ஜோனதன் ஹைட் (விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மனவியல் பேராசிரியர். The Happiness Hypothesis: Finding Modern Truth in Ancient Wisdom." என்ற புத்தகத்தின் ஆசிரியர்)
குடியரசு கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும் இணைந்து எது இருக்கவேண்டுமோ அதனை இருக்க வைத்து எது போகவேண்டுமோ அதனை போகவைத்து இணைந்து செயல்பட வேண்டும் என்று எழுதுகிறார். இதற்கு அவர்கள் நோக்க வேண்டிய தத்துவம் இந்துமதம்.
What can we do to become more "Hindu?" என்று எழுதி அதன் மீது மேலும் அருமையான வாதங்களை வைக்கிறார்.
அதனை இங்கே படிக்க..
"தர்மாகிரஸி உணர்வு.."
தர்மம் என்னும் அறத்தை போற்றுவது எப்படி என்ற அடிப்படையை எழுதுகிறார்.
--
The spirit of Dharmacracy
Republicans and Democrats should take a lesson from gods Shiva and Vishnu, the destroyer and preserver who work together.
By Jonathan Haidt, JONATHAN HAIDT is an associate professor of psychology at the University of Virginia and the author of "The Happiness Hypothesis: Finding Modern Truth in Ancient Wisdom."
January 14, 2007
AS DEMOCRATS change the drapes on Capitol Hill and relegate Republicans to minority status, both parties would do well to look to the ancient East for advice on how opposites should — and should not — work together.
In Hinduism, two of the main gods are Shiva the destroyer and Vishnu the preserver. They are not enemies but partners in the governance of the world, and Shiva's "destruction" is really change, as in the change of seasons or of generations. Another Eastern tradition, the Manichean religion of ancient Persia, holds that the forces of good and evil eternally battle for control of the universe, and we humans get hurt in the process.
Which of these two models is most appropriate for our two-party system?
It ought to be Hinduism. Underneath the numerous policy differences between liberals and conservatives lie a few philosophical differences, one of which is the importance of institutions. Liberals tend to be wary of institutions — marriage, the military, religions — because they preserve old ways of doing things. Sometimes these old ways embody hierarchical distinctions based on gender, race or class, and liberals reflexively question them. Progressives are, by definition, those who value change in the service of progress. Robert F. Kennedy spoke for Shiva when he said, "I dream things that never were and say 'why not?' "
Conservatives, on the other hand, view social order as a tenuous achievement made possible only by the respect we all pay to social institutions that regulate and constrain the actions of individuals. When institutions are weakened, chaos erupts and we are all worse off.
The conservative philosopher Irving Kristol spoke for Vishnu when he said, "Institutions which have existed over a long period of time have … a collective wisdom incarnate in them, and the fact that we don't perfectly understand or cannot perfectly explain why they 'work' is no defect in them but merely a limitation in us."
Seen in this way, liberals and conservatives are both necessary for the health of a democracy. Institutions are important, and many work best when they command respect, even reverence. Yet institutions must not ossify and lose touch with the changing demographics, values and scientific knowledge of the societies they serve.
Unfortunately, in recent years our democracy has moved ever closer to the Manichean model. Evolution has shaped the human mind to take readily to the game of good versus evil, and once debate escalates into war, once the other side is demonized, then the ends justify the means and no tactic is beyond the pale. Electoral fraud, character assassination, lies and subversion of our constitutional system's checks and balances — all are carried out by political players who feel no guilt for their conduct because they believe they are on the side of the angels. Our nation — and the world — get hurt in the process.
How can we make our two-party system more beneficial for the nation? What can we do to become more "Hindu?"
We can practice and vote for spirited civility. We can enthusiastically criticize each other's ideas (that's the spirited part), but insults, ad hominem attacks and contempt should be declared out of bounds in public discourse. Whenever we hear a politician, a talk-show host or even a friend making uncivil political remarks, we can strive to uphold norms that embarrass them into more productive behavior.
We can say such things as: "Attacking people for their ideas is petty. Please address the ideas."
This proposal may sound naive, but there is a powerful psychological mechanism supporting it. In my research on the role that emotions play in morality, I have found that acts of virtue, nobility and honor create feelings of moral elevation in those who witness them. When people feel morally elevated, they are not petty and vengeful. They want to behave in an elevated way themselves, and they admire the person who elevated them.
The last two presidential elections were elevation-free zones. Virtually all the candidates played to our fears, anger and self-interest. The next presidential candidate who elevates Americans by combining spirited civility with oratorical ability will, I predict, win in a landslide. He or she may not win the votes of committed Manicheans, but most of the country is burned out on the self-righteous and self-destructive battle of good versus evil. Let us hope that the next pair of presidential nominees — and the current Congress — can see our two-party system as a partnership in which both parties are necessary and neither side has a monopoly on truth or virtue.
19 comments:
கட்டுரை இணைப்புக்கு நன்றி.
உலகெங்கும் மெத்த படித்தவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்துமதத்தின் தத்துவ உள்ளடக்கத்தை விதந்தோதி வருகிறார்கள்.
ஆனால், இங்கே மாக்களோ, இந்த நாட்டை ஆண்டபோது வெள்ளைக்காரன் உளறியதை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்..
என்ன செய்வது..
http://thamizmanam.com/forward_url.php?url=http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_15.html
அன்பு அண்ணன் விடாதுகருப்பு இந்த பதிவை கிண்டல் செய்து எழுதியிருக்கிறார்.
அதில் அன்புடன் "தம்பி எழில்" என்று கூறியிருப்பதை படித்து சந்தோஷமடைந்தேன்.
கருத்து வேறாக இருந்தாலும் மனிதனை மதிக்கும் பண்புதான் தமிழர்களை தமிழர்களாக வைத்திருக்கிறது.
அந்த பண்பு வரவேண்டும் என்றுதான் இந்த கட்டுரையை எழுதிய பேராசிரியரும் குடியரசுக்கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் அறிவுரை கூறுகிறார்.
நட்புடன் எழில்
எழில், எங்கிருந்து இந்த மாதிரி விஷயங்களை பிடிக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
மேற்கோள் இந்தப் பேராசிரியரின் அறிக்கையில் இருந்து: I have found that acts of virtue, nobility and honor create feelings of moral elevation in those who witness them. When people feel morally elevated, they are not petty and vengeful. They want to behave in an elevated way themselves, and they admire the person who elevated them.(மேற்கோள் முடிவு)
இதைத்தான் விடாதுகருப்பு அவர்களும் நீங்களும் கடைப்பிடிக்கிறீர்கள் போலிருக்கிறது! நற்பண்பு தொடரட்டும். :)
அதற்கு முன்னால் பேராசிரியர் சொல்கிறார்- அவர்கள் கொண்ட கருத்துகளுக்காக அவர்களைத் தாக்காதீர்கள். அந்தக் கருத்துகளைத் தாக்குங்கள் என்று.
இதில் பிரச்சினை என்னவென்றால் இந்தக் கருத்தை மதிக்காதவர்களை என்ன செய்ய?
உற்சாகமூட்டும் செய்தி எழில். இதைப் பதிப்பித்ததற்கு நன்றி.
அமெரிக்காவில் யோகா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. யோகா கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மாணவனுக்கும்/மாணவிக்கும் இந்து தர்மம் பற்றிய ஒன்றிரண்டு விஷயங்களாவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ போய்ச்சேருகின்றன. அதனால் அவர்கள் இந்து மனதின் மீடு மிக நல்ல எண்ணம் உருவாகாவிட்டாலும், எதிர்மறை எண்ணங்கள் உருவாவது தவிர்க்கப் படுகிறது!
தர்மம் என்றும் வெல்லும்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் யோகா ஒரு உடற்பயிற்சி கலையாக ஆரம்பித்தது. 250 பள்ளிகளில் 7 லட்சம் குழந்தைகள் தினமும் ஓம்கார மந்திரத்தை உச்சரித்தனர். இதைப் பொறுக்க முடியாத கிறித்துவ பாதிரியார்கல். யோகாவை பள்ளிகளில் தடை செய்ய வேண்டும் என போர்கொடி தூக்குகின்றனர். ஆனால் ஓம்கார நாதம் உரத்து ஒலிக்கிறது
Not so fast, Jatayu! யோகாவாகட்டும், தருமமாகட்டும் அமெரிக்காவில் இரண்டும் பணத்துக்குத் தான் அடிமைகள். சுலேகா வலைபபக்கத்தில் யோகா பற்றி சர்ச்சைகள் நடந்ததாக நினைவு. நிறைய அமெரிக்கப் பத்திரிகைகளே இதைப் பற்றி எழுதி விட்டன. 1926 இலோ என்னவோ இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து யாரும் அமெரிக்காவுக்குக் குடி பெயரத் தடை பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அந்தத் தடை நீடித்தது. இது ஐரோப்பியர்களுக்கு மிக்க லாபமாக, அமெரிக்காவைக் கைப்பற்றி அவர்கள் கையில் - கிருத்தவ ஆட்சியில்- என்றென்றுமாக வைத்திருக்க உதவியாக இருந்தது. காரணம்- 1920க்கு முன் இங்கு குடியேறிய சில இந்து/ யோகா சாமியார்கள்தான். அவர்களுடைய சீடர்களாக அமெரிக்க மேற்குக் கரை மாநிலங்களில் நிறைய பெண்கள் குறிப்பாக நடு வயது தனியரான மாதுகள் சேர ஆரம்பித்தது, பல யோகா நிலையங்களில் பெண்கள் பயில ஆரம்பித்தது எல்லாம் கிருத்தவத் தீவிர வாதிகளையும், வெள்ளை ஆண்களையும் அச்சுறுத்த யோகா, மேலும் இந்து மதம் (அதான் காட்டு மிராண்டி மதம், அல்லது பாகன் (pagan) மதம் அமெரிக்காவைக் கைப்பற்றப் போகிறது என்று பயம் காட்டி இந்தியத் துணைக் கண்டத்து மனிதர்களையே நுழைய விடாமல் அடித்தார்கள். இதர ஆசியர்களுக்கும் இதே அனுமதி மறுப்பு கிட்டியது, இனவெறிப் பயத்தால்.
இன்று யோகா பரவக் காரணம் பல. இரண்டைக் குறிக்கிறேன். ஒன்று அமெரிக்கரில் வயதானவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. அவர்களுக்கு வழக்கமான பளுதூக்குதல், ஓடுதல் போன்ற இதர கடின உடற்பயிற்சிகள் அவ்வளவு பலனளிக்கவில்லை. யோகா ஒரே நேரம் அமைதி, உடலை வளைத்து அசைத்து நகர உதவும் flexibility,
மேலும் திசுக்கள், மூட்டுகள், நரம்புகள் ஆகியவற்றைச் சேதம் செய்யாமல் மென்மையாக நடத்தும் எளிமை ஆகியவற்றால் அவர்களுக்குக் கூடுதலான பயனைத் தருகிறது என்று அந்த வயதானவர்களின் கூட்டம் கண்டு வருகிறது. இந்த வயதானவர்களின் கூட்டத்தில் ஒரு கணிசமான பகுதிதான் 60களில் போதை மருந்துகளை உட்கொண்டு, குருமார்களைத் தேடி அலைந்து, மஹரிஷி யோகி போன்றாரை (ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் குருவும் இதில் சேர்த்தி) கொணர்ந்து மேற்கிலெங்கும் பயணம் செய்ய வைத்து தறிகெட்டு அலைந்த தலைமுறை. பீடில்ஸ் குழுவோடு சேர்ந்து வடக்கிந்திய செவ்விசைக் கலைஞர்களின் அமெரிக்க அறிமுகமும் இவர்களால்தான் நேர்ந்தது. அதே தலைமுறை இன்று 50+, 60+ கூட்டமாக அமெரிக்காவில், வசதி உள்ள மக்கள் குழுவாக அமையவும், அவர்கள் யோகாவை இங்கு பிரபலமாக்கி வருவதில் ஏதும் ஆச்சரியமுண்டா?
இரண்டாவது, இப்போது் இங்கு பரவும் யோகாவுக்கும் முந்தைய (60களின்) தேடலுக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது.
இப்போது யோகா கிருத்தவ யோகாவாக மாறியாயிற்று. எவ்வளவுக்கு இந்து மதக் குறியீடுகள், இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள் எல்லாவற்றையும் அதில் இருந்து கழற்ற முடியுமோ அவ்வளவுக்கு யோகா ஆசிரியர்கள் அதை 'சுத்திகரித்து' வருகிறார்கள். எனவே இதனால் இந்து சிந்தனை, பண்பாடு ஏதும் அமெரிக்காவில் பரவுவது கடினம். baby boomers என்று அழைக்கப் படும் தலைமுறையின் கிருத்தவம் தாண்டிய பழக்கவழக்கங்களை நன்கு அறிந்த எவாங்கலிக கிருத்தவ மத நிறுவனங்கள், இன்று கிருத்தவ யோகப் பயிற்சிகளை தமது மதக் கோவில்களில் வகுப்புகளாகவே நடத்துகின்றன.
இவற்றில் பல இடங்களில் யோகா ஐரோப்பியரால்தான் பண்படுத்தப் பட்டது போலவும், இந்துப் பழக்கங்கள் அறிவியல் பூர்வமானவை அல்ல என்றெல்லாம் கூடப் போதிக்கப் படுவதாகச் சில அறிக்கைகள் சொல்கின்றன.
யோக உடல் நிலைகளை patent செய்யக் கூடச் சில அமெரிக்க மேலும் இந்திய (அமெரிக்க) ஆசிரியர்கள் முயல்கிறார்கள். பிக்ரம் யோகா என்ற பயிற்சி முறை இப்படி patent protection கொண்டது என்று நினைக்கிறேன்.
தருமம் என்றும் வெல்லாது. நின்று இறுதியில் வெல்லும். அல்லது வெல்லலாம். அது ஒரு நம்பிக்கைதான்.
கெயின்ஸ் சொன்னது நினைவு வருகிறது. "in the long run we are all dead" . சுதந்திரச் சந்தை தானாக சமநிலைக்கு வந்துவிடும், அதாவது நாளாவட்டத்தில் என்று வாதிட்டவர்களிடம் அவர் அப்படிச் சொன்னாராம். அதனால்தான் தானாகக் கனியாத இந்திய மக்களை மேலைக் கருத்தியல் தடியால் அடித்துக் கனிய வைக்கிற பெரும் கூட்டம் இந்தியாவில் பெருத்து வருகிறது.
தருமம் ஒரு வேளை சீக்கிரமே protected species ஆகக் கருதப்பட்டு தனிக் காட்டு வளாகத்தில் காட்சிப் பொருளாக இருக்குமோ என்னவோ?
்
பின்னூட்டங்களுக்கு நன்றி
நன்றி ஜடாயு, நன்றி அனானி, நன்றி கால்கரி சிவா.
விஷயம் தெரிந்த அனானியின் கருத்துக்கள் இந்த விஷயத்தின் ஆழத்தை காட்டுகின்றன.
ஆனால், யோகாவை படிக்க ஆரம்பிப்பது என்பது வெறும் உடல்பயிற்சியாக மட்டுமே முடியாது. அது வெறும் உடல் பயிற்சி அல்ல.
எழில்!
ஐரோப்பியருக்கும்;அமெரிக்கருக்கும் எதிலும் புதுசு புதுசாக மாறுவதில் ஆர்வம் கூட அது மதமாக இருக்கலாம்;மனைவியாக இருக்கலாம்.
அமெரிக்க ;ஐரோப்பியர் பலர் இஸ்ஸாத்துக்கு மாறி உன்னதமான மதம் இஸ்ஸாம் என எழுதுகிறார்கள்;கூறுகிறார்கள். இதில் பேராசிரியர்களும் அடங்குவர்.
பல வருடங்களுக்கு முன் சந்திரனில் கால்வைத்த நில் ஆம்ஸ்ரோங் ;மக்கா சென்று "கபா" பார்க்கச் சென்று கூறியது ;சந்திரனில் கால்வைக்கும் போது ஒரு ஒலி கேட்டேன். அதே ஒலியை இப்போ இக் "கபா" அருகில் கால் வைத்தபோது கேட்டேன்."புரிந்திருக்கும் உங்களுக்கு!!
அவ்வளவே!!!அவர்கள் அப்படித்தான்....
யோகன் பாரிஸ்
யோகன் நீல் ஆம்ஸ்ட்ராங் விசயம் வடிகட்டிய பொய்.
எழில். இந்து தருமத்தின் ஏற்புத்தன்மையை பேரா. புகழ்ந்தது இருக்கட்டும். அதற்கு அப்பால் இந்து தருமம் அமெரிக்கர்களால் ஏற்கப்பட நாம் செய்ய வேண்டிய முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. அண்மையில் கிறிஸ்தவ்த்திற்கு அடக்குமுறையால் அடிமை நிலையால் மாற்றப்பட்ட ஆப்ரிக்க இனத்தவர் மற்றும் கிறிஸ்தவத்தை இன்றளவும் எதிர்க்கும் பூர்விகக் குடிகள் ஆகியோரின் ஆன்மிக இயக்கங்களுடன் நெட் - வொர்க் உருவாக்க வேணும். அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேணும். உலகெங்கும் உன்னதமான ஒரு சமுதாய நீதி இயக்கமாக பாரதத்துக்கு உள்ளும் வெளியும் இந்து தருமம் உருவெடுக்க வேணும்.
பொங்கல் வாழ்த்துக்கள்
நல்லது என்றுமே உலகில் உள்ள அனைவர்க்கும் நல்லதாக இருக்கவேண்டும்.எனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்கிறேன்.ஒரு அமெரிக்கர் விமானத்திலே தமிழ் பாடப்புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.நான் கேட்டேன் என்ன தமிழ் படிக்கிறீர்களே என்று.அவர் சேலத்திலே சில மாதங்கள் வேலை செய்தாராம்.உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்றேன்.மிகவும் அருமையாக இருந்தது.ஒரு அனுபவம்.இன்னும் படித்தவர்கள்கூட மாறாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.என்ன என்றேன்.ஒருவர் நன்கு படித்தவர் நீண்ட நேரம் நன்றாகப் பெசிக்கொண்டிருந்தார்.கடைசியில் அவர் அணிந்திருந்த பூணூலைக் காண்பித்து அவர் ஆண்டவனின் முகத்திலிருந்து பிற்ந்தவர் உயர்ந்தவர் என்று நான்கு பிற்ப்புக்களைப் பற்றிச் சொன்னார்,முகம் மார்பு,தொடை பாதம் என்று சொல்லி அவ்ரைப் பற்றிப் பெருமையாகச் சொன்னதும் நான் சிரித்துக் கொண்டே கேட்டேன்,அப்போது நான் எங்கேயிருந்து பிற்ந்தேன் என்று.
தமிழன்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
வெகுகாலம் முன்பு படித்ததை சொல்கிறேன். எங்கே என்று ஞாபகமில்லை.
இறைவன் முகத்திலிருந்து பிறந்தது காலில் இருந்து பிறந்தது என்று ஒன்றும் கிடையாது. தவறான மொழிபெயர்ப்பு. வழக்கம்போல வெள்ளைக்காரர்களின் திருகுத்தனமான மொழிபெயர்ப்பு.
இந்த சமுதாயம் ஒரு மஹாபுருஷனைப்போல இருக்கிறது. அதின் பிராம்மணர்கள் தலை போல இருக்கிறார்கள். அதன் தோள்கள் போல சத்திரியர்கள் இருக்கிறார்கள். அதன் கைகள் கால்கள் போல சூத்திரர்கள் இருக்கிறார்கள். அதன் நெஞ்சு வயிறு போல வைஸியர்கள் இருக்கிறார்கள். என்பதுதான் நான் படித்தது. பிறப்பால் பிராம்மணன் என்பதெல்லாம் வேதங்களிலோ உபநிடதங்களிலோ கிடையாது. ஜாபால் சத்தியகாமர் என்று ஒரு உபநிடதத்தில் வரும் ரிஷிக்கு அப்பா பெயர் தெரியாது. அவரது தாயார் ஒரு வேலைக்காரர்.
எல்லா சமுதாயங்களிலும் மூளைபோல பல்கலைக்கழகத்து பேராசிரியர்களும் , போர் வீரர்களும், வியாபாரிகளும் அந்த சமுதாயத்துக்கு வேலைக்காரர்களாக (நான் உட்பட) எல்லோரும் இருக்கிறோம். இதில் உயர்வு தாழ்வு என்று ஏதும் இல்லை.
பிரிட்டிஷ் காரர்களின் ஆரிய திராவிட பிரச்சாரத்தை நம்பி தன்னையும் வெள்ளைக்காரன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் சில பிராம்மணர்களையும் எனக்கு தெரியும். என்ன செய்வது பிரச்சாரத்தின் வலிமை அது..
ஆப்ரிக்காவில் யாரும் வேண்டாமா ?
உண்மையில் நாம் எல்லோரும் சொந்தக்காரர்கள்தான். ஆப்பிரிக்கர்களும், வெள்ளைக்காரர்களும், மங்கோலியர்களும், சீனர்களும், ஆஸ்திரேலிய பழங்குடிகளும் எல்லோருமே சொந்தக்காரர்கள்தான்.
அதனைத்தான் இந்துமதம் வசுதைய்வ குடும்பகம் என்று கூறுகிறது.
////உண்மையில் நாம் எல்லோரும் சொந்தக்காரர்கள்தான். ஆப்பிரிக்கர்களும், வெள்ளைக்காரர்களும், மங்கோலியர்களும், சீனர்களும், ஆஸ்திரேலிய பழங்குடிகளும் எல்லோருமே சொந்தக்காரர்கள்தான்.
அதனைத்தான் இந்துமதம் வசுதைய்வ குடும்பகம் என்று கூறுகிறது.///
அருமையான் ஜல்லி...ரசித்தேன்...
இதனை ஜல்லி என்று நீங்கள் ரசிப்பதை நானும் ரசித்தேன்...
கல்லினுள் சிறுதேரையும் நம் சொந்தக்காரர்தான்... என்ன கொஞ்சம் தூரத்து சொந்தம் அவ்வளவுதான்..
:-))
நானும் இந்த விளக்கத்தை படித்திருக்கிறேன். சின்மயானந்தா என்று நினைவு..
/இந்த சமுதாயம் ஒரு மஹாபுருஷனைப்போல இருக்கிறது. அதின் பிராம்மணர்கள் தலை போல இருக்கிறார்கள். அதன் தோள்கள் போல சத்திரியர்கள் இருக்கிறார்கள். அதன் கைகள் கால்கள் போல சூத்திரர்கள் இருக்கிறார்கள். அதன் நெஞ்சு வயிறு போல வைஸியர்கள் இருக்கிறார்கள். என்பதுதான் நான் படித்தது. பிறப்பால் பிராம்மணன் என்பதெல்லாம் வேதங்களிலோ உபநிடதங்களிலோ கிடையாது. ஜாபால் சத்தியகாமர் என்று ஒரு உபநிடதத்தில் வரும் ரிஷிக்கு அப்பா பெயர் தெரியாது. அவரது தாயார் ஒரு வேலைக்காரர்.
எல்லா சமுதாயங்களிலும் மூளைபோல பல்கலைக்கழகத்து பேராசிரியர்களும் , போர் வீரர்களும், வியாபாரிகளும் அந்த சமுதாயத்துக்கு வேலைக்காரர்களாக (நான் உட்பட) எல்லோரும் இருக்கிறோம். இதில் உயர்வு தாழ்வு என்று ஏதும் இல்லை.//
நன்றி
//இந்த சமுதாயம் ஒரு மஹாபுருஷனைப்போல இருக்கிறது. அதின் பிராம்மணர்கள் தலை போல இருக்கிறார்கள். அதன் தோள்கள் போல சத்திரியர்கள் இருக்கிறார்கள். அதன் கைகள் கால்கள் போல சூத்திரர்கள் இருக்கிறார்கள். அதன் நெஞ்சு வயிறு போல வைஸியர்கள் இருக்கிறார்கள். என்பதுதான் நான் படித்தது. பிறப்பால் பிராம்மணன் என்பதெல்லாம் வேதங்களிலோ உபநிடதங்களிலோ கிடையாது. ஜாபால் சத்தியகாமர் என்று ஒரு உபநிடதத்தில் வரும் ரிஷிக்கு அப்பா பெயர் தெரியாது. அவரது தாயார் ஒரு வேலைக்காரர்.//
சுவாமி பிரபுபாதாவும் இதே விளக்கத்தினைத்தான் தருகின்றார்.
நன்றி அனானி, நன்றி நல்லவன்.
இங்கே சகோதரர் நீலகண்டன் எழுதியதை எழில் என்ற பெயரில் யாரோ சகோத்ரர் விடாது கருப்பு பதிவில் எழுதியிருக்கிறார்கள்.
எங்கிருந்தாலும் வாழ்க!
Post a Comment