Tuesday, January 09, 2007

ஏகாதிபத்திய முன்னோடி படை

ஒரு அனானி எழுதிய பின்னூட்டத்தை இங்கே தனிப்பதிவாக இடுகிறேன்.

அதே அனானி இன்னொரு பின்னூட்டமும் எழுதியிருக்கிறார். அதுவும் தனிப்பதிவாக வரும்

--
இது எழிலுக்கு சொல்வது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். இது நம் ஒவ்வொருவருக்கும் சொல்வது...

நன்றி

--

ராமச்சந்திரன் உஷா சொல்வது நியாயமானது போலத் தோற்றமளிக்கிறதே தவிர எதார்த்தமாகப் பார்த்தால் அது வழக்கமான மதில்மேல் பூனை கதைதான்.
இந்தியா இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாகி 800 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அரை நூறாண்டுகளாகத் தலைஎடுத்து வருகிறது. இந்தக் காலகட்டத்திலும் மூன்று புறமும் இந்தியாவை உருக்குலைக்க என்ன வழி என்று பார்த்துத் தொடர்ந்து ஆயுதமேந்தி நிற்கும் மூன்று நாடுகள். அவற்றிற்குப் பின்னே உள்ள இரு மதங்களின் சார்பாளர்களான பண்பாட்டு ஏகாதிபத்தியங்கள்- முன்னாள் காலனியவாதிகள்.

எவையெவை அந்த ஏகாதிபத்தியங்கள் என்று நான் சொல்லி அவருக்குத் தெரிய வேண்டாம், அந்தச் சிறு தகவல்/ வரலாறு பள்ளிப் படிப்பு முடித்த எவருக்கும் இந்தியாவில் தெரிந்திருக்கும். ஆனால் அது ஏதோ நடக்காத ஒன்று போலவும் இந்துக்கள் தொடர்ந்து ஏமாளிகளாகவே இருக்க வேண்டும், மறுபடி அடிமைகளாக ஆக வேண்டும் என்று அந்த ஏகாதிபத்திய மதங்களின் பிரச்சாரகர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்களின் கைப்பாவைகளாக இந்தியர்களே இயங்கும் ஆபத்தை என்ன சொல்வது என்றே புரியவில்லை.

மற்ற இரண்டு ஏகாதிபத்திய முயற்சிகளும் தொடர்ந்து இந்தியாவில் தம் பண்பாட்டுக் காலனியத்தை எப்படியாவது திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று பலவிதமாக இழி பிரசாரங்களையும், மக்களைக் குழுவாரியாகப் பிரித்துப் பகை ஊட்டித தம்பக்கம் இழுப்பதையும், ஆங்காங்கே தம் மதக் குழுவுக்கு ஒரு அளவு ஆள்பலம் சேர்ந்ததும் இந்தியாவில் இருந்து தம் பகுதியைப் பிரிக்க இயக்கம் நடத்தத் தூண்டுவதுமாக ஒரு அமில அரிப்பு இயக்கம் நடத்துகிறார் என்பதை அவர் தன் தாராள சகிப்பு நிலையில் இருந்து பார்க்க மறுக்கலாம். ஆனால் இந்தியா மறு ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு அடிமையாகாமல் உலகில் பெரும் வன்முறையை எங்கும் பரவ விட்ட இரண்டு மதங்களின் காலனியாகாமல் இருக்காமல் காக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அப்படி ஒரு பொறுப்பை எழில் எடுத்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தெரிகிறது.
அவர் மற்ற இரு மத காலனியங்களும் இந்துக்கள் மீது சுமத்திய பழிச் சாட்டைச் சாதாரணமாக அவர்கள் மீது திருப்பி இருக்கிறார். அதாவது உங்கள் மதம் ஒரு பெரும்கட்டுக்கதை, அதற்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அது வெறும் அடக்கு முறைதான். சில ஆளும் குழுக்கள் மற்றவரை அடக்கச் செய்த சூழ்ச்சி என்று இந்தியாவில் எங்கும் பிரச்சாரம் நடத்துகிறார்கள்
அவர்கள். தெருத்தெருவாகத் தமிழ்நாட்டில் ஒரு நாற்பதாண்டுகள் இந்து மதம் இழிக்கப் பட்டு இருக்கிறது. பள்ளிகளில் கூட அதற்கு எதிராக, மற்ற மதங்களுக்குச் சாதகமாக போதனை நடக்கிறது. அவர் தன் போக்கில் போவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் ஒரு நாள் திரும்பிப் பார்த்தால் இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், ஆப்பிரிக்காவில் பல நாடுகளிலும் நடந்த பண்பாட்டு அழிப்பும், முழு மூளை சலவையும் இந்திய மக்களுக்கும் நடந்து முடிந்திருக்கும். அவருக்கு ஒருவேளை அதனால் என்ன, மக்கள் அமைதியாக வாழ, வளமாக வாழ வழி கிட்டினால் போதாதா என்று ஒரு கருத்து இருக்கலாம். காலனியாதிக்கத்தில் மனிதரின் அறிவு மட்டுமல்ல ஆன்மாவே சூனியமாகி விடும் என்பது எழில் போன்றாரின் கருத்து.

அதற்குள் நம் தாராள 'செக்யுலர்' மிதவாதிகளுக்கு உடலில் பெரும் பதற்றம் வந்து விடுகிறது. ஏதோ மற்ற மதத்தினரை நாடு கடத்த முயற்சிப்பது போல. எழில் சொல்வதெல்லாம் மிகவும் சாதாரணக் கருத்து. அவர் ஒன்றும் அமெரிக்க, ஐரோப்பிய கிருத்தவத் தீவிர வாதிகளைப் போல தன் மதம் தவிர மற்றெல்லா மதத்தினரும் காட்டு வாசிகள், அவர்கள் மீட்சி பெற ஒரே வழி இந்துமதம்தான் இல்லாவிடில் அவர்கள் பாழிருளில் வீழ்வார்கள் என்று சொல்லவில்லை. நாளொரு வீதி பொழுதொரு முடுக்கு என்று குண்டு வைத்துக் கொல்ல ஆணை பிறப்பிக்கும் கோழைத்தன, கொலைகார முயற்சிகளுக்குத் தம் கடவுளின் ஆதரவும் முழு அங்கீகாரமும் உண்டு என்று சொல்லிக் கொலை வெறியைப் பரப்பவில்லை. நிறவெறியையும் அடிமை ஆட்சியையும் செல்வச் செழிப்பால் வரும் மமதையையும் இங்கு கொட்டவில்லை.

முன்னாள் அடிமைகளான இந்தியருக்கு, இன்னமும் முழு விடுதலை கிட்டவில்லை, நாற்புறமும் பகைமை சூழ்ந்திருக்கிறது, உள்நாட்டிலும் தாராளவாதிகளின் அங்கீகாரத்தோடு பகைப் பிரச்சாரம் தொடர்கிறது என்று எச்சரிக்கிறார். பகைப் பிரச்சாரத்தின் பணபலத்தால் உருப்பெருக்கப் பட்ட 'உண்மை வரலாறு்லாறு' நம் மிதவாதிகளாலும், பகுத்தறிவுகளாலும், இடதாலும் தொடர்ந்து இழித்துப் பேசப்படும் இந்து மதத்தின் சாதாரணமான அற நெரி போதிக்கும் ஆன்மிகம் தூண்டும் குறியீட்டுக் கதைகளை விட எந்த விதத்திலும் மேலானவையுமல்ல, வரலாற்றில் காலூன்றிய 'பேருண்மைகளும்்' அல்ல. மாறாக அவை வன்முறையிலும் சூழ்ச்சியிலும், பிற பண்பாடுகளின் மீது அடங்காக் குரோதமும் கொலைவெறியும் கொண்ட பொய்க் கதைகளே என்று சுட்டுகிறார்.
அவர்களை அக்கதைகளை நம்பாதீர்கள் என்றும் பிரச்சாரம் செய்யவில்லை, அதை நம்புவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த மதப் பாசறைகளில் உள்ள 'அமைதிப் படையினரை'ப் போல உலகவலையில் பிரகடனம் செய்யவில்லை.
உலகில் இன்று இருக்கும் நாடுகளில்,்களில் பெருமளவு அமைதிப்பாதையையும், ஆயுதமேந்திப் போரிடுவதில் எந்தப் பயிற்சியுமற்ற பெரும் மக்கள் திரளையும் கொண்ட ஒரேநாடு இந்தியாதான். அது தன் சுதந்திரத்தையும் சுயப் பண்பாட்டையும் இழக்காமல் இருக்க எடுக்கும் தற்காப்பு முயற்சிதான் எழிலின் முயற்சி. இது புரியாதவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது.

1 comment:

Anonymous said...

ஆனால் ஒரு நாள் திரும்பிப் பார்த்தால் இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், ஆப்பிரிக்காவில் பல நாடுகளிலும் நடந்த பண்பாட்டு அழிப்பும், முழு மூளை சலவையும் இந்திய மக்களுக்கும் நடந்து முடிந்திருக்கும்.

So True already..

The current generation of the Indians are so brainwashed that they feel bad about their own culture, traditions and history.

You have to appreciate the christian and Islamic missionaries for their commendable job.

First remove his pride over his own culture. Then he is your slave.