கருத்துக்கு நன்றி.

http://ezhila.blogspot.com/2007/01/blog-post_14.html#116892201976248394 இந்த இடத்தில் சில கருத்துக்களை எழுதியிருந்தேன். மறுபடி அவற்றை இங்கே குறிக்கிறேன்.

வெகுகாலம் முன்பு படித்ததை சொல்கிறேன். எங்கே என்று ஞாபகமில்லை.
இறைவன் முகத்திலிருந்து பிறந்தது காலில் இருந்து பிறந்தது என்று ஒன்றும் கிடையாது. தவறான மொழிபெயர்ப்பு. வழக்கம்போல வெள்ளைக்காரர்களின் திருகுத்தனமான மொழிபெயர்ப்பு.

இந்த சமுதாயம் ஒரு மகா மனிதனை போல இருக்கிறது. அதின் பிராம்மணர்கள் தலை போல இருக்கிறார்கள். அதன் தோள்கள் போல சத்திரியர்கள் இருக்கிறார்கள். அதன் கைகள் கால்கள் போல சூத்திரர்கள் இருக்கிறார்கள். அதன் நெஞ்சு வயிறு போல வைஸியர்கள் இருக்கிறார்கள். என்பதுதான் நான் படித்தது. பிறப்பால் பிராம்மணன் என்பதெல்லாம் வேதங்களிலோ உபநிடதங்களிலோ கிடையாது. ஜாபால் சத்தியகாமர் என்று ஒரு உபநிடதத்தில் வரும் ரிஷிக்கு அப்பா பெயர் தெரியாது. அவரது தாயார் ஒரு வேலைக்காரர்.

எல்லா சமுதாயங்களிலும் மூளைபோல பல்கலைக்கழகத்து பேராசிரியர்களும் , போர் வீரர்களும், வியாபாரிகளும் அந்த சமுதாயத்துக்கு வேலைக்காரர்களாக (நான் உட்பட) எல்லோரும் இருக்கிறோம். இதில் உயர்வு தாழ்வு என்று ஏதும் இல்லை.

பல்வேறு ஜாதியைச் சேர்ந்த மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மன்னர்களாகும்போது அவர்களது ஜாதி சத்திரிய ஜாதி ஆகிறது. ஜாதி என்பது மிகவும் dynamic ஆன ஒன்று. அது முன்னர் பலரும் நினைத்துக்கொண்டிருந்தது போன்று static ஆன ஒன்று இல்லை என்று இப்போது பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது நால் வருணம். இதனைத்தான் ஒவ்வொரு சமூகத்திலும் இருப்பதாக இந்து சாத்திரங்கள் கூறுகின்றன. அமெரிக்காகாவாக இருந்தாலும் சரி இத்தாலியாக இருந்தாலும் சரி, இப்படி போர்வீரர்களும், கல்வித்துறையில் இருப்பவர்களும், வியாபாரிகளும், பல்வேறு துறைகளில் வேலை செய்பவர்களும் இல்லாத ஒரு சமூகம் இல்லை. இந்து சமூகத்தில் என்றும் அடிமை முறை கிடையாது. அந்த கேவலமான அடிமை முறை, மனிதனை மனிதன் வாங்கி விற்ற கேவலமான அடிமை முறை இஸ்லாமிய கிறிஸ்துவ சமூகங்களில் இருந்தது. இன்னும் சில கிறிஸ்துவ இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறது. சமீபகாலம் வரைக்கும் ஐரோப்பா, அமெரிக்கா. தற்போதைய உதாரணம் சூடான், நைஜீரியா.

மக்களை சமமானவர்களாக பார்த்த இந்து சமூகத்தில் என்றுமே ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வாங்கி விற்றதற்கான சூழ்நிலையோ, தத்துவமோ இருந்ததில்லை. அப்படிப்பட்ட கேவலமான் சமூகத்திலிருந்து வந்தவர்கள் அடிமை முறையே இல்லாத இந்து சமூகத்தை பற்றி கேவலமாக பேச முனைவது ஆச்சரியமில்லை. ஏனெனில், நாம் பல்வேறு விதமான காரணங்களாலும் நமது அப்பாவித்தனத்தாலும் அவர்களது ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்தது.

அதனால், நமது சமூகத்தில் இருந்த சில புல்லுருவிகள் நமது சாத்திரங்களை தவறாகவும், இப்படி நம்மை ஆண்டவர்கள் நம்மை கேவலப்படுத்தி நாம் உதவாக்கரைகள் என்று நம்மை உணரவைத்து அவர்களது ஆட்சியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் திருகுத்தனமான மொழிபெயர்ப்புகளை செய்து நம்மை ஏமாற்றினார்கள். உண்மை என்றும் உறங்காது. அது மேலே கண்ட பேராசிரியர் முதற்கொண்டு அதனை உணர்ந்து உலக சமாதானத்துக்கு இந்து தர்மமே சிறந்தது என்று கூறுகிறார்கள்.

Anonymous said...

//தீண்டத் தகாதவன், தாழ்த்தப்பட்டவன் என்று மனிதனில் பேதம் காட்டச் சொன்னது யார்? காட்டிய இழிபிறவிகள் யார்?//

இந்த பதிவை படிக்கவும்

http://nesakumar.blogspot.com/2006/11/blog-post.html

Anonymous said...

நல்ல பதிவு.. நல்ல பதில்கள்

கால்கரி சிவா said...

//அப்ப இஸ்லாம் மதம் இநார்கானிக்கா? கால்மாரி கெமிஸ்ட்ரி எல்லாம் படிச்சிருக்கும் போல!
//

விடாது கருப்பு, இநார்கனிக் மட்டுமல்ல இன்ஹுமன் கூட.

கெமிஸ்ட்ரி என்ன பயாலஜி, பார்மகலாஜி, பிசிக்ஸ், சைகாலஜி, செக்ஸ்வாலஜி மற்றும் உன்னை மாதிரி ஆட்களுக்கு வைத்தியம் பார்க்கும் வெர்டினரி கூட படிச்சிருக்கு இந்த கால்மாரி

Anonymous said...

MONEY IS THE WISE MAN'S RELIGION.

எழில் said...

அன்பு சகோதரர் ஜாலிஜம்பர்,
நிச்சயமாக நீங்கள் சொல்வது சரிதான். ஷியா சுன்னி என்று அடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், புரோடஸ்டண்ட் கத்தோலிக் என்று அடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் எப்படி பணம் பண்ணுவது? எம்மதமும் சம்மதம் என்று இருக்கும் சூழ்நிலையில்தானே பணம் பண்ணமுடியும்?

ஆகவே இந்துமதமே நல்ல மதம்.

Anonymous said...

எழில் ஐயா
நமது மரைக்காயர் ஐயா தங்களிடம் எதேதோ கேள்விகள் கேட்டாராமே?

தாங்கள் அதற்காண சரியான பதில்களை சொல்லலையாமே என்று புலம்பிகிட்டு இருந்தார் அதான் அவருக்கு புரியும் படியா எனக்கு தெரிஞ்ச மாதிரி இங்கே பதில் எழுதியிருக்கேன்

இதுதான் எனது முதல் பதிவு தங்களைப்போன்றவர்கள் வந்து இந்த புது வலைப்பதிவனை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

ஜடாயு said...

எழில்,

அருமையான இந்த நூல் பற்றி பதிவிட்டதற்கு மிகவும் நன்றி.

இந்து மதம் உலக மதம். அதன் கூறுகளையும், தத்துவங்களையும் பிய்த்து அதெல்லாம் ஏதோ பிரதேச, சிறுகுழு கலாசாரம் என்று திரிக்கும் சதிவேலையை இந்து தர்மத்தின் எதிரிகள் பல காலமாக செய்து வருகிறார்கள்.. இதில் சில இந்துக்களும் துரதிர்ஷ்டவசமாகக் குழம்புப் போகிறார்கள்..

எனது இந்த பதிவில் இது பற்றி சொல்லியிருக்கிறேன் -
http://jataayu.blogspot.com/2007/01/blog-post.html

எழில் said...

தற்போது வால்மார்ட்.காமிலியே இந்த புத்தகம் கிடைக்கிறது.

பல இடங்களில் முதல் பதிப்பு விற்று தீர்ந்துவிட்டது..

வால்மார்ட் இணைப்பு

Anonymous said...

About the Author

Jeffery D. Long is Assistant Professor of Religious Studies at Elizabethtown College, Pennsylvania. He studied at the University of Chicago and at Jawaharlal University in New Delhi, and specialises in South and East Asian religious and philosophical traditions and comparative issues in the study of religion.

He presents a vision of Hinduism as a tradition capable of pointing the way towards a future in which all the world's religions manifest complementary visions of a larger reality - and in which they all, in various ways, participate. This radical religious agenda puts a new and exciting perspective on Hindu and South Asian studies alike.

--

excellent!